Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
தர்ம சாஸ்த்ரம்

NVS Parents  வர்ணாச்ரம தர்மகாண்டம் வைத்யநாத தீக்ஷிதீய - ஸ்ம்ருதிமுக்தாபலத்தில் ச்ராத்த காண்டம் - முதல் பாகம்.
குறிப்பு: மிக மிக அரிதான இந்த க்ரந்தம் அடியேனுக்குக் கிடைத்துள்ளது! பெற்றோரின்பால் அதிக பற்றுதல் உள்ள ஆன்மீகவாதிகளுக்கான பொக்கிஷம். விஷயத்தை அறிந்து வைத்திருந்தால் முடிந்ததைக் கடைப்பிடிக்கலாம். குறைந்தபக்ஷம் செய்யக் கூடாதவற்றையாவது தவிர்க்கலாம். என்னைப் பெற்ற தெய்வங்களான, தெய்வமாகிவிட்ட ஸ்ரீ.உப.வே. தீவளூர் வெங்கட்ராகவ ஐயங்கார், திருமதி. சீதாலக்ஷ்மி அம்மங்காருக்கு இந்த என் சிறிய தர்மகாரிய புண்ணியங்களைச் சமர்ப்பிக்கிறேன். அதிகம் முன்னுரை எதுவும் வழங்காது நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இந்த க்ரந்தம் தமிழ் மற்றும் க்ரந்தத்தில் மொத்தம் 140 தலைப்புகளின் கீழ் 978 பக்கங்களைக் கொண்டது. யுனிகோட் தமிழ் பான்டில் உருவாக்கப்பட்டுவருகிறது.
   மற்றும் தர்ம சாஸ்த்ர சுருக்கம் மிக மிக முக்கியமான பகுதிகளைக் கொண்டது எளிமையானது, இங்கு வெளியிடப்பட்டுள்ளது இங்கேயே பார்வையிடலாம். தேவையானால் சேமித்துக்கொள்ளலாம்.


Download: வர்ணாச்ரம காண்டம் pdf
"ஆசௌச காண்டம் (தீட்டு விஷயம்)

"தர்மசாஸ்த்ர சுருக்கம் - ஆஹ்நிக (கர்ம) காண்டம்"

ஶ்ரராத்தத்தில் உபயோகப்படுத்தக்கூடிய வஸ்துக்கள்

உளுந்து, கருப்பு எள், சம்பர்நெல், கோதுமை, பயறு, கடுகு, கருப்பில்லாத பாகல் (3 விதம்), பில்வம், நெல்லி, திறாiக்ஷ, பலா(2 விதம்), மா, மாதுளை, கடுக்காய், குங்குமப்பூ, கருவேப்பிலை, எலுமிச்சை, வாழை (5 விதம்), இலந்தை, தேங்காய், திப்பிலி, மிளகு, புடலங்காய், முள்கத்திரி, சுக்கு, தேன், நெய், சர்க்கரை (வெல்ல சர்க்கரை), காயம், பச்சைகற்பூரம், வெல்லம், கடலுப்பு, வெள்ளரி, பசுவின்பால், அவல், எருமைப்பால் (மத்யமம்), ஜீரகம், சிகப்புக்கொடியுள்ள கூச்மாண்டம் (பூசணிக்காய்), கரணைக்கிழங்கு(2விதம்), சேபபங்கிழங்கு, கடலை, ஏலம், வெள்ளைப்புஷ்பங்கள், தாமரை,ஜாதிபுஷ்பம், சம்பகம் மல்லிகை, துளசி, தாழம்பூ, மரு இவைகள் ச்ராத்தயோக்மானதுகள். வரகு, காராமணி, கொள்ளு, கடலை, கருப்புப்பாகல் காய், பெருங்காயம், துவரை, முருங்கை, பூஷணி, சுரைக்காய், எருமைப்பால், மாதுளை, விளா, காச்சு உப்பு, ஒற்றைக்குளம்புள்ள ம்ருகத்தின் பால், எலுமிச்சை, புடலங்காய், மிளகாய், மோர், மந்தாரை இவைகள் ச்ராத்தத்திற்கு யோக்யமல்லாதவைகள். விதி நிஷேதம் இரண்டிலும் சொல்லப்பட்டவைகளைச் சேர்த்தாலும் சேர்க்கலாம். தள்ளினாலும் தள்ளலாம். போஜனப்ரகரணத்தில் நிஷித்தமான வஸ்துக்களை ச்ராத்தத்தில் சேர்க்கக்கூடாது.

"ஶ்ராத்தகாண்டம் சில முக்கிய தகவல்கள்"

Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!