Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
Skip Navigation Links.
Collapse முகப்புமுகப்பு
உறுப்பினர்-ஸேவை
திருமணப்பதிவு
வைதீக-முகப்பு
Collapse வைதீகம் பூர்வம்வைதீகம் பூர்வம்
ஸேவைகள்
ஸ்தோத்திரங்கள்
உபாகர்மா
உபயோகமானவை
வைணவம்
வேதம்
ஸ்ரீ:

நாந்தி ச்ராத்தம்

விளக்கம் மற்றும் பொது விதி:

தகப்பனார் - பிள்ளை, சகோதரர்கள் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்களை வரிக்கக்கூடாது என்பது பெரியோர்கள் அபிப்பிராயம். விவாஹம் முதலிய தீக்ஷையுள்ளவர்கள், முதல்நாள் ப்ராம்ஹணார்த்தம் சாப்பிட்டவர்கள். அன்று சாப்பிடப் போகிறவர்கள், மற்றும் சாஸ்திரத்தில் விலக்கப்பட்டவர்களையும் வரிப்பது உசிதமில்லை. மாதாமகர் (அம்மாவைப் பெற்றவர்) இருந்தால் அந்த வர்க்கம் வரணம் 2 பேரை நீக்கிவிடவேணும். பிதா, மாதா முதலானவர்கள் இருந்தால் ❝ஜனகஸ்ய" என்பதைச் சேர்த்தும், ஊகித்தும் சொல்ல வேணும். உபநயநத்தில் தகப்பனார் இல்லாமல் மற்றவர் உபநயனம் செய்தால், உபநயனம் செய்யும் பையன் பித்ராதிகளுக்கும், விரதஸமாவர்த்தனத்தில், தகப்பனார் இல்லாமல் வேறு ஆசார்ய விஷயத்தில் ஆசாரியனுடைய பித்ராதிகளுக்கும், ஸீமந்தத்தில் பர்த்தா இல்லாமல் வேறு மனுஷ்யாள் செய்யும்படி நேர்ந்தால் ஸ்திரீயின் பர்த்தாவின் பித்ராதிகளுக்கும் நாந்தி செய்யவேணும் என்று பெரியோர்கள் ஸம்பிரதாயம்.

காரிகை

ஸ்ரீ பகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபம் (ஸ்ரீபகவதாக்ஞா கைங்கர்ய ரூபம், ஸ்ரீபகவதாக்ஞா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்;தம்) அவர் அவர்கள் ஆசரணைப்படி சொல்லிக் கொண்டு நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய மம குமாரஸ்ய க்ருத ஜாதகர்ம, கரிஷ்யமாணாணாம் நாமகரண, அன்னப்ராசன, சௌள, உபநயன கர்மாங்கபூதம் அப்யுதயம்
(அல்லது கர்பாதானமானால் - கோத்ராயா: நாம்நியா: (பாரத்;வாஜ கோத்ராயா: லெக்ஷ;மி நாம்நியா:) (கணவராயிருந்தால் ❝மம தர்மபத்னியா: " என்றும் பிறர் ஆயின் ❝அஸ்யா:" என்றும்) சொல்லி (மற்ற அந்த அந்த கர்மாங்கம் கர்ப்பதான கர்மாங்கம் அப்யுதயம்)
ஹிரண்ய ரூபேண கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்ய வேண்டியது.
அஸ்மின் அப்யுதயே ஸத்யவசு ஸம்கிகானாம் விஸ்வேஷாம் தேவானாம் இதம் ஆஸனம் என்று இரண்டு தர்ப்பங்களை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் உட்காரும் இடத்தில் சேர்க்கவும். இமே கந்தா: என்று சந்தனம் ப10சிக்கச் செய்து, பிறகு சகலாராதனை: சோபனம் என்று சோபனாக்ஷதையை அவர் மேல் சேர்க்கவும். இதுபோல் விஸ்வேதேவருக்காக 2 ப்ராஹ்மணர், ப்ரபிதாமஹி, பிதாமஹி மாத்ரூணாம் (தாயார் ஜீவித்திருந்தால் ❝ஜனகஸ்ய" என்று சேர்த்துக்கொள்ளவும்) என்று 2 பேர், ப்ரபிதாஹ பிதாமஹ பித்ரூணாம் (தகப்பனார் ஜீவித்திருந்தால் ❝ஜனகஸ்ய" என்று சேர்த்துக்கொள்ளவும்) என்று 2 பேர், ஸபத்னீக மாது: ப்ரபிதாமஹ பிதாமஹ பித்ரூணாம் என்று 2பேர், நாந்தி ஸம்ரக்ஷக ஸ்ரீ மஹா விஷ்ணோ: என்று ஒருவர் ஆக ஒன்பது பேருக்கும், ஒவ்வொருவருக்கும் இதம் தே ஆஸனம், இமே கந்தா: சகலாராதனை: சோபனம்; தர்பங்கள் சேர்த்தல், சந்தனம் அளித்தல், அக்ஷதை சேர்த்தல் இவற்றைச் செய்து ஒவ்வொருவரையும் வரிக்க வேண்டியது. மகாவிஷ்ணு உள்பட 9 பேரையும் வரிக்கும் போது ஒவ்வொருவருக்கும் ❝கோத்ராய: முதல் துடங்கி அப்யுதயே" என்கிற வரையில் சொல்லவேணும்.
தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு ஒன்பது பேருக்கும் தக்ஷிணை (வேஷ்டியும், இருந்தால் அதுவும்) பழம், சோபனாக்ஷதை புஷ்பம் இவைகளை எடுத்துக் கொண்டு, ஹிரண்ய கர்;ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேம பீஜம், விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயச்சமே (பத்னியைக் கொண்டு தீர்த்தம் ப்ரோக்ஷிக்கச்செய்து) நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய மம குமாரஸ்ய க்ருத ஜாதகர்ம, கரிஷ்யமாணாணாம் நாமகரண, அன்னப்ராசன, சௌள, உபநயன கர்மாங்கபூதம் அப்யுதய ப்ரத்யாம்நாயம் யத்ககோத்ராயா: நாம்நியா: (மம) தர்மபத்நியா: கர்ப்பாதான கர்மாங்கபூதே அஸ்மின் அப்யுதயே ஸத்யவஸு ஸம்கிகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்ய: ஸத்யவஸு ஸம்கிகேப்ய: விஸ்வே ப்யோ தேவேப்ய: நாந்திமுகேப்ய: ப்ரபிதாமஹி பிதாமஹி மாதுர்ப்ய: ப்ரபிதாமஹி பிதாமஹீ மாதுர்ட்ய: நாந்திமுகாப்ய: ப்ரபிதாமஹ பிதாமஹா பிதுர்ப்ய: ப்ரபிதாமஹ பிதாமஹ பிதுர்ப்ய: நாந்தி முகேப்ய: ஸபத்நீக மாது: ப்ரபிதாமஹ மாது: பிதாமஹ மாதாமஹேப்ய: ஸபத்நீக மாது: ப்ரபிதா மஹா மாது: பிதாமஹா மாதாமஹேப்ய: நாந்திமுகாப்ய: நாந்தி ஸம்ரக்ஷக ஸ்ரீமஹாவிஷ்ணவேச இதம் இதம் ஆக்னேய ஹிரண்யம் நாந்தி சோபந தேவதா ப்ரீதிம் காமயமான: நாநாகோத்ரேப்ய: ஸ்ரீ வைஷ்ணவேப்ய: தேப்ய: தேப்ய: ஸம்ப்ரததே நம: நமம அச்சுத: ப்ரியதாம் என்று பணத்தையும் (தக்ஷிணையை) தீர்த்தத்தையும் ப10மியில் சேர்க்கவும். பிறகு பணத்தைத் தொட்டுக் கொண்டு பின்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.
இயம்ச வ்ருத்தி: இடா தேவஹ_: மனுர்யக்ஞநீ: ப்ருஹஸ்பதி: உக்தாமதாநி ஸகும்சிஷத் விச்வேதேவா: ஸூக்தவாச: ப்ருதிவீமாத: மாமாஹிகும்ஸீ: மதுமநுஷ்யே மதுஜனிஷ்யே மதுவக்ஷ;யாமி மதுவதிஷ்யாமி மது மதீம் தேவேப்ய: வாசமுத்யாஸம் சுச்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம்மா தேவா: அவந்து ஸோபாயை பிதரோநுமதந்து இடயேஹி அதிதயேஹி ஸரஸ்வத்யேஹி சோபநம் சோபநம் என்று சொல்லி வெற்றிலை பாக்கு தக்ஷிணை, வேஷ்டி இவைகளை விஸ்வேதேவர் முதல் ஸ்ரீமகா விஷ்ணு வரை ஆக ஒன்பது பேர்களுக்கு வரித்த வரிசை பிரகாரம் கொடுக்கவும். ப்ராணாயாமம் செய்து ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் தத் அங்கம் புண்யாகவாசனம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொண்டு புண்யாகவாசனம் செய்யவும். இதில் அப்யுதய கர்மணே புண்யாகம் பவந்தோ ப்ருவந்து என்றும், அப்யுத கர்மணே ஸ்வஸ்தி ப்ரூவ்நது என்றும் 3 தடவை சொல்லி அப்யுத கர்மணே ஸ்வஸ்தி என்று ப்ரதிவசனம் பெரியோர்கள் சொல்லவேணும். அப்யுத கர்மணே ரித்திம் பவந்தோ ப்ருவந்து என்று மூன்று தரம் சொல்லி, ரித்தி: என்று பெரியோர்கள் சொல்ல வேண்டியது. மற்றவை புண்யாகவாசனம் போல் செய்து, ஜபம் செய்து மேற்படி கும்ப ஜலத்தால் தம்பதிகளை ப்ரோக்ஷிக்கவேணும். ப்ரோக்ஷண மந்த்ரம் - த்ருபதா திவேந் முழுசாந: ஸ்வின்ன ஸ்நாத்வி மலாதிவா ப10தம் பவித்ரணேவாஜ்யம் ஆபச்சுந்தந்து மைநஸ: ப10ர்புவஸ்ஸுவோ ப10ர்புவஸ்ஸுவ: என்று ப்ரோக்ஷிக்கவேணும் இது எல்லா புண்யாஹவாசனத்திலும் தம்பதிகளை, குமாரர்கள், குமாரத்திகள், மற்ற த்ரவியங்களையும் ப்ரோக்ஷிக்க வேண்டிய மந்தரம்.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!