தெய்வீக அருள்வாக்கு ஜோதிடம்
ஜோதிடம் என்பது விஜ்ஞான ரீதியானதே!
ஆனால் வெறும் விஜ்ஞான அறிவை மட்டும் கொண்டு சரியான பலன்களை கூறிவிட இயலாது என்பதே அநுபவ ரீதியான உண்மை.
கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை என அடிப்படையான வண்ணங்கள் நான்குதான். ஆனால் அவற்றின் கலவையால் எண்ணற்ற வண்ணக் கலவைகள் உண்டாகின்றன.
அடிப்படை ஸ்வரங்கள் ஏழுதான், அவற்றைக்கொண்டு எண்ணற்ற ராகங்களும், ராகங்களின் கலவையால் எண்ணற்ற பாடல்களும் உருவாகின்றன.
அதுபோல் ஜோதிடவியலில் 12 லக்னங்கள், 9 க்ரஹங்கள் இவை 360 பாகைகளில் மாறி மாறி அமைவதைக்கொண்டு கூறப்படும் பலன்கள், வண்ணம்,
மற்றும் ராக ஸ்வரங்கள் இவற்றைக் காட்டிலும் பல கோடி மடங்கு வேறு வேறு அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. இதனால் கோடிக்கணக்கான
வாய்ப்புகளைக் கொண்ட பலன் விதிகளை மனனம் செய்து அவற்றை அநுபவத்தில் கொண்டு வருவது என்பது யாருக்கும் சாத்தியமில்லை. இவ்விதிகளை
வகுத்து எழுதிய பழங்கால ஜோதிட ஜாம்பவான்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் மலிந்திருக்கின்றன. எனவே, ஒருவரின் பிறந்த நேரம், பிறந்த தேதி,
பிறந்த ஊர் ஆகிய தகவல்களைக் கொண்டு கணிணி மூலம் சரியான ஜாதத்தைக் கணிக்க முடிந்த வல்லுனர்களாலும், மேற்படி கோடிக்கணக்கான
பெர்முடேஷன் காம்பினேஷனுக்கு வாய்ப்புள்ள பலன்களை கணிணியில் பதிந்து, சரியானதை தேர்ந்தெடுத்துத் தருவதில் இன்னும் யாரும் 100 சதவீதம் வெற்றிபெறவில்லை.
எனவே, ஜாதகத்தை ஒரு அனுபவம் மிக்க, தெய்வீக அருள் பெற்ற ஜோதிடரால் மட்டுமே ஓரளவு சரியான பலன்களைக் கூறமுடியும் என்பதே சத்தியம்!
இந்தப் பகுதியில் மேலும் விளக்கம் அளிக்கப்படவுள்ள தலைப்புகள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.
நேரம் கிடைக்கும்போது சிறிது சிறிதாக விளக்கங்கள் அளித்து இப்பகுதி மேம்படுத்தப்படும். எனவே
அடிக்கடி இந்த பகுதியை பார்வையிடவும். மேலும் கேள்வி பதில் பகுதியில் இங்கே வழங்கப்பட்டுள்ள
அல்லது வழங்கப்படவுள்ள தலைப்புகள் பற்றி மேலும் விளக்கங்களைக் கேட்டு எழுதினால் விளக்கம் அளிக்கப்படும்.
அது தவிர தங்கள் சொந்த ப்ரச்சினை குறித்து கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கப்படமாட்டாது.
அக்நிநாள், அஷ்டவர்கம், அஷ்டமராசி கூறு, அதிநீசம், அதியுச்சம், அந்தரம் பிரிக்க, அந்தராந்தரம் பிரிக்க, அபிசித் நக்ஷத்திரம், அமிர்தகடிகை,
அமிர்தாதியோகம், அம்மானுக்கு அரிஷ்டநாள், அயனம், அரைஞாண் பூட்ட, அர்தோதயம், அவமாகம், அன்னப்ராசனம் பண்ண....
ஆகாத மாதம், ஆட்சி உச்ச சக்ரம், ஆபரணம் பூண, ஆவணி மூலம், ஆரூடம்
இராசிகள் சம்பந்தமானவை ...., இருதுக்கள், இலக்கின த்யாஜ்யம், இலக்கின ஸ்புடம்
உக்ரநாள், உடலற்ற நாள், உதயகால மணி அறிய, உபநயனம், உழவு செய்ய
ஏகாதிபத்யம், ஏகாதிபத்ய ஸோதனை,
கசரயோகம், கணப்பொருத்தம், கதிரறுக்க, கரிநாள், கர்தாரியோகம், கர்பச்சடங்கு, கர்போட்டம், கலிதினம் கணிக்க, காதுகுத்தல், காரகர்கள், காளகூடயோகம்,
கிணறுவிழுமிடமறிய, கிரகங்கள் பற்றி, கிரகப்ரவேசம், கிழமை பிறந்தநாள், கீழ்நோக்குநாள், குருபற்றி, கூடாநாள், கூட்டாளி பொருத்தம், கோடியுடுக்க,
கோச்சாரம், கெளரிபஞ்சாங்கம்
சகடயோகம், சகுனம், சங்கல்ப மாதம். சந்திரபலன், சந்திரன் பற்றி, சமநோக்கு நாள், சரநாள், சனி பற்றி, சலநாள், ஜன்ம அநுஜன்மம் பற்றி,
சாதகப்பொருத்தம், சிசு மரணமறிய, சீமந்தம், சுக்ரன்..., சுபயோகம், சூரியன்..., செவ்வாய்..., ஜென்ம நக்ஷத்திரம்....
தலையற்ற நாள், தனிஷ்டாபஞ்சமி, தாய்சிசு மரணமறிய, தசை புக்தி...., திதி பற்றி, த்ரேக்காணம், தினபலன், தேய்பிறை...
நட்சத்திரம் பற்றி, நவக்ரஹங்கள் பற்றி, நாமகரணம், நாம நட்சத்திரங்கள், நிஷேகம், நீசபங்க ராஜயோகம்
பஞ்சகம், பஞ்சாங்கம், பக்ஷம், பல்லி விழும் பலன், பார்வைக்கேந்திரம், பால அரிஷ்டம், ப்ரதிஷ்டைபண்ண, புதன் பற்றி, பூமிசுக்ரன்,
மகோதயம், மருந்துண்ண, மலமாதம், மனைகோல, மாதசூனியம், மாரகஸ்தானம், முஹூர்த்தம்..., மூலத்திரிகோணம், மூன்றாம்பிறை, மேல்நோக்குநாள்,
யமகண்டம், யாத்திரை, யோகினி, ருது..., வளர்பிறை, வாகனமேற, வாசற்படி வைக்க, வாரசூலம், வாரத்யாஜ்யம், வானவிற்குறி, வாஸ்து, விஷசூன்யம், விஷ்டி