திருவைகுந்த விண்ணகரம்
- மூலவர் : வைகுந்த நாதன், தாமரைக்கண்ணுடையபிரான்,
உபய நாச்சிமார்களும் வீற்றிருக்கின்றனர். கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் : உத்ஸவர்களும் அதே கோலத்தில் உள்ளனர்.
- தாயார் : வைகுந்தவல்லி (தனிக்கோயில் நாச்சியார்
இல்லை).
- தீர்த்தம் : லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கரிணி,
விரஜா தீர்த்தம்.
- விமானம் : அனந்தஸத்யவர்த்தக விமானம்,
- ப்ரத்யக்ஷம் : உபரிசரவசு, உதங்க மஹரிஷி.
திருவைகுந்த விண்ணகரம், திருநாங்கூருக்கு வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இதை
வைகுந்தநாதர் கோயில் என்று அழைப்பர். மூலவர் வைகுந்த நாதன், தாமரைக்கண்ணுடைய பிரான்
வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் வைகுந்தவல்லி. பகவான்
வைகுந்தத்தில், வீற்றிருந்த கோலத்தோடு இருப்பது போல இங்கும் இருப்பதால் இந்த ஸ்தலம்
திருவiகுந்த விண்ணகரம் எனப் பெயர் பெற்றது. சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தப் பரமபத
நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றிப் பத்துப் பெருமாள்களும் இவ்விடத்துக்கு (திருநாங்கூர்)
வந்தனர். பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய சூரிகட்குக் காட்சி கொடுக்கிறானோ
அதே போல் இங்கும் எழுந்தருளியுள்ளான். பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம். பரமபதத்தில் உள்ள
விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது. இப்பெருமானும் திருநாங்கூரில் தை அமாவாசை
மறு நாள் நடைபெறும் கருட சேவைக்கு எழுந்தருளுவார். திருமங்கை ஆழ்வார் „நெஞ்சே‚ நீ நாங்கூர்
வைகுந்த விண்ணகரை வணங்கு என்று கூறுகிறார்.
பெண் என்றால் பேயும் இரங்கும். அந்தப் பேயே பெண்மை வடிவங் கொண்டு எம் கண்ணனை அழிக்க
வந்தது. அவனது உயிரினை எம் கண்ணன் உண்டான். திண்மை மிகுந்த மருதொடு, சகடாசுரன் எனும்
சகடாசுரன் எனும் அரக்கனை எம் தேவன் அழித்தான். இவ்வளவு நற்குணங்களுடன் இருக்கும் எம்இறைவன்
இனிது உறையும் கோயில் இக்கோயிலே ஆகும். இங்கே உண்மை மிகு நல்ல கலைகள், நிறை பொறைகள்,
வண்மை மிகு மறையவர்கள் மலிந்திருக்கிறார்கள். மறையவர்கள் சூழத் திருநாங்கூரில் இருக்கின்ற
வைகுந்த விண்ணகரப் பெருமாளை வணங்கு நெஞ்சே என ஆழ்வார் தம் பாசுரத்தில் தெரிவித்திருக்கிறார்.
எனவே தீமையிலிருந்து நம்மைக் காக்க இந்த வைகுண்ட நாதனை வணங்குவோம் என இந்தப் பாசுரத்தில்
கூறுகிறார்.
"பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப்
பெரிய பேயினது உருவு கொடுமாள, உயிர் உண்டு, திண்மை மிகு
மருதொடு நல் சகடம் இறுத்தருளும்
தேவன் - அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - உண்மை மிகு
மறையொடு நல் கலைகள்,
நிறை பொறைகள், உதவு கொடை என்று இவற்றின்
ஒழிவு இல்லாப் பெரிய வண்மை மிகு மறையவர்கள்
மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்த விண்ணகரம் -
வணங்கு மடநெஞ்சே"
- மங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார்: 1228 -37 -
- 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.