திரு அரிமேய விண்ணகரம்
- மூலவர் : குடமாடுகூத்தன்
(தைலக்காப்புத் திருமேனி),வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் : சதுர்புஜங்களுடன் கோபாலன்.
- தாயார் : அம்ருதகடவல்லி.
- தீர்த்தம் : கோடிதீர்த்தம், அம்ருத தீர்த்தம்.
- விமானம் : உச்சச்ருங்க விமானம்.
- ப்ரத்யக்ஷம் : உதங்க மஹரிஷி.
திரு அரிமேயவிண்ணகரம், திருநாங்கூருக்குத் தென் பகுதியில் அமைந்திருக்கிறது. இக்கோயிலைக்
குடமாடு கூத்தன் கோயில் என்று கூறுவர். மூலவர் குடமாடு கூத்தன் (தைலக்காப்புத் திருமேனி)
வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அம்;ருதகடவல்லி.
உற்சவர் சதுர்புஜ கோபாலன், நான்கு கைகளுடன் எழுந்தருளியுள்ளார். குடமாடு கூத்தர் என்பது
இப்பெருமானின் திருநாமம். குடங்கள் எடுத்து ஆடினானா அல்லது குடைகொண்டு ஆடினானா என்றொரு
மயக்கு இந்தக் ‘குடக்கூத்து” என்றாகிறது. திருவில்லிபுத்து}ர் ஆண்டாளோ குன்றம் குடையாய்
எடுத்தாய்க் குணம் போற்றி என்று குன்றத்தைக் குடை பிடித்ததாகக் கூறுகிறார். இத்தலத்தில்
குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளியிருக்கிறார். குன்றத்தைக்
குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம். பகைவனுக்கு அருளும் பண்பினனாக இங்கு எழுந்தருளியுள்ளான். குடங்கள் எடுத்து ஆடுபவன் என்று குடையாகக் குன்றத்தை எடுத்துக் கோபாலர்களையும், ஆவினங்களையும்,
காத்தருளின கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளியுள்ள 11 பெருமான்களுள் ஒருவராக இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப் பட்டுள்ளதாகக்
கொள்ளலாம். திருநாங்கூர் கருடசேவையில் குடமாடு கூத்தனும் கலந்து கொள்வார். திருமங்கை ஆழ்வார் குடமாடு கூத்தனை சரண் அடையுங்கள், இந்த அழகு புரியும் நகரைச் சேவியுங்கள் என்றும்
தயிர் உண்டவனைப் பற்றி நினைவில் கொள்ளுங்கள், உயிர் உண்டவனைப் பற்றி வஞ்சனையாளர்கள்
நினைத்து அஞ்சட்டும் என்று இந்தப் பாசுரத்தில் பாடியுள்ளார்.
வஞ்சனையால் வந்தவள் - தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு, வெண்ணெய் அமுது உண்டுஈ வலிமிக்க கஞ்சன் உயிர் - அது உண்டு , இவ்வுலகு உண்டகாளை கருதும்
இடம் - காவிரி சந்து, அகில், கனகம் - உந்தி மஞ்சு உலவு பொழிலு}டும் வயலு}டும் வந்து
வளம் கொடுப்ப, மா மறையோர் மாமலர்கள் து}வி அஞ்சலித்து, அங்கு அரி சரண் என்று இறைஞ்சும்
அணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் - வணங்கு மட நெஞ்சே
- மங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார்: 1238 - 1247-
- 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.