திருத்தேவனார்தொகை
- மூலவர் : தெய்வநாயகன்,
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் : மாதவப் பெருமாள்
- தாயார் : கடல்மகள் நாச்சியார்,
உத்ஸவர்: மாதவநாயகி
- தீர்த்தம் : சோபன புஷ்கரிணி, தேவஸபா
புஷ்கரிணி
- விமானம் : சோபன விமானம்,
- ப்ரத்யக்ஷம் : வஸிஷ்டர். .
- திருத்தேவனார் தொகை, திருநாங்கூர்க் கீழச்சாலை என்றும்
வழங்கப்படுகிறது.
- திருநாங்கூரிலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் மண்ணியாற்றின்
தென்கரையில் உள்ளது.
- மூலவர் தெய்வநாயகன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் கடல்மகள் நாச்சியார்.
- உற்சவர் மாதவப் பெருமாள்.
- தாயார் மாதவநாயகி.
- ஸ்ரீமந் நாராயணன் திருநாங்கூருக்கு வந்தபோது பிரம்மன்
முதலிய தேவர்கள் அவன் அழகில் சொக்கி, அவனை சூழ்ந்து நிற்கின்றார்கள்.
- அனைவருக்கும் பலனைக் கொடுக்கும் தேவதையாக (பலப்ரதனாக)
பெருமாள் காட்சி அளிக்கிறார்.
- இதனால் இத்திருத்தலம் தேவனார்த் தொகை என அழைக்கப்படுகிறது.
- திருநாங்கூருக்கு எழுந்தருளியுள்ள 11 எம்பெருமான்களில்
இவர் திருவிடவெந்தை எம்பெருமான் எனப் பெயர் பெற்றார்.
- உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப் பெருமாள் கோயில் என்றே
இத்தலம் அழைக்கப்படுகிறது.
- இத்தலத்து மூலவர் திருநாமம் 108 திவ்ய தேசத்தில் நடுநாட்டுத்
திருப்பதியான திருவஹிந்திரபுரத்துக்கும், பாண்டி நாட்டுத் திருப்பதியான வானமாமலைக்கும்
உண்டு.
- இதனால் இத்தலம் உற்சவரின் திருநாமத்திலேயே பெயர் பெறுகின்றது.
- வசிட்டர் இத்தலத்துப் பெருமாளைக் குறித்துத் தவமிருந்து
பெருமாள் காட்சி தந்ததாக ஐதீகம்.
- இந்தப் பெருமாளும் தைமாசத்தில் அடுத்த நாள் திருநாங்கூரில்
நடைபெறும் கருட சேவைக்கு எழுந்தருளுவார்.
- இத்திருத்தலம் திருமங்கை ஆழ்வார் தன் தீஞ்சுவைப் பாசுரங்களில்
மங்களாசாசனம் செய்யப் பெற்றது.
- இத்தலம் தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழப்பட்ட இடம் என்கிறார்.
தேன் சிந்தும் மலர்ப் பொழில் மட்டும் இங்கு இல்லை, அருட்தேன் சிந்தும் மாதவனும் இங்கு
இருந்து அருளுகிறான் என்கிறார்.
- இதை உணர்ந்து, ஆனாத பெருஞ்செல்வத்து அருமறையோர், அங்கு தங்கியதாகக் கூறுகிறார்.
- அந்த மறையோர் தங்கியிருக்கும் இடத்தில் பெருமாளும் இருக்கின்றான்.
அவன் விரும்பி இருக்கும் இடம் இதுவே எனக் கூறுகிறார்.
- இவ்வளவு சிறப்புப்பெற்ற இத்திருத்தேவனார் தொகை சென்று
தெய்வநாயகனைச் சேவித்தலே சிறப்பாகும்.
- "வான் நாடும், மண் நாடும், மற்றுஉள்ள பல்உயிரும் தான் ஆய எம்பெருமான், தலைவன் அமர்ந்து
உறையும் இடம் - ஆனாதபெருஞ் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள் தேன் ஆரும் மலர்ப்பொழில்
சூழ் - திருத்தேவனார் தொகையே"
- மங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார் : 1248 - 57 - 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.