திருவண்புருடோத்தமம்
- மூலவர் : புருஷோத்தமன்,
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார் : புருஷோத்தம நாயகி,
- தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம்.
- விமானம் : ஸஞ்ஜீவிவிக்ரஹ விமானம்
- ப்ரத்யக்ஷம் : உபமன்யு.
- திருவண் புருடோத்தமம், திருநாங்கூருக்கு வடக்குப் பகுதியில் உள்ள இத்தலம் புருஷோத்தமன் கோயில் என்று வழங்கப்படுகிறது.
- மூலவர் புருஷோத்தமன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் புருஷோத்தம நாயகி பெருமாளோடு சேர்ந்து அருள் பாலிக்கிறார்.
- உற்சவர் கடலடைத்த பெருமாள் மிக அழகு.
- குழந்தைக்கு வரும் துன்பத்தைத் தாய்தந்தை போக்குவர். அதுபோல்
தம்மிடம் தோன்றிய பிரம்மா முதலிய தேவாதி தேவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்கித்
தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தைக் காக்கும் புருடோத்தமன் இவனே.
- வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட தன் அருளை வாரி
வழங்குதலால் வண்புருடோத்தமன் என்ற பெயர் இந்தப் பெருமாளுக்கு ஏற்பட்டது.
- தமிழ் நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற
பெயரில் பெருமாள் எழுந்தருளியிருப்பது இங்குமட்டும்தான்.
- திருநாங்கூர் பதிகளில் மிக முக்கியமான திவ்ய தேசம் இது.
- அயோத்தி எம்பெருமான் - கடலடைத்த பெருமாள் இங்கு பதினொருவரில்
ஒருவராக எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா. அவனே இத்தலத்தில் எழுந்தருளியுள்ள
புருடோத்தமன் என்று திருமங்கையாழ்வார் கூறுகிறார்.
- தை அமாவாசைக்கு மறுநாளான கருட சேவைக்கு இந்தப் பெருமாளும்
எழுந்தருளுவார்.
- வ்யாக்ர பாதர் என்ற முனிவர் எம்பெருமானுக்கு மாலை கைங்கர்யத்தை
மேற்கொண்டிருந்தார். இக்கோயிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமனயுவை
உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்க சென்றார். குழந்தை பசியால் அழுதது. இத்தலத்தின் தாயார்
புருடோத்தம நாயகி வண்புருடோத்தமனைப் பார்க்க, திருப்பாற்கடலை வரவழைத்துக் குழந்தைக்குப்
பாலைப் புகட்டி உபமன்யுவுக்கும், வ்யாக்ர பாத முனிவருக்கும் இத்தலத்தில் பெருமாள் காட்சி
அளித்து அனுக்கிரகம் செய்ததாக இத்தலத்து வரலாறில் பேசப்படுகிறது.
- திருநாங்கூர் பதிகளிலே, இங்குமட்டுமே மணவாள மாமுனிகளுக்கு
தனிச் சந்நிதி உள்ளது.
- திருமங்கையாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள புருடோத்தமனை,
காளியன் மீது நடனம் செய்து, அதன் செருக்கை அடக்கிய உம்பர்கோன் உறையும் கோயில் என்று
இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.
- "பல்லவம் திகழ் ப10ங்கடம்புஏறி அக்காளியன் பண அரங்கில் ஒல்லை
வந்து உறப்பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் - கோன் உறை கோயில்ம நல்ல வெம் தழல் மூன்று,
நால் வேதம், ஐ வேள்வியோடு, ஆறு அங்கம் வல்ல அந்தனர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே
"
- மங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார் : 1258 - 67 - 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.