திருசெம்பொன் செய்கோயில்
- மூலவர் : பேரருளாளன்,
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் : ஹேமரங்கர், செம்பொன்னரங்கர்
- தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்.
- தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி, கனகதீர்த்தம்
- விமானம் : கனக விமானம்
- ப்ரத்யக்ஷம் : ருத்ரன்.
- திருச்செம்பொன்செய்கோயில், திருநாங்கூரில், கீழப் பகுதியில் அமைந்திருக்கிறது.
- மூலவர் பேரருளாளன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் அல்லிமாமலர் நாச்சியார்.
- உற்சவர் ஹேமரங்கர், செம்பொன்னரங்கர்.
- பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என்றும் இங்கு வந்து நம்மோடு இருப்பதால்
பேரருளாளன் எனவும் பெயர் பெற்றார்.
- இராவண சம்காரம் முடிந்தபின் இராமபிரான் இத்தலத்தில் இருந்த த்ருடநேத்திரர் என்ற முனிவரின்
குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி
பின்னர் அப்பசுவை ஒரு அந்தணருக்ககுத் தானம் செய்தார்.
- அதைக் கொண்டு இத்தலம் கட்டியபடியால் இதற்கு செம்பொன்செய்கோயில் எனப் பெயராயிற்று.
- செம்பொன் அரங்கர் கோயில் என்று புகழ் வாய்ந்தது இந்த திவ்ய தேசம்.
- காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காச்யபன் என்னும் அந்தணன் மிக்க வறுமையில் வாடிக் கொண்டிருந்தான்.
அவன் வறுமையைப் போக்க, பக்தர்களால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அந்தணனின் மூத்த
மகன் முகுந்தன் இங்கு வந்து திருமந்திரத்தை 3 தினங்களில் 32000 ம் தடவை செபம் செய்ய
பெருமாள் திருவருளால் பெருஞ்செல்வம் பெற்றான்.
- எனவே இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் பெருமாளைச் சேவிப்பது
மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பது ஐதீகம்.
- திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில்
இவர் உறையயூரின் அழகிய மணவாளப் பெருமாள் ஆவார்.
- இவரே பேரருளான் என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார்.
- திருநாங்கூரில் தை அமாவாசை மறுநாள்
நடைபெறும் கருடசேவைக்கு இப்பெருமாளும் எழுந்தருளுவார்.
- திருமங்கை ஆழ்வார் இப்பெருமாளை மறைப் பெரும் பொருளாகவும், சிறப்பு உடை மறையோர் உணர்ந்த
பொருளாகவும் இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
- "பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் - தன்னை, பேதியா இன்ப வெள்ளத்தை, இறப்பு எதிர்காலம்
கழிவும் ஆனானை, ஏழ் இசையின் சுவை தன்னை, சிறப்புஉடை மறையோர் நாங்கைநல் நடுவுள் செம்பொன்செய்
கோயிலினுள்ளே மறைப்பெரும் பொருளை, வானவர் கோனை, கண்டுநான் வாழ்ந்தொழிந்தேனே "
- மங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார் :
- 1268 - 1277 - 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.