திருத்தெற்றியம்பலம்
- மூலவர் : செங்கண்மால்,
ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மீரங்கர் என்ற திருநாமங்கள், 4 புஜங்கள், புஜங்கசயனத் திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
குறிப்பு: திருத்தெற்றியம்பலம், திருநாங்கூரில்
மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
- தாயார் : செங்கமலவல்லி
- தீர்த்தம் : ஸூர்ய புஷ்கரிணி.
- விமானம் : வேத விமானம்.
- ப்ரத்யக்ஷம் : நாச்சியார், அநந்தாழ்வார்.
மூலவர் செங்கண்மால், அரங்கநாதன், ஸ்ரீலக்ஷ;மிரங்கர் நான்கு புஜங்களோடு புஜங்க சயனத்தில்
கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் செங்கமலவல்லி. ‘பள்ளிகொண்ட பெருமாள் கோயில்”
என்று அழைப்பார்கள்.
108 திவ்ய தேசங்களில் இத்தலம் மட்டுமே அம்பலம் எனக் குறிக்கப்படுகிறது.
நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது சயனத் திருக்கோலத்தில் இருக்கும் இப்பெருமான் செங்கண்மால்
என்ற பதத்திற்கு ஏற்பக் கண்ணழகு மிக்கவர்.
இப்பெருமானைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவார்கள். அரசு பதவி சம்பந்தமான வேண்டுதல்கள்
இப்பெருமானை வேண்டியவர்கட்குச் சித்திக்கிறதென்பது ஐதீகம்.
திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் இவர் ஸ்ரீ ரங்கத்து ரெங்கநாதனாவார். அதனால்தான்
அரங்கனைப்போல ஆதிசேடன் மேல் சயனித்துப் பேரழகு வாய்ந்தவராகக் காணப்படுகிறார்.
இத்தலத்துத் திருத்தெற்றியம்பலத்தென் செங்கண்மாலைத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்துள்ளார்.
திருநாங்கூரில் மை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் 11 எம்பெருமான்கள் கருடசேவைத் திருவிழாவிற்கு
இத்தலத்துப் பெருமாளும் எழுந்தருளுவார்.
இத்தலத்துச் செங்கண்மாலைச் சரணடைவதால் எந்தத் துன்பமும் இல்லை. ஏனென்றால் ஊழி வெள்ளத்தையே
தன் வயிற்றில் ஒடுக்கி, சகல லோகங்களையும் காத்த மூர்த்தி ஆவார் எனப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார்
பாடியுள்ளார்.
„ஏழ்உலகும் தாழ்வரையும் எங்கும்மூடி எண்திசையும் மண்டலமும் மண்டி, அண்டம் மோழை எழுந்து
ஆழிமிகும் ஊழிவெள்ளம், முன்அகட்டில் ஒடுக்கிய எம்மூர்த்தி கண்டீர் ஊழிதொறும் ஊழிதொறும்
உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர் சேழ் உயர்ந்த மணிமாடம்
திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே… மங்களாசாஸனம் :
- மங்களாசாஸனம் :
திருமங்கையாழ்வார்: 1278 - 87
10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.