திருமணிக்கூடம்<
- மூலவர் : வரதராஜப்பெருமாள்
(மணிக்கூட நாயகன்), நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார் : திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி),
பூதேவி. தனிக்கோயில் நாச்சியார் கிடையாது. .
- தீர்த்தம் : சந்த்ர புஷ்கரிணி,
- விமானம் : கனக விமானம்,
- ப்ரத்யக்ஷம் : பெரியதிருவடி, சநத்ரன்.
- திருமணிக்கூடம், திருநாங்கூர் திருநாங்கூருக்குக் கிழக்கே 1 கி.மீட்டர் தொலைவில்
உள்ளது.
- மூலவர் வரதராஜன் (மணிக்கூட நாயகன்) நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி.
- வரதராஜப் பெருமாள் கோயில் என அழைக்கப்டுகிறது.
- திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
- திருமங்கையாழ்வார் இத்தலத்துப் பெருமாளைப் பாசுரங்களில் பாடியுள்ளார். காஞ்சி வரதராஜப்
பெருமாள் போலவே இப்பெருமாளும் வரந்தருவதில் வல்லவராகிறார்.
- பெரியதிருவடி, சந்திரன், இவ்விருவருக்கும் பெருமாள் இத்தலத்தில் காட்சி கொடுத்ததாக
ஐதீகம்.
- திருநாங்கூரிலிருந்து 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆவார்.
- தை அமாவாசை மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இப்பெருமாளும் எழுந்தருளுவார். நாங்கூர் மணிக்கூடத்திலே, எங்கும் தென்றல் உலவுகிறது என்றும், அந்தத் தென்றலும் மணங்கொண்டு
உலவுகிறது என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். மலர் மணத்தைக் குறிப்பிடாமல் இப்பெருமாளின்
தெய்வீக மணத்தைத்தான் இப்படிக் குறிப்பால் ஆழ்வார் உணர்த்துகிறார்.
- இத்தலத்திலுள்ள பகவானை எந்தை என்று உரிமையோடும், பாசத்தோடும் அழைக்கிற ஆழ்வார், அவன் எந்தையாக இருந்தாலும் என்னைப்போல் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.
- மேலும் ஆழ்வார் பெருமாளை அவனே குன்றம் எனவும் , அவனே மண் எனவும், அவனே குளிர் புனல்
எனவும், அவனே திங்கள் எனவும், அவனே வெண்சுடர் எனவும், அவனே எல்லாம் எனவும் , பகவானின்
அளப்பரிய தன்மையை எடுத்துரைக்கிறார்.
- இப்படி எல்லாமாக இருப்பவனை ஆழ்வார் பாசுரத்தில் பாடியுள்ளார்.
- "குன்றமும் வானும் மண்ணும் குளிர்ப்புனல் திங்களோடும் நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும்
ஆய எந்தை - மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு எங்கும் தென்றல் வந்து உலவும்
நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே"
- மங்களாசாஸனம் :
திருமங்கையாழ்வார் : 1288 - 97 - 10 பாசுரங்கள்.10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.