திருக்காவளம்பாடி
- மூலவர் : கோபாலக்ருஷ்ணன்
(ராஜகோபாலன்) ருக்மணீ ஸத்யபாமாவுடன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார் : மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்.
நாச்சியார் ஸந்நிதி இல்லை.
- தீர்த்தம் : தடமலர்ப்பொய்கை.
- விமானம் : ஸ்வயம்பு விமானம்.
- ப்ரத்யக்ஷம் : சேனைத் தலைவர்,
ருத்ரன்.
கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து
நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக் கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு
இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரைச் சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக்
கேட்டான். இந்திரன் கொடுக்க மறுத்தான்.
எனவே சினங்கொண்ட கண்ணன் அவனோடு போர் செய்து
அவனது காவளத்தை அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான்
தான் இருக்கக் காவளம் போன்ற சோலையை தேடினான். அந்த இடம் இக் காவளம்பாடி என்பதை அறிந்து
இத்தலத்தில் கண்ணன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். துவாரகாபுரியிலிருந்து
கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இது துவாரகைக்குச் சமமான தலமாகிறது. திருநாங்கூரில் தை அமாவாசை மறுநாள் நடைபெறும் கருட சேவைக்கு இப்பெருமானும் எழுந்தருளுவார். இத்தலத்திற்கு
அருகிலேயே திருமங்கை ஆழ்வார் அவதாரத் தலமாகிய திருக்குறையலூர் உள்ளது. அவர் வைணவ அடியார்க்கு
அன்னதானம் நடத்திய மங்கை மடம் என்னும் தலமும் இங்கு அருகிலேயே இருக்கின்றது. திருமங்கை
ஆழ்வார் அவர் பாசுரத்தில் இப்பெருமாளகை; களைகண் நீயே என்று சரணடைந்தும், இலங்கை அரசன்
தலைகள் பத்தையும் அறுத்து வீழ்த்தி இளையவனுக்கே அரசு அளித்தவன் என்றும் பாடுகிறார்.
"முனைமுகத்து அரக்கன் மாளமுடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு இளையவற்கே
அரசு அளித்து அருளினானே‚ சுனைகளில் கயல்கள் பாயக் கரும்பு தேன் நுகரும் நாங்கைக் கனை
கழல் காவளம் தண் பாடியாய்‚ களைகண் நீயே "
- திருமங்கையாழ்வார் : 1298 - 1307
- 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.