|
திருமாலிருஞ்சோலை
- மூலவர் : அழகர்,
கள்ளழகர், மாலாங்காரர், மாலிருஞ்சோலை நம்பி என்ற பெயர்களுண்டு. நின்ற திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்
: ஸுந்தரவல்லி என்றும் ஸ்ரீதேவி என்றும் பெயர் (தனிக்கோயில் நாச்சியார்).
- தீர்த்தம் : நூபுரகங்கை, சிலம்பு ஆறு.
- ஸ்தல வ்ருக்ஷம் : வ்ருஷபகிரி, சந்தன வ்ருக்ஷம்.
- விமானம் : ஸோமஸுந்தர விமானம்..
- ப்ரத்யக்ஷம் : மலயத்வஜ பாண்டியன், தர்மதேவதை.
மூலவர் அழகர், மாலலங்காரர், மாலிருஞ்சோலை நம்பி, ஸ்ரீபரமஸ்வாமி நின்ற கோலத்தில் பஞ்சாயுதங்களுடன்
ஸ்ரீதேவி, பூதேவி, சூழ பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கிச் ஸேவை சாதிக்கிறார். தாயார் சுந்தரவல்லி (ஸ்ரீதேவி). உற்சவர் சுந்தரராஜன், கள்ளழகர். இவர்
பேரழகு வாய்ந்தவர்,
அபரஞ்சியால் செய்யப்பட்டவர். பஞ்ச ஆயுதங்களுடன் பெரும் புகழ்பெற்று விளங்குகிறார்.
ஆண்டாள் இங்கு அமர்ந்த திருக்கோல்த்தில் அருளுகிறார்.
திருமாலிருஞ்சோலை, கள்ளழகர் ஸந்நிதி, மதுரை மாநகருக்கு வடக்கே 20 கி.மீட்டர் தொலைவில்,
மலையடிவாரத்தில் மிகவும் எழிலோடு அமைந்துள்ளது.
தர்மதேவன் இங்கு ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து தவமிருந்து, சுந்தரராஜனை தரிசித்து, இக்கோலத்துடனே
இங்கு எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, பெருமாளும் எழுந்தருளினான். உடனே தர்மதேவன் விசுவகர்மாவை அழைத்து பெருமாளுக்குக் கோயில் திருப்பணிகளைச் செய்யச் சொன்னான்.
பெருமாளின் திரிவிக்ரம அவதாரத்தில் விண்ணளக்கும் பாதத்தை
பிரம்மன் சத்திய லோகத்தில் கண்டு, கமண்டல நீரால் பாத பூஜை செய்ய, அந்த நீர் பெருமாளின் பாதத்தில் உள்ள பொன் சிலம்பில்
பட்டு இவ்விடத்தே தெறிக்க, அது சிலம்பாறாகியது. இந்த சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும்.
இத்தீர்த்தம் தான் உற்சவரின் திருமஞ்சனத்திற்கு பயன்படுகிறது.
பாண்டிய மன்னர்கள் பலர் இப்பெருமாளுக்குத் திருப்பணிகள் செய்து வைணவத் தொண்டில் ஈடுபட்டு
பெருமாளின் அருள் பெற்;றுள்ளனர். சித்திரை மாதப் பௌர்ணமி அன்று ஸ்ரீகள்ளழகர் குதிரை
வாகனத்தில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் சூடிக் கொடு;த்த ஆண்டாளின் மாலையைச்
சூட்டிக் கொண்டு, வண்ணப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்குவார். எந்தவண்ணப் பட்டு வருகிறதோ,
அதைவைத்து நாட்டின் சுபிஷத்தை கணிப்பர். ஸ்ரீரெங்கநாதன் அழகராகவே வந்து ஆண்டாளை ஏற்றுக்
கொண்டதாக ஐதீகம்.
திருவரங்கமும், இத்தலமும் நிறைய விஷயங்களில் ஒன்றுபடுகின்றன. அவை: கோட்டைகளும், உயர்ந்த
மதில்களும், வாயில்களும், விளக்கு ஏற்றும் முறையிலும், ஒத்து காணப்படுகின்றன. திருவரங்கன்
எழில்மிகு சயனக் கோலத்திலும், கள்ளழகர் எழில்மிகு நின்ற கோலத்திலும் காட்சி கொடுக்கின்றனர்.
திருவரங்கன் இராமானுஜருக்கு அருள்பாலித்தார். அழகரோ கூரத்தாழ்வானுக்கு அருள்பாலித்தார்.
பெரியாழ்வார் தன் பாசுரத்தில் இம்மலையை வர்ணித்து பாடுகிறார்.
"பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலைƒ
குலமலை கோலமலை குளிர் மாமலை கொற்ற மலை நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே."
- மங்களாசாஸனம் :
- பெரியாழ்வார் : 71, 258, 338 - 59, 453 - 62.
- ஆண்டாள் : 534, 587 - 96.
- திருமங்கையாழ்வார் : 1022, 1114, 1329, 1573, 1634, 1760, 1765, 1818 - 37, 1855, 1969,
2020, 2034, 2673, (74), 2674 (125).
- பூதத்தாழ்வார் : 2227, 2229, 2235.
- பேயாழ்வார் : 2342..
- திருமழிசையாழ்வார் : 2415 .
- நம்மாழ்வார் : 2886 - 2918, 3733 - 44 , 3749 .
- மொத்தம் 128 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் கிளிக் செய்து சில விநாடிகள் காத்திருக்கவும்
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|