|
திருமெய்யம்
- மூலவர் : ஸத்யகிரிநாதன்,
ஸத்யமூர்த்தி. நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் :அழகிய மெய்யர்.
- தாயார்
: உய்யவந்த நாச்சியார், உஜ்ஜீவனத் தாயார்.
- தீர்த்தம் : கதம்ப புஷ்கரிணி, ஸத்திய தீர்த்தம்.
- விமானம் : ஸத்யகிரி விமானம்.
- ப்ரத்யக்ஷம் : ஸத்யதேவதைகள்.
- ஸ்தலவ்ருக்ஷம் : ஆல வ்ருக்ஷம்
குறிப்பு: திருமெய்யம், புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் இருக்கிறது.
திருச்சி ஜங்ஷனிலிருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
மூலவர் ஸத்யகிரிநாதன் (ஸத்ய மூர்த்தி) நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் உய்யவந்த நாச்சியார். உற்சவர் மெய்யப்பன். இக் கோயிலில் சுவரில், பல சிற்பங்கள்
கொள்ளை அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. திருவரங்களை விட பெரிய திருமேனியோடு பெருமாள் சயனித்திருக்கும்
கோலத்தையும், திருவடியில் ப10தேவியும், சுவரில் பிரம்மா முதலிய தேவர்களின் உருவங்களையும்
இக்கோயிலில் காணலாம். இக்கோயிலில் சுவரில்,பல சிற்பங்கள் கொள்ளை அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன.
திருவரங்களை விட பெரிய திருமேனியோடு பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தையும், திருவடியில்
ப10தேவியும், சுவரில் பிரம்மா முதலிய தேவர்களின் உருவங்களையும் இக்கோயிலில் காணலாம்.
இக்கோயில் ஒரு குடைவரைக் கோயில்.
இத்தலத்தில் ஆதிசேடன் தனக்கு ஸத்வ குணம் வேண்டி, சத்திய புஷ்கரிணியில் நீராடினான்.
ஆதிசேடன் வந்த வழி ஸர்ப்ப நதியாயிற்று. ஆதிசேடன் பெருமாளை நோக்கி கடுந்தவஞ்செய்து,
திருப்பாற்கடலில் தன் மீது சயனித்திருப்பது போல இங்கும் சயனித்துக் காட்சியருள வேண்டும்
என்று கேட்க, அவ்வண்ணமே எழுந்தருளினார்.
சந்திர்ன பெருமாளை குறித்து கடுந்தவஞ்செய்தான். பெருமாள்
தோன்றி என்ன வரம் வேண்டும்
எனக் கேட்டார். இங்கு காட்சி கொடுக்கும் பெருமாள் சந்திர மண்டலத்திலும் எழுந்தருள வேண்டும்
என்று கேட்டான். பெருமாளும் உடன்படலானார்.
இமயத்தில் புஷ்பத்திரை நதிக்கரையில், சித்ர சிலை என்னும் பாறை அருகில், ஒரு ஆலமரத்தடியில்
முனிவர் ஸத்தியதவர் பெருமாளை நோக்கி தவஞ்செய்ய, பெருமாள் அவருக்குக் காட்சி கொடுக்க,
நான் நினைக்கின்றபொழுது தாங்கள் எழுந்தருள வேண்டும் என்று கூற, பெருமாளும் ஒப்புக்கொண்டார்.
பின்னர் பெருமாள் அவனை இங்கு வரக் கூற, அவ்வாறே அவனும் இமயத்திலிருந்த நதி, பாறை, மரம்,
இவற்றோடு இங்குவர, அந்த நதி புஷ்கரிணியாகவும், பாறை மலையாகவும், மரம் அரசமரமாகவும்
காட்சி கொடுக்கிறது.
ஸத்ய முனிவர் இங்கு கடுந்தவஞ்செய்ய, பெருமாள் எழுந்தருள, முனிவர் பெருமாளிடம் மோட்சம்
கேட்க, ஆனால் பெருமாளோ புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்தபிறகு இருவருக்கும் மோட்சம்
அளிக்கிறேன் என்று கூறினார். அதேபோல இருவருக்கும் இங்கே மோட்சம் கொடுத்தார். கருடன்
தன் தாய் துயரைத் தீர்க்க அமிர்தம் வேண்டி இத்தலத்து பெருமாளை வேண்டி பெற்றதாக கூறப்படுகிறது.
மூலவர் சந்நிதியில் கருட விக்கிரகம் உள்ளது. திருமங்கையாழ்வார் இப்பெருமாளை அடைய ஒரு
நாயகியின் தாபமாக இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
"அருளி சோர் வேங்கடம், நீர்மலை என்று வாய் - வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்ƒ
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்ƒ உருகினாள்ƒ உள்மெலிந்தாள்
இது என் கொலோ? "
- மங்களாசாஸனம் :
- திருமங்கையாழ்வார் : 1090 , 1206 , 1524 , 1660 , 1760 , 1852 , 2016 , 2050 , 2674
(126) .
- மொத்தம் 9 பாசுரங்கள் .
வரைபடத்தை நகர்த்தி மேலும் தொடர்ந்து பார்க்கலாம்
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|