|
திருப்புல்லாணி
- மூலவர் : கல்யாண
ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்), நின்ற திருக்கோலம் , சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்
: கல்யாணவல்லி, பத்மாஸநி என்று இரண்டு தாயார்கள்
- தீர்த்தம் : ஹேம தீர்த்தம், சக்ர தீர்த்தம்,
ரத்னாகர ஸமுத்ரம்
- விமானம் : கல்யாண
விமானம். .
- ப்ரத்யக்ஷம் : அச்வத்த
நாராயணன், புல்லாரண்ய
முனி, ஸமுத்ர ராஜன்
- ஸ்தல வ்ருக்ஷம் : அச்வத்த வ்ருக்ஷம். .
-
குறிப்பு: திருப்புல்லாணி, இராமநாதபுரத்திலிருந்து தெற்குத் திசையில் 10 கி.மீட்டர்
தொலைவில் உள்ளது.
- இங்கிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் ஆதிசேது என்ற சமுத்திர தீர்த்தம் இருக்கிறது.
- மூலவர் கல்யாண ஜகந்நாதன் தெய்வச் சிலையாயாக வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் கல்யாணவல்லி, பத்மாஸநி.
- இது தவிர தர்ப்சயன ராமன், பட்டாபிஷேக ராமன், சந்தான கோபாலன், சந்நிதிகளும் உள்ளன.
- தசரத மகாராஜாவால் பூஜிக்கப்பட்ட தலம் மிகவும் பழமையானது.
- இராவணனைக் கொன்று சீதையை மீட்டுவர, இராமபிரான் வானர சேனையுடன் இலங்கைக்குச் செல்வதற்காக,
வருணனை பிரார்த்தித்து கடலகை; கடக்க வழி கேட்க, 7 நாட்கள் தர்ப்பைப் புல்லில் கிடந்த
தலமாதலால், இத்தலம் புல்லணை என்றும், திருப்புல்லாணி என்றும் வழங்கப்பட்டது.
- இராமனே இப்பெருமாளை பூஜித்துள்ளார். இங்கு
பெற்ற வில்லால் இராவண வதஞ்செய்தார்.
- புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மகரிஷிகளுக்காக பெருமாள் வைகுண்டத்திலிருந்து
இங்கு எழுந்தருளி அரசமரமாக காட்சி யளிக்க, அதையே நாராயணன் வடிவமாக தியானித்தனர். அரசமரத்தில்
லட்சுமி உறைகின்றாள் எனவும், இது இங்கு அசுவத்த விருட்சமாகவும், இம்மரத்தடியில் நாகப்
பிரதிஷ்டை செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
- இராமன் இலங்கையினின்று திரும்பி இங்கு, பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிராமன்
எனவும் திருநாமம் பெற்றார்.
- இராமனின் பாதம்பட்டதால் சேது மேன்மை பெற்றது. கடலுக்குள் இராமன் கட்டிய கல்அணை பார்த்தால்
சகல பாவங்களும் விலகும்.
- இங்கு அனுமான் கூப்பிய கரங்களுடன் அருள்பாலிக்கிறார். தசரதன் இங்கு புத்திரபேரை வேண்ட,
அவருக்கு 4 வேதங்களும் நான்கு மகன்களாக பிறந்ததாக ஐதீகம்.
- ஆழ்வார்கள் தங்கள் மங்களாசாசனங்களில், இராமன் வாலியைக் கொன்றதால், இங்கு வானர சேனைகள்
மலைக்கற்களால், சேது பாலம் அமைத்து கொடுக்க, இலங்கைக்கு சென்று இராவணனை இராமன் அழித்ததாக
கூறப்படுகிறது.
- ஆதிசேதுவில் வீரஹனுமான் மூலவரும், பட்டாபிராமர் சந்நிதியில் அழகிய உற்சவரும் உள்ளார்.
- திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம்:
- "ஓதிநாமம் குளித்து உச்சி - தன்னால் ஒளி மா மலர்ப் பாதம் நாளும் பணிவோம், நமக்கே நலம்
ஆதலின்ƒ ஆது தாரான் எனிலும் தரும்ƒ அன்றியும் அன்பர் ஆய்ப் போதும்ƒ மாதே‚ தொழுதும்
- அவன் மன்னு புல்லாணியே"
- மங்களாசாஸனம் :
- பெரியாழ்வார் : 13 - 22, 173, 360 - 370 .
- திருமங்கையாழ்வார் : 1550 , 1838 - 1847 , 1856 , 2674 (125).
- பூதத்தாழ்வார் : 2227 , 2268 .
- பேயாழ்வார் : 2343 .
- திருமழிசையாழ்வார் : 2415 .
- மொத்தம் 39 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளி்க் செய்து சில நொடிக்ள காத்திருக்கவும்
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|