|
திருத்தண்கால்
- மூலவர் : நின்ற நாராயணன்,
கிழக்கே திருமுக மண்டலம்
- உத்ஸவர் : திருத்தண்காலப்பன், நின்ற திருக்கோலம்
- தாயார்
: செங்கமலத்தாயார் (தனிக்கோயில் நாச்சியார்), அன்னநாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி,
ஜாம்பவதி என்ற திருநாமங்களும் உண்டு.
- தீர்த்தம் : பாபவிநாச தீர்த்தம்
- விமானம் : தேவசந்த்ர விமானம்
- ப்ரத்யக்ஷம் : சல்யபாண்டியன், புலி, ஸ்ரீவல்லவன்,
ஸ்ரீதேவி
-
குறிப்பு: திருத்தண்கால், திருத்தண்காலு}ர், ஸ்ரீபுரம் சிவகாசியின் வடக்கே 6 கி.மீட்டர்
தொலைவில் உள்ளது. மதுரை ஸ்டேஷனிலிருந்து விருதுநகர் வழி சென்றதால் 65 கி.மீட்டர் தொலைவில்
உள்ளது.
- மூலவர் நின்ற நாராயணன், ஸ்தித நாராயணன், நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இந்த எல்லாத் திருமேனிகளும் சுதையால் செய்யப்பட்டது. எனவே திருமஞ்சனம் கிடையாது. தாயார்
செங்கமலத்தாயார். அன்னநாயகி, அமிருதநாயகி, அனந்தநாயகி,ஜாம்பவதி என 4 நாச்சியார்கள்
(சுதை). உற்சவர் திருத்தண்காலப்பன். உற்சவர் செங்கமலத் தாயாருக்கு தினந்தோறும் எண்ணெய்
காப்பும் திருமஞ்சனமும் உண்டு. கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும்,
காணப்படுகிறார்.
- திருப்பாற்கடலில் ஸ்ரீதேவி, ப10மிதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிகளுள் தம்மில்
யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுத் தானே சிறந்தவள்
என்று நிருபிக்கும் பொருட்டு இத்தலம் வந்து கடுந்தவஞ்செய்ய பெருமாள் தோன்றி நீயே சிறந்தவள்
என ஏற்றுக் கொண்டார். இங்கே திருமகள் தங்கியதால் திருத்தங்கல் எனப் பெயர்பெற்றது.
- பின் வெள்ளையந்தீவில் இருக்கும் ஆலமரத்திற்கும், ஆதிசேடனுக்கும் தம்மில் யார்பெரியவர்
என்ற விவாதம் தோன்றியது. ஆலமரம் விஷ்ணுவை நோக்கி தவஞ்செய்தது. திருதங்கலில் நீ மலைவடிவில்
சென்று அமர்வாயாக. ஸ்ரீயை ஏற்க வரும் காலத்தில் உன் விருப்பப்படி அருள்பாலிக்கிறோம்
என்று பெருமாள் அருளினார். ஆதலால் இத்தலம் „திருத்தண்கால்… எனப் பெயர்பெற்றது. புதனின்
புதல்வன் புரூரவ சக்ரவர்த்திக்கு மோட்சம் அளித்தது இ;த்தலத்திலேதான். சந்திரகேது என்ற
மன்னன் புலியாகப பிறந்து, பின்னர் இத்தலத்தை வந்தடைந்து, இப்பெருமாளை ப10சித்து மோட்சம்
பெற்றதாகக் கூறுவர். ஆடி மாதத்தில் ஸ்ரீவில்லிபுத்து}ரில் ஐந்து கருடசேவை நடக்கும்.
அது சமயம் இப்பெருமாள் அங்கு சென்று நமக்குக் கருட சேவை காட்சி கொடுக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணனின்
பேரன் அனிருத்தன் பாணாஸ{ரனின் மகள் உஷையை இங்கு மணந்தான். ப10தத்தாழ்வார் இத்தலத்தை
தஞ்சைமாமணிக்கோயில், வேங்கட மலை, திருகடல்மல்லை, திருக்கோவலு}ர், திருக்குடந்தை, திருத்தண்கால்
திவ்யதேசங்களுடன் இணைத்து பாசுரத்தில் பாடியுள்ளார்.
- "தமர் உள்ளம், தஞ்சை தலை அரங்கம், தண் கால், தமர் உள்ளும் தண் பொருப்பு, வேலை தமர்
உள்ளும் மாமல்லை, கோவல், மதிள் குடந்தை என்பரே ஏ வல்ல எந்தைக்கு இடம்…"
- மங்களாசாஸனம் :
- திருமங்கையாழ்வார் : 1399, 2068, 2673 (71) , 2674 (120).
- பூதத்தாழ்வார் : 2251.
- மொத்தம் 5 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|