|
திருமோகூர்
- மூலவர் : காளமேகப்
பெருமாள், நின்ற திருக்கோலம், வலது கையில் வரதஹஸ்தம், இடது கையில் கதை,
கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் : திருமோகூர்
ஆப்தன் (பஞ்சாயுதங்களுடன்).
- தாயார்
: மோகூர்வல்லி (மோஹனவல்லி, மேகவல்லி), (தனிக்கோயில் நாச்சியார்).
- தீர்த்தம் : க்ஷீராப்தி புஷ்கரிணி
- விமானம் : சதுர்முக (கேதகி) விமானம்.
- ப்ரத்யக்ஷம் : ப்ரஹ்மா, இந்த்ரன், அஜ ருத்ரர்.
-
குறிப்பு: திருமோகூர், மதுரைக்கு மாநகரத்துக்குக் கிழக்கே 12 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
- மோகன க்ஷேத்திரம் என்றும் அழைப்பர்.
- மூலவர் காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் வலது கை வரதஹஸ்தம், இடது கையில் கதையுடன்
கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் மோகூர் வல்லி (மோகனவல்லி, மேகவல்லி). தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளியுள்ளார்.
- உற்சவர் திருமோகூர் ஆப்தன் (பஞ்ச ஆயுதங்களுடன்).
- இங்கு தெற்கு நோக்கி பள்ளி கொண்ட பெருமாள் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார்.
- ஆதிசேடனுக்கு தங்க கவசங்கள் உள்ளன.
- இங்கு சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் சேவை சாதிக்கிறார், மிகவும் விசேஷம்.
- ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மகாவிஷ்ணுவை வணங்கி சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டி
பெருமாளிடம் கூற, அனைவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க முற்பட்டனர். மிகவும்
வேகமாகக் கடைய விஷப்பாம்பு விஷத்தை கக்கியது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொள்ள, அதன்
பின் சந்திரன், உச்சைச்சிரவசு, கற்பகவிருட்சம், ஐராவதம், அகல்யை, மகாலட்சுமி, கௌஸ்துபமணி
இறுதியில் அமிர்தம் கிடைக்க, அதனைப்பெற தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடைபெற,
பெருமாள் மோகினிவேடங் கொண்டு அமிர்தத்தை தேவர்களிடம் கொடுத்தார்.
- இங்கு பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இத்தலம் மோகன க்ஷேத்திரம் என்றாயிற்று. தூய
தமிழில் திருமோகூர் என வழங்கப்பெற்றது. புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில்
பெருமாள் இங்கு பள்ளி எழுந்தருள வேண்டும் என்று வேண்டியதால், இங்கு அவருக்கு தனிச்
சந்நிதி உள்ளது. திருப்பாற்கடலைக் கடையும் பொழுது இ;ங்கே ஒரு துளி அமிர்தம் விழுந்ததால்
இங்கு தீர்த்தம் க்ஷீராப்தி தீர்த்தம் எனப் பெயராயிற்று. நாபிக் கமலத்தில் பிரம்மன்
தோன்றும் பொழுது, இரு அரக்கர்கள், பிரம்மனிடம் உள்ள வேத நூல்களை திருடிக் கொண்டு பாதாள
உலகில் மறைத்து வைத்தனர். இதனையறிந்த மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்து பாதாளம் சென்று
வேதநூல்களை மீண்டும் எடுத்து வந்து பிரம்மனிடம் சேர்ப்பித்தார். பிரம்மன் தனக்கு வேதநூல்களை
திரும்பத் தந்த பெருமாளை நோக்கி நன்றி கூறும் வகையில் திருவாராதனைக் கைங்கர்யத்தை தினந்தோறும் இத்தலத்திலிருந்து செய்துவருவதாக ஐதீகம்.
- நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை அவனே அரண் என்று சரண் அடைந்து தேவர்கள் உய்வு பெற்றதாக
இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
- "நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் தீமைசெய்யும் வல் அசுரரை அஞ்சிச்சென்று
அடைந்தால், காமரூபம் கொண்டு, எழுந்து, அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று, எண்ணுமின்,
ஏத்துமின், நமர்காள்"
- மங்களாசாஸனம் :
- திருமங்கையாழ்வார் : 2673 (74).
- நம்மாழ்வார் : 3667 - 77
- மொத்தம் 12 பாசுரங்கள் .
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|