திருக்கூடல் (மதுரை)
- மூலவர் : கூடலழகர்,
வீற்றிருந்த திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்
: மதுரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்). இவருக்கு வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி
என்ற பெயர்களும் உண்டு.
- தீர்த்தம் : ஹேமபுஷ்கரிணி, சக்ர
தீர்த்தம், க்ருதமாலா நதி, வைகை நதி.
- விமானம் : அஷ்டாங்க
விமானம்.
- ப்ரத்யக்ஷம் : ப்ருகு , ஸெளநகாதிகள்,
பெரியாழ்வார்.
- திருக்கூடல், கூடலழகர்
சந்நிதி தென்மதுரையிலே அமைந்திருக்கிறது
இத்தலம் . மதுரை நகருக்குள்ளேயே ரயில் நிலையத்திலிருந்து 1 கி. மீட்டர் தொலைவில் இக்கோயில்
உள்ளது.
- மூலவர் கூடலழகர் ஆதிசேஷன் கீழே வீற்றிருந்த கோலத்தில்
கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் மதுரவல்லி, வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி
என்ற நாமங்களும் உண்டு. உற்சவர் வ்யூஹ சுந்தரராஜன் இரண்டு மாடித் தளங்களில், முதலில்
புஜங்க சயனத்தில் ரெங்கநாதனும், இரண்டாவதில் சூரியநாராயணப் பெருமாள் நின்ற கோலத்திலும்
எழுந்தருளியிருக்கிறார்கள். இங்கு நவக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- பெருமாளின் திரிவிக்ரம அவதாரத்தில் சத்தியலோகத்துக்கு
வந்த பாதங்களை பிரம்மன் கழுவியபோது, இங்கு விழுந்த நீர்த்துளிகளே வைகை ஆனது. ஒரு பிரிவு
வைகiயாகவும், மற்றொரு பிரிவு கிருதமாலாவாகவும் மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. தேவர்கள்
கூட்டமாக கூடி இங்கு வருவதால் இந்நகருக்கு கூடல் என்றும், இங்கு எழுந்த பெருமாளே திருக்கூடல்
என்றும் கூடலழகர் என்றும் பெயர் பெற்றது.
- இத்தலம் நான்கு யுகங்களிலும் போற்றப்பட்டு வந்துள்ளது.
திரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் பெருமாளை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பியதால்
இங்கு பெருமாளும் பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் எழுந்தருளினர். திரேதாயுகத்தில்
பிருது என்னும் மன்னன் இத்தலத்தின் மீது விமானத்தில் பறக்கும் போது அஷ்டாங்க விமானச்
சக்தியால் பறக்க இயலாமல், இத்தலத்தில் இறங்கி பெருமாளை வணங்கி பின்பு பரமபதம் அடைந்தான்
எனக் கூறப்படுகிறது. துவாபரயுகத்தில் அம்பரிஷன் என்ற சிறந்த விஷ்ணுபக்தன் இப்பெருமாளை
வழிபட்டு முக்தியடைந்தான் என்று கூறுவர். கலியுகத்தில் பாண்டிய மன்னன் வல்லபதேவன் முகதியளிக்கும்
தெய்வம் எது என்று கேட்டு பொற்கிழியைக் கட்ட, முக்தியளிக்கும் தெய்வம் தெரிந்தபிறகு
பொற்கிழி தானே அறுந்து விழும் என்று கூற, பெரியாழ்வார் பெருமாளே முக்தியளிக்கக்கூடியயவன்
என்று கூற, அப்பொற்கிழி தானே அறுந்து விழ, மன்னன் பெரியாழ்வாருக்கு சகல மரியாதைக்ள
செய்து பணிந்து யானை மீதேற்றி அழைத்து வந்தான். இக்காட்சியைக் கண்ட கூடலழகரே பிராட்டியோடு
விண்ணில் காட்சி அளித்ததாகக் கூறுவர். அப்பொழுது பெரியாழ்வார் பல்லாண்டு பாடியுள்ளார். சத்தியவிரதன் என்ற பாண்டிய மன்னனுக்கு பெருமாள் மீன் உருவில் இங்கே காட்சி கொடுத்துள்ளர்.
திருமங்கையாழ்வார் பெருமாளின் பேரழகில் வியந்து
இப்பாசுரத்தில் பாடுகிறார்.
- "கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர்ƒ குன்றம் அன்ன பாழி அம் தோளும் ஓர் நான்கு
உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறிவோம்ƒ வாழியரே‚ இவர் வண்ணம் எண்ணில், மாகடல் போன்று
உளர்ƒ கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ, ஒருவர் அழுகியவா"
- மங்களாசாஸனம் :
- திருமங்கையாழ்வார் : 1762 .
- திருமழிசையாழ்வார் : 2420 .
- மொத்தம் 2 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.