திருவில்லிபுத்தூர்
- மூலவர் : வடபத்ரசாயீ
(ரங்கமன்னார்) , புஜங்கசயனம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்
: ஆண்டாள் (கோதா நாச்சியார் ).
- தீர்த்தம் : திருமுக்குளம்.
- விமானம் : ஸம்சன விமானம்
- ப்ரத்யக்ஷம் : மண்டூகமுனி, பெரியாழ்வார்.
- திருவில்லிபுத்து}ர், மதுரை - தென்காசி பேருந்து பாதையில்
இத்தலம் உள்ளது.
- மதுரையில் இருந்து அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
- மூலவர் வடபத்ரசாயி, (ரங்கமன்னார்) ஆதிசேஷனுடன் புஜங்க
சயனத்தில்
கிழக்கு நோக்கியும், உற்சவருக்கு வலதுபுறம் ஆண்டாளும், இடதுபுறம் கருடாழ்வாரும்,
சேவை சாதிக்கிறார்.
- தாயார் ஆண்டாள் (கோதை நாச்சியார்). இரு முனிவர்கள் முன்
பிறப்பு தொடர்பால், வராக க்ஷேத்திரத்தில் மன்னர்களாய்ப் பிறந்தனர். அவர்களே வில்லன்,
கண்டன், காட்டுக்கு இருவரும் வேட்டையாடும்பொழுது புலி அவர்களை விரட்ட, கண்டன் புலியினால்
மடியும்பொழுது நாராயணன் பெயர் சொல்ல மோட்சம் பெற்றான். வில்லி இக்காட்டை அழித்து ஒரு
திருநகரை உண்டாக்க, அதுவே இன்று வில்லிபுத்தூர் என வழங்கப்படுகிறது.
- பெருமாள் தனது வராகரூபத்தில் பிராட்டி வேண்டியபடி அவள்
ஆண்டாளாக அவதாரம் செய்யும் நேரம் வந்தது என்று அறிந்து தன் கருடனை விஷ்ணுசித்தனாக அவதாரம்
செய்து வில்லிபுத்தூரில் இருக்கச் செய்தான். விஷ்ணுசித்தனே பெரியாழ்வார் என அழைக்கப்டுகிறார்.
- பெரியாழ்வார் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் பொருட்டு
நந்தவனம் அமைத்தார். திருமகளை ஆண்டாளாக நந்தவனத்தில் பெரியாழ்வார் கண்டெடுத்து, கோதை
என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
- ஆழ்வார் தினமும் கட்டி வைக்கும் மாலையை ஆண்டாள் சூடி மகிழ,
இதைக் கண்ட ஆழ்வார் கோபங்கொள்ள, அன்று பெருமாளே அவர் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிக்களைந்த
மாலையே தமக்கு உகந்தது என்று கூறினார்.
- ஆண்டாளுக்குத் திருமண பேச்சு எடுக்கும் பொழுது, ஆண்டாள்
அரங்கனைத் தவிர யாருக்கும் மாலையிடமாட்டேன் என்றாள். இந்த எண்ணம் ஈடேறுமோ என்று வியந்த
ஆழ்வாரின் கனவில் தோன்றிய
பெருமாள், திருமகளே ஆண்டாளாக எழுந்தருளியுள்ளாள். ஆதலால்
அரங்கத்துக்கு அவளை அழைத்து வா, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். ஆழ்வாரும், ஆண்டாளும்
அரங்கம் செல்ல, அங்கு ஆண்டாள் மறைய, ஆழ்வார் இத்திருமணக் கோலத்தோடு வில்லிபுத்தூரிலும்
எழுந்தருளவேண்டும் என்று வேண்ட, அதன் படி பெருமாள் வடபெருங்கோயிலில் எழுந்தருளினார்.
- பிராட்டியே ஆழ்வாராக எழுந்தருளிய தலம். இங்கும் அரையர்
சேவை உண்டு.
- ஆண்டாள் அவதாரம் செய்த ஆடிப் பூரத்தன்று நடைபெறும் தேர்த்
திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.
- இங்கு 5 கருட சேவை நடைபெறும். இத்தலத்தில் நான் பெருமாளோடு
ஆண்டாள் காட்சி தருகிறார். ஆண்டாள் தான் பால் ஊட்டி எடுத்து வளர்த்த கோலக் கிளியை பாசுரத்தில்
பாடுகிறார்.
- "மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான்
தன் பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயற் கண்ணினை துஞ்சா இன் அடிசிலோடு பால்
அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமைக் கொள்ளுவன், குயிலே‚ உலகு அளந்தான்
வரக் கூவாய்"
- மங்களாசாஸனம் :
- பெரியாழ்வார் : 133
- ஆண்டாள் : 549
- மொத்தம் 2 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.