|
திருக்குருகூர்
- மூலவர் : ஆதிநாதன்
, ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான், நின்ற திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்
: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று
2 தனிக்கோயில் நாச்சியார்கள்.
- தீர்த்தம் : ப்ரஹ்ம தீர்த்தம்,
தாம்பரபரணி நதி.
- விமானம் : கோவிந்த
விமானம்.
- ப்ரத்யக்ஷம் : ப்ரஹ்மா, மதுரகவி,
நம்மாழ்வார்.
- ஸ்தலவ்ருக்ஷம் : புளியமரம்
- திருக்குருகூர் என்றும் ஆழ்வார் திருநகரி என்றும் ஆழ்வார்
நவதிருப்பதிகளில் ஒன்றாகும் .
- திருநெல்வேலிக்கு கிழக்கே 30 கி.மீட்டர் தொலைவில் தாம்பரபரணி
தென்கரையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்ததூருக்கு செல்லும் பாதையில் இவ்வூர்
உள்ளது.
- மூலவர் ஆதிநாதர், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான்
நின்ற கோலத்தில்
கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி, தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளனர்.
- இங்கும் அரையர் சேவை நடைபெறுகிறது. நம்மாழ்வார்
சந்நிதி விசேஷம் அவருக்கு எல்லா நாட்களிலும் திருமஞ்சனம் உண்டு.
- வராஹப்
பெருமாள், ராமானுஜர், தசாவதாரம், வேணுகோபாலன் மற்றவர்க்கும்
சந்நிதிகள் உள்ளன.
- ஒரு சமயம் பிரம்மன் இங்கு வந்து கடுந்தவம் இயற்ற, பெருமாளே
பிரம்மனுக்கு குருவாக வந்து இங்கு உபதேசம் செய்ததால், இவ்வூர் குருகூர் எனப் பெயர்
பெற்றது.
- குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியை ஆண்டதால், இவ்வூர்
அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்று எனக் கூறுவர்.
- நம்மாழ்வாரின் அவதார மகிமையால்தான் ஆழ்வார் திருநகரியாயிற்று.
- இத்தலம் ஆதியில் தோன்றியதால் "ஆதிக்ஷேத்திரம்" எனவும்
பெருமாள் வராக ரூபத்தை காட்டியருளியதால் "வராக க்ஷேத்திரம்" எனவும், ஆயிரம் தலைகொண்ட
ஆதிசேடன் இங்கு உறங்காப் புளியாக அவதரித்ததால் ‘"சேஷக்ஷேத்திரம்" எனவும், தாம்பரபரணியாலும்,
சங்கணித்துறையாலும் வளம் பொருந்திய ஊராகையால் "தீர்த்த க்ஷேத்திரம்" எனவும், இக்குருகூரை
பெரியவர்கள் "பஞ்சமகா க்ஷேத்திரம்" என்று போற்றிப் புகழ்ந்தனர்.
- ஆழ்வார் என்றால் ஸ்ரீநம்மாழ்வார்தான் நினைவுக்கு வருவார்.
இங்கமைந்த புளிய மரத்தின் பொந்தில் சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து அமர்ந்த
தாகவும், நம்மாழ்வார் இங்கு தான் வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக வடித்துக் கொடுத்தார்
எனவும் கூறப்படுகின்றது.
- மதுரகவியாழ்வார், வடநாட்டிற்குச் சென்ற பொழுது, தென்திசையில்
ஒரு சோதி தோன்றியதைப் பார்த்தார். நம்மாழ்வாரின் அவதார ஊரில் இருந்தே ஒளி வந்ததை அறிந்து
அவரை அடிபணிந்து போற்றினார்.
பின் ஒரு காலத்தில் நாதமுனிகள் நாலாயிரம்; பாக்களை வேண்ட
ஸ்ரீநம்மாழ்வார் அவருக்கு அருளினார். நாதமுனிகள் இத்தலத்திலிருந்தே அவற்றினை எழுதிக்
கொடுத்தார்.
- நம்மாழ்வார்
இப்பாசுரத்தில் இத்திருக்குருகூர் ஆதிப்பிரானை
ஆடிப் பாடிப் பரவசம் அடையுங்கள் என்று பாடுகிறார்.
- "நாடிநீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன்படைத்தான்
வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் - அவன் மேவி உறை கோயில், மாட மாளிகை சூழ்ந்து அழகு
ஆய திருக்குருகூர் - அதனைப் பாடி ஆடிப் பரவிச் செல்மின்கள், பல் உலகீர்‚ பரந்தே".
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார்: 3106 - 3116 -
- மொத்தம் 11 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|