திருத்தொலைவில்லிமங்கலம்
- மூலவர் : ஸ்ரீநிவாஸன்
(தேவப்பிரான்), நின்ற திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்
: உபயநாச்சியார்கள் (தனிக்கோயில் இல்லை).
- 2வது ஸ்தலம்:
- மூலவர் : அரவிந்தலோசனன், செந்தாமரைக்கண்ணன்,
வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் : கருந்தடங்கண்ணி நாச்சியார்.
- தீர்த்தம் : வருண தீர்த்தம், தாம்பரபரணி ஆறு.
- விமானம் : குமுத விமானம்.
- ப்ரத்யக்ஷம் : இந்த்ரன், வாயு, வருணன்.
- திருத்தொலைவில்லிமங்கலம் என்றும் இரட்டைத் திருப்பதி என்றும்
அழைக்கப்படும் இத்தலம். ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று.
- ஆழ்வார் திருநகரிக்குக் கிழக்குத் திசையில் 3 கி.மீட்டர் தொலைவில் தாம்பரபரணி நதிக்கு வடகரையில் இக்கோயில் உள்ளது.
- முதல் திருப்பதி தெற்கில் உள்ளது. மூலவர் தேவப்பிரான்
(ஸ்ரீநிவாசன்) நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் உபய நாச்சியார்.
- இரண்டாம் திருப்பதி வடக்கில் உள்ளது. மூலவர் அரவிந்தலோசனன்(செந்தாமரை
கண்ணன்) வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
- தாயார் கருந்தடங்கண்ணி நாச்சியார். தேவப்பிரான் சந்நிதியில் துலையும், வில்லும் சுவர்க்கம் அடைந்தபின் இங்கே யாகஞ் செய்த அத்திரேய சுப்ரபர், அருகில்
உள்ள பொய்கையில் தினமும் சென்று தாமரை மலர்களை பறித்து தேவப்பிரானுக்கு வழிபாடு செய்தார்.
சுப்ரபர் தினந்தோறும் அழகு மலர்களைக் கொண்டு பூசை செய்வதைப் பார்த்த
பெருமாள், இவர்
பக்தியைக் கண்டு, பின்னாலேயே வரலாயினர். பொய்கையில் தியானத்தோடு பூப்பறிப்பவரைக் கண்டு
வியந்து அங்கேயே நிற்கிறார். இத்திருக்கோலத்தைக் கண்ட சுப்ரபர், இவ்வண்ணம்
பின் தொடரக்
காரணம் கேட்டார். பெருமாளும் பக்தியோடு நீர் செய்யும் தாமரைப் புஷ்ப பூசைக்கு உகந்தே
இங்கே நின்றோம் என்றார்.
- தாமரை மலர்களை விரும்பிய இறைவன் இங்கு நின்றதால், "அரவிந்த
லோசனன்" என்ற திருநாமம் பெற்றார்.
- அசுவனி தேவர்கள் என்னும் இருவர் பிரம்மனிடம் சென்று யாகவேதியில்
கிடைக்கும் அவிர்ப்பாகத்தில் தமக்கும் பங்கு வேண்டுமென்று கேட்டனர். பிரம்மன் அவ்விருவரையும்
நோக்கி, தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்க வேண்டுமெனில் பூவுலகில் தாம்ரபரணியின் வடகரையில்
உள்ள அரவிந்த லோசனப் பெருமாளை தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடுந்தவம் மேற்கொள்ளுங்கள்
என்றார். இருவரும் இத்தலத்தில் தவம் செய்தனர். இவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன்
தாமரை மலர்களை கையில் ஏந்திய திருக்கோலத்தோடு காட்சி தந்து அவ்விருவருக்கும் அவிர்ப்பாகம்
பெறுவதற்கான தகுதியை அளித்தார்.
- நம்மாழ்வார்
இப்பாசுரத்தில் இறைவனை நோக்கி, நமக்கு ஏற்பட
வேண்டிய தாபத்தை, ஒரு பெண்ணின் ஏக்கமாகச் சித்திரித்துக் காட்டுகிறார்.
- "இரங்கி நாள்தொறும் வாய்வெரீ இ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்ƒ துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லி
மங்கலம் என்றுதன் கரங்கள் கூப்பித்தொழும் - அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3271 - 81 -
- மொத்தம் 11 பாசுரங்கள் .
ப்ளே பட்டனை க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்