|
திருச்ரீவரமங்கை
- மூலவர் : தோதாத்ரிநாதன்
(வானமாமலை),
வீற்றிருந்த திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்
- உத்ஸவர்: தெய்வநாயகன்
- தாயார்
: இருபுறமும் உபயநாச்சியார்கள்;ƒ
தவிர, சிரீவரமங்கைத்தாயார் (இரண்டு தனிக்கோயில் நாச்சியார்களும் உண்டு).
- தீர்த்தம் : இந்த்ர
தீர்த்தம், சேற்றுத்தாமரைத் தீர்த்தம்.
- விமானம் : நந்தவர்த்தந
விமானம் என்ற ஸ்ரீவைகுண்ட விமானம்
- ப்ரத்யக்ஷம் : ப்ரஹ்மா, இந்த்ரன்,
ரோமசர், ப்ருகு, மார்க்கண்டேயர்
- : திருச்சிரீவரமங்கை, நாங்குனேரி, வானமாமலை, தோதாத்ரி
க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலிக்குத் தெற்கே நாகர்கோயில்
போகும் பாதையில் 28 கி.மீட்டர் தொலைவில்
உள்ளது.
- **** மூலவர் வானமாமலை என்ற தோதாத்ரி நாதர் வீற்றிருந்த
பட்டாபிஷேக கோலத்தில்
கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் சிரீவரமங்கை தாயார்,
உபய நாச்சியார். உற்சவர் தெய்வநாயகன். இந்த க்ஷேத்திரம் அஷ்ட சுயம்பு தலங்களில் ஒன்று.
சடாரியில் நம்மாழ்வார் உருவம் விசேஷம்.
- **** இத்தலத்தில் ஸ்ரீவரமங்கையாக திருமகள் வந்து வளர்ந்து,
பிறகு எம்பெருமாளை மணந்து கொண்டதால், ஸ்ரீவரமங்கை எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி
திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகனைச் சேரி எனவும் மரங்கள் நிறைந்த
வனமும், மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு
ஏரிகளாக வெட்டியதால் நான்குநேரி எனவும், தோத்தாத்தரி எனவும் அழைப்பர்.
- **** மது, கைடபன் என்று இரண்டு அரக்கர்கள், பிரம்மனின்
நாபிக் கமலத்தில் இருந்து செல்லும் தாமரைத் தண்டினை ஆட்டி அச்சுறுத்த, பிரம்மன் தன்னைக்
காக்குமாறு பெருமாளிடம் முறையிட்டார். அவர் அவ்வரக்கர்களை அழித்தார். அதனால் பூமியெங்கும்
துர்நாற்றம் வீசியது. நிலைகுலைந்த பூமித்தாய் பெருமாளை வணங்க, பெருமாள் தனது சக்கரத்தை
ஏவி அமிர்த மழை பொழியச்
செய்து இங்கு பூமித்தாயின் அழுக்கை போக்கினார்.
- **** ஊர்வசியும் திலோத்தமையும் இங்குவந்து அஷ்டாச்சர மந்திரத்தை
பெற்று தவமிருக்க இறுதியில் பெருமாள் காட்சி கொடுத்து, தன் அருகில் இருக்கும் பேறு
கொடுத்தார். எனவேதான் இத்தலத்தில் தேவமாதர்களான ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீச,
ஸ்ரீதேவியும், பூதேவியும் இருமருங்கும் அமர்ந்திருக்க எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
- **** ஒரு நாள் கருடன் தவத்தில் சிறந்த முனிவர்களிடம் ஆதிசேடன்
எக்காலமும் பெருமாளுக்கு பணிவிடை செய்கிறான். நானும் அந்த பேறுபெறச் செய்ய வேண்டும்
என்றார். முனிவர்களின் கூற்றுப்படி தவஞ்செய்து பெருமாளை தரிசித்து நானும் ஆதிசேடனைப்போல்
பெருமாளை பிரியாமலிருக்க வேண்டும் என்று கேட்க, நீயும் வைகுந்தம் வந்து எனது வாசலின்
முன்னே எந்தநேரமும் தயார் நிலையில் இருக்கும்படி கூறி அருளினார். இங்கு பெருமாளுக்கு
தைல அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த எண்ணையை இங்குள்ள நாழிக் கிணற்றில் ஊற்றுவர். அந்த
எண்ணையை உண்டால் சகல வியாதிகளும் தீரும். முக்தியளிக்கும் 8 தலங்களில் இதுவும் ஒன்று.
- "நோற்ற நோன்பு இலேன்ƒ நுண் அறிவு இலேன்ƒ ஆகிலும், இனி
உன்னi விட்டு ஒன்றும் ஆற்ற கின்றிலேன்ƒ அரவின் அணை அம்மமானே‚ சேற்றுத் தாமரை செந்நெல்
ஊடு மலர் சிரீ வர மங்கலநகர் வீற்றிருந்த எந்தாய்‚ உனக்கு மிகை அல்லேன் அங்கே."
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3183 - 93
- மொத்தம் 11 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|