|
திருப்புளிங்குடி
- மூலவர் : காய்சினவேந்தன்,
புஜங்கசயனம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்
: மலர்மகள் நாச்சியார், ப10மகள் நாச்சியார்,
(பெரிய திருவுருவங்கள்), புளிங்குடிவல்லி என்ற சிறிய உத்ஸவத்தாயாரும் உண்டு. தனிக்கோயில் நாச்சியார் கிடையாது.
- தீர்த்தம் : வருண, நிர்ருதி தீர்த்தம்
- விமானம் :வேதஸார விமானம்
- ப்ரத்யக்ஷம் : வருணன், நிர்ருதி,
தர்மராஜன், நரர்.
- குறிப்பு: திருப்புளிங்குடி, ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டத்தில்
இருந்து 3 கி.மீட்டர் தொலைவில்
உள்ளது.
- மூலவர் காய்சின வேந்தன் புஜங்க சயனத்தில்
கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். பெருமாளின் பாதங்களை வெளிப் பிரகாரத்திலிருந்து ஒரு சன்னல் வழியாகப் பார்க்க வேண்டும்.
தாயார் மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார். உற்சவத் தாயார் புளிங்குடிவல்லி. இங்க
பகவானை தீக்ஷ;ணமான நெருப்பு என்று கருதுவதால் சடாரி சாய்ப்பதில்;லை. மற்றும் இவ்வ10ரில்
கருட சேவை விசேஷம்.
- மகாவிஷ்ணு இலக்குமியுடன் வைகுண்டத்திலிருந்து, இப்பூவுலகில் தாம்ரபரணி நதிக்கரையில்
தனித்திருக்க விரும்பி, இங்கு வந்தும் இலக்குமி தேவியுடன் இருக்கிறாரே என்று எண்ணி
பொறாமை கொண்ட பூமாதேவி, சினங்கொண்டு பாதாள லோகம் சென்றாள். அதனால் உலகம் இருளடைந்து,
தேவர்கள் இருள் விலக வேண்டும் என பெருமாளை வேண்ட, அவரும் பாதாள லோகத்தில் உள்ள பூமாதேவியைச்
சந்தித்து இருவரும் தமக்குச் சமமே என உபதேசிக்க, பின்பு இருவரும் சேர்ந்தே இ;வ்விடத்தில்
காட்சி தந்தனர். ஆதனால் பெருமாள், பூமிபாலர் என்றும், காசினி வேந்தர் என்றும் பெயர்
பெற்றார்.
- அந்தணன் யக்ஞசர்மா தனது பத்தினியுடன் தனித்திருக்கையில் வசிட்டரின் மகனான சக்தியென்பவர்
தமது ரிஷிகள் புடைசூழ அங்கு வந்தனர். கண்டும் காணாதது போல இருந்த அந்தணனை ஓர்அரக்கனாகும்படி
சக்தி சபிக்க, தன் நிலை மாறிய அந்தணன், அம்முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து, சாப விமோசனம்
வேண்டினார். இந்திரனின் யாகத்தை நீ அழிக்க முற்படும் போது பெருமாளின் கதையால் அடிபட்டு
சாபவிமோசனம் பெறுவாய் என்றனர். அந்த அந்தணன் சாப விமோசனம் அடைந்தது இத்தலத்தில் தான்.
- இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் தனித்திருக்கையில்,
அங்கு மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்திரன்
தனது வஜ்ராயுதத்தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த, இந்திரனுக்கு பிரம்மஹத்தி
தோசம் சூழ்ந்தது. இதனால் தேவர்கள் தங்கள் குலகுருவான வியாழ பகவானிடம் இதன் பரிகாரம்
கேட்டனர். அதற்கு இந்திரன் திருப்புளிங்குடிக்கு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,
பூமிபாலரை வணங்கினால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் எனக் கூற, அவ்வாறே தோஷம் நீங்கியதால்,
பெருமாளுக்கு நன்றி செலுத்த யாகம் செய்தார். யாக குண்டத்தில் பெருமாள் தோன்றி தனது
கதையினால் அடிக்க, அரக்கனான அந்தணனுக்கு சாபவிமோசனம் கிடைத்தது . நம்மாழ்வார் இத்தலத்துப்
பெருமாளை எத்தனைநாள் இப்படிக் கிடப்பாய் என்று பாசுரத்தில் பாடியுள்ளார்.
"கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி, உன் திருஉடம்பு அசைய‚
தொடர்ந்து குற்றேவல்
செய்து தொல் அடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண்விழித்து, நீ எழுந்து
உன் தாமரை மங்கையும் நீயும்,
இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங் குடிக்கிடத்தானே"
மங்களாசாஸனம்:
நம்மாழ்வார்: 3473, 3568 - 78, - 12 பாசுரங்கள்.
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|