தென்திருப்பேரை
- மூலவர் : மகர நெடுங்குழைக்காதன், நிகரில் முகில் வண்ணன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
- தாயார்
குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என்று இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள் உண்டு.
- தீர்த்தம் :
சுக்ரபுஷ்கரிணி, சங்கதீர்த்தம்.
- விமானம் : பத்ர விமானம்
- ப்ரத்யக்ஷம் : சுக்ரன், ஈசாந்யருத்ரர், ப்ரஹ்மா
- :
குறிப்பு: திருப்பேரை என்றும் தென்திருப்பேரை என்றும் அழைக்கப்படும் இத்தலம் ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். ஆழ்வார் திருநகரியிலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.
பெருமாள் திருமகளை விடுத்து ப10மிதேவியிடம் இருக்க, திருமகளாகிய லட்சுமி துர்வாச முனிவரிடம், தனது நிலையைக் கூறி ப10மாதேவியின் நிறமும் அழகும் தன்ககு வரவேண்டுமென்று வேண்டினாள். துர்வாசர் ப10மிப்பிராட்டியின் இருப்பிடம் வர, அவர் வந்ததை அறியாமல் ப10மாதேவி பெருமாளுடன் இருந்தார். கடுஞ்சினங் கொண்ட துர்வாசர், இலக்குமியின் உருவத்தை நீ பெறுவாய் என்று சபித்தார். அவள் தன் குற்றத்தை உணர, எனது உருவம் எனக்கு எப்போது வரும் என்று கேட்டாள். தாம்பரபரணியின் தென்கரையில் உள்ள கரிபதம் சேத்திரத்தில் நீராடி தவம் புரிந்தால் உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறினார்.
- :
பிறகு லட்சுமியிடம் விபரம் கூற, அவள் ஆனந்தமடைந்தாள். துர்வாசர் கூறிய படி ப10மாதேவி அஷ்டாச்சர மந்திரத்தை செபித்து ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயன்றாள். அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக் கையில் எடுத்து, அவள் அக்குண்டலங்களை பெருமாளுக்கு அளித்தாள். அதனால் பெருமாள் ‘மகர நெடுங்குழைக் காதர்” என்ற திருநாமம் பெற்றார். அத்தீர்த்தத்துக்கும் மத்ஸ்ய தீர்த்தம் என்றும், தேவர்கள் ப10ச்சொரிய அழகுத் திருமேனியாக விளங்கின பெருமாள் ப10மாதேவியின் விருப்பப்படி காட்சியளித்து எடுந்தருளினார். ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் ப10மிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்று இத்தலம் பெயர் பெற்றது.
- :
ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில், தோற்றுப் போன அசுரர்கள் வருண
னுடன் போரிட்டு அவனை தோற்கடிக்க, தனது பாசத்தை இழந்த வருணன் திகைத்து நின்றார். தனது குருவான வியாழபகவானை சரணடைய, அவர் வருணனை ஸ்ரீபேரை சென்று பெருமாளை தவம் செய்க, என்றார். அவ்வாறு தவம் செய்து இழந்த பாசத்தையும், இழந்த நகரத்தையும் மீண்டும் பெற்றான். வருணன் தவம் செய்த தலமாதலால் இங்கு மழைவேண்டினால் பலன் கிடைக்கும். சுக்கிரனும் இங்கு அருள் பெற்றான். நம்மாழ்வார் தம் பாசுரங்களில் நாயக - நாயகி பாவத்தில் பாடியுள்ளார்.
-
"செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் - தோழீ‚ நாணும் நிறையும் இழந்ததுவே"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3359-69
- மொத்தம் 11 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.