ஸ்ரீவைகுண்டம்
- மூலவர் :
ஸ்ரீவைகுண்டநாதன், கள்ளப்பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
- தாயார்
வைகுந்தவல்லி, ப10தேவி (இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள்).
- தீர்த்தம் :
ப்ருகு தீர்த்தம், தாம்பரபரணி நதி.
- விமானம் : சந்த்ர விமானம்
- ப்ரத்யக்ஷம் : ப்ருகு சக்ரவர்த்தி, இந்த்ரன்.
- :
குறிப்பு: திருவைகுண்டம், ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்து}ர் செல்லும் பாதையில் ஸ்டேஷனிலிருந்து 2.5 கி.மீட்டர் தொலைவில் தாம்பரபரிணி வட கரையில் இக்கோயில் உள்ளது. சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. நீர் எங்கும் சூழ்ந்த இடத்தில் அரக்கன் சோமுகன், பிரம்மனின் படைப்புத்தொழில் ரகசியங்களையும் எடுத்து ஒளிந்து கொண்டான். பிரம்மன் பெருமாளை தவஞ்செய்ய ஏற்ற இடம் எது என்று தன் தண்டத்தை ஒரு பெண்ணாக்கி பார்த்து வரச் சொன்னார். அவள் தாம்பரபரிணி ஆற்றங்கரையே சிறந்தது என பிரம்மனிடம் கூறினான். அவன் அங்கு தவஞ் செய்ய, பெருமாள் பிரம்மனிடம் படைப்பின் ரகசியத்தை மீட்டுச் சேர்த்தார்.
- :
திருடன் காலதூஷகன், தினம் பெருமாளை வழிபட்ட பிறகே திருடச் செல்வான். திருடியபின் பாதியை பெருமாளுக்கு அளித்து வந்தான். ஒரு நாள் அரண்மனையில் திருடும்போது, காவலாளிகள் பிடிக்க, நாங்கள் காலது}ஷகனின் ஆட்களே என்றனர். எங்களுடன் வந்தால் அவனை காணலாம் என்றனர். இதனை அறியவந்த காலது}ஷகன் பெருமாளிடம் முறையிட்டு தன்னைக் காக்குமாறு வேண்டி நின்றான். பெருமாளே அவன் வேடத்தில் எதிரில் வர, காவலர்கள் அவனை மன்னனின் முன்நிலையில் நிறுத்தினர். மன்னன் அவனை உற்று பார்க்க, அந்நேரம் தனது சுயரூபத்தை காட்டியருள, மன்னன் அடிபணிந்து காரணம் கேட்டார். தர்மத்தை நீ மறந்தாய் அதை உனக்கு உணர்த்தவே கள்ளர் வேடத்தில் வந்தேன் என்று பெருமாள் கூறினார். மன்னனுக்கு அருள் புரிந்த திருக் கோலத்துடன் இங்கு எழுந்தருள கள்ளப்பிரான் எனப்பெயர் கொண்டான். பின்னர் மன்னனும் காலது}ஷகனும் சேர்ந்து இக்கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.
- :
பிரம்மனின் கமண்டல நீரையெடுத்து பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம் செய்ய கலச தீர்த்தம் என்றாயிற்று. பெருமாள் எல்லாத் திருத்தலத்திலும் ஆதிசேடனின் மேல் பள்ளிக் கொண்டிருப்பார். ஆனால் இத்தலத்தில் பெருமாளுக்கு ஆதிசேடன் குடை பிடிக்கிறான். சூரியனின் கதிர்கள் வருடத்தில் இரண்டு சமயங்களில் மூலவர் மேல் விழுகின்றன. நம்மாழ்வார் தம் பாசுரத்தில் இப்பெருமாளைப் பாடியுள்ளார்.
-
"புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று,
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே, என்னை ஆள்வாய் - எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப, நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப,
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப, நீ காண வாராயே"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3571, 3575
- மொத்தம் 2 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.