ஸ்ரீவரகுணமங்கை
- மூலவர் :
விஜயாஸனப் பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
- உத்ஸவர்:
- தாயார்
வரகுணவல்லித்தாயார் , வரகுணமங்கைத்தாயார், உபயநாச்சிமார் (தனிக்கோயில் நாச்சியார் இல்லை).
- தீர்த்தம் :
அக்நி தீர்த்தம், தேவபுஷ்கரிணி.
- விமானம் :
விஜயகோடி விமானம்
- ப்ரத்யக்ஷம் :
அக்னி, ரோமசமுனிவர், சத்தியவான்.
- :
திருவரகுணமங்கை, ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். திருவைகுண்டத்திலிருந்து கிழக்கே 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இன்று இந்த ஊரை நத்தம் என்று அழைக்கின்றனர்.
- :
வேதவித்து என்பவர் தமது கடமைகளை முடித்த பிறகு, பெருமாளை நோக்கி, ‘ஆஸனதை” என்ற மந்திரத்தை செபித்து தவஞ்செய்யலானார். அவ்விடத்தில் பெருமாளே முதியவராக வந்து ‘சத்யம், மகேந்திரம் என்ற இருமலைகளுக்கு நடுவில் விளங்கும் வரகுணமங்கையே ஆஸனதை என்ற மந்திர செபம் செய்ய ஏற்ற இடம் என்றதும், உடனே அவனும் கடுந்தவஞ்செய்யலானான். ஆஸன மந்திரத்தை செபித்து இறைவன் இங்கு வேதவித்துக்கு காட்சியளித்ததால் „விஜயாசனர்… என்ற திருநாமமும் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று.
- :
ரோமச முனிவர் இங்கு தவஞ்செய்கையில் சத்தியவான் என்ற அவரது சீடன் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அத்தீர்த்தக் கரையின் மறுபுறத்தில் ஒரு மீனவன் மீன்களைப் பிடித்து கரையில் உலர்த்திவிட்டு மீண்டும் வலை வீசும் போது அவனுக்குப் பின்னால் இருந்து பாம்பு தீண்டியது. அவன் இறந்த பிறகு வானுலகிலிருந்து வந்த தேவவிமாத்தில் ஏறி அந்த வேடன் சொர்க்கம் அடைந்தான். இதைக் கண்ட சத்தியவான் தன் குருவை உடனே அணுகி வேடனுக்கு எவ்வாறு சொர்க்கம் கிட்டியது என்று வினவ, முனிவர் தம் ஞான திருஷ்டியால் பார்த்ததை அவர் அவனிடம் கூறினார். முன் ஜென்மத்தில் அந்த வேடன் விதர்ப்ப நாட்டின் விசுவசகன் என்னும் மன்னனின் மைந்தனாக இருந்தான். இந்த ஜென்மத்தில் அவன் அன்று செய்த புண்ணித்தால் இத்தலத்தில் அவன் மோட்சம் அடைய பேறுபெற்றான் என்றார்.
- :
நம்மாழ்வார் இப்பெருமாளை மூவுலகத்தோரும் வியக்கும் அளவிற்கு இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான என்று பாசுரத்தில் பாடுகிறார்.
-
"புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று,
தெறிந்த என் சிந்தையகம் கழியாதே, என்னை ஆள்வாய் - எனக்கு அருளி
நளிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப, நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப,
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப, நீ காண வாராய"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3571
- மொத்தம் 1 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.