- மூலவர் :
ஸ்ரீநிவாஸன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
மாயக்கூத்தன்
- தாயார்
அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லி என்று இரண்டு உபயநாச்சியார்கள்.(தனிக்கோயில் நாச்சியார் கிடையாது.)
- தீர்த்தம் :
பெருங்குளம்
- விமானம் :
ஆநந்தநிலய விமானம்
- ப்ரத்யக்ஷம் :
ப்ருஹஸ்பதி.
- :
திருக்குளந்தை, ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். திருப்புளிங்குடியிலிருந்து நேராகச் செல்லும் சாலையில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் குமார் 11 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தீர்த்தமாக பெரிய குளம் என்ற ஏறி இருக்கிறது. எனவே இன்று பெருங்குளம் என்று அழைக்கப்டுகின்றது..
- :
குறிப்பு : வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுதவல்லியுடன் தனக்குப் புத்திரப்பேறு வேண்டி, இங்கு உள்ள பொய்கையில் நீராடி நாள்தோறும் பெருமாளை வேண்டினான். பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு ‘கமலாவதி” என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தக்க பருவமடைந்த பிறகு அவளுக்கு திருமணப் பேச்சை எடு;த்தபோது, தான் மானிடரை மணக்க விரும்பவில்லை என்றும், பெருமாளையே மணப்பேன் என்று கூறி கானகம் சென்று கடுந்தவம் செய்தாள். கமலவதிக்கு பெருமாள்முன் எழுந்தருளி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அவள் தன் எண்ணத்தை கூறினாள். பெருமாள் அவளை தம் கௌஸ்துப மணியோடு ஆலிங்கனம் செய்து தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். கன்னி தவம் செய்த வனம் ஆதலால் பாலிகாவனம் எனப்பெயர் பெற்றது. ஒரு நாள் வேதசாரன் மனiவி குமுதவல்லியுடன் நீராடச் செல்லும் பொழுது அஸ்மசாரன் அவளைக் கவர்ந்து சென்று இமயமலைக் குகையில் சிறைவைத்தான். இச்செய்தி அறிந்த வேதசாரன் பௌர்ணமியில் பெருமாளை திருமஞ்சனம் செய்து தனது மனக்குறையை தெரிவித்து பெருமாள் அருள் புரிய வேண்டினான்.
- :
உடனே பெருமாள் கருட வாகனத்தில் ஏறி, இமயமலைக்குச் சென்று குமுதவல்லியை மீட்டு வர, இதனை அறிந்த அஸ்மசாரன் பாலி காவனம் வந்தான். பெருமாளுடன் இங்கு கடுமையாக போர் செய்தான். பின்னர் பெருமாள் அவனது இரு கால்களையும் பிடித்து தலையில் அடித்து அவன்மீது நின்று நர்த்தனம் ஆடினார். சோரனான (அஸ்மசாரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இங்குள்ள பெருமாளுக்கு சோரநாதன் தமிழில் மாயக்கூத்தன் என்றாயிற்று.
- :
நம்மாழ்வார் இப்பாசுரத்தில் மாயக் கூத்தனான பெருமாளை பாடியிருக்கிறார்.
-
"கூடச் சென்றேன் - இனிஎன் கொடுக்கேன்? கோல்வளை, நெஞ்சத் தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பரிசு அழிந்தேன் -
மாடக்கொடி மதிள்தென் குளந்தை வண்குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழிவலவனை ஆதரித்தே"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3561
- மொத்தம் 1 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.