|
திருக்கோளூர்
- மூலவர் :
வைத்தமாநிதி பெருமாள், நிNக்ஷபவித்தன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
குமுதவல்லி, கோளுர்வல்லி ( 2 தனிக்கோயில் நாச்சியார்கள்).
- தீர்த்தம் :
குபேர தீர்த்தம், தாமிரபரணியாறு
- விமானம் :
ஸ்ரீகர விமானம்
- ப்ரத்யக்ஷம் :
குபேரன், மதுரகவி ஆழ்வார்
- :
குறிப்பு : நவநிதிகளுக்கும் அதிபதியான குபேரன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். ஒரு சமயம் அவன் சிவனை வழிபடும் பொழுது, சிவன் தன் பத்தினியான உமையவளோடு இருக்கையில், உமையவளின் அழகில் குபேரன் மயங்கி ஒற்றகை; கண்ணால் பார்த்தான். உமையவள் கோபத்தில், ஒரு கண் தெரியாமல், உருவம் விகாரம் அடைய, பின் உன்னை விட்டு நவநிதிகளும் விலகும், என்று சாபமிட்டான். உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்றது. பின் நதிக்கரையில் நீராடிப் பெருமாளை வேண்ட, காட்சி கொடுத்து அவன் நவநிதிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்து, அவைகளை அரவணைத்துப் பள்ளி எழுந்தருளினான். இதனால் வைத்தமாநிதிப் பெருமாள் எனப் பெயர் பெறுகிறார்.
- :
நவநிதிகள் இங்கு தீர்த்தமாடியதால் இது நிதித் தீர்த்தம் எனப்படும். தனது தவறுணர்ந்த குபேரன் பார்வதியின் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்க, பார்வதி நவநிதிகளை மட்டும் மீண்டும் பெற வழிஉள்ளது. தாம்பரபரிணி தென்கரையில் உள்ள பெருமாளை தவம் செய்து பெற்றுக் கொள் என்றாள். திருக்கோளுர் வந்து சேர்ந்த குபேரன் வைத்த மாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ்செய்து அதைப் பெற்று ஊர் திரும்பினான்.
- :
தர்ம குப்தன் தன் ஏழ்மையில், குல குருவாகிய பரத்வாஜ முனிவரைச் சரணடைய, தன் ஞான திருஷ்டி யில் போன ஜென்மத்தில் அவன் பெரிய செல்வந்தனாக இருந்து யாருக்கும் தர்மம் செய்யாததால், உன் செல்வம் இழந்து நோய்வாய்ப்பட்டு இறந்தாய் என்றார். பிறகு தர்மகுப்தன் இப்பெருமாளைச் சேவித்து எண்ணற்ற பணிகளைச் செய்ய, ஒரு நாள் நீராடச் செல்கையில் மாதனங் கண்டெடுத்து, பின்னர் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் வாழ்ந்தான் எனக் கூறப்படுகிறது.
- :
நம்மாழ்வார் இப்பாசுரத்தில் எல்லாவற்றையும் கண்ணனாகப் பார்த்து விட்டால் நமக்கு துன்பமே கிடையாது என்று பாடுகிறார்.
-
"உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும், எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றுஎன்றே, கண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,
திண்ணம் என இளமான் புகும் ஊர் - திருக்கோளுரே"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3293 - 3303 , 3473
- மொத்தம் 12 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|