|
திருவனந்தபுரம்
- மூலவர் :
அநந்தபத்மநாபன், புஜங்கசயனம் (அநந்த சயனம்), கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
ஸ்ரீஹரிலக்ஷ்மி.
- தீர்த்தம் :
மத்ஸ்ய தீர்த்தம், பத்ம தீர்த்தம், வராஹ தீர்த்தம்
- விமானம் :
ஹேமகூட விமானம்.
- ப்ரத்யக்ஷம் :
இந்த்ரன், சந்த்ரன், ஏகாதச ருத்ரர்கள்
- :
குறிப்பு : திவாகர முனிவர் துளு(கேரளாவின் ஒரு பகுதி) வம்சம் சேர்ந்தவர், திருப்பாற்கடல் வண்ணனை காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவஞ் செய்தார். அவருக்கு மகாவிஷ்ணு குழந்தையாக தோன்றி அருள, அக்குழந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என கேட்டார். தனக்கு சிறிது துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகக் கூறி, அவரிடம் அக்குழந்தை வளர்ந்தது. முனிவரின் ப10சை நேரத்தில் அக்குழந்தை ஒரு சாளக் கிராமத்தை எடுத்து கடிக்க, முனிவர் கண்டித்தார். அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர, என்னைக் காண வேண்டுமென்றால் அனந்தன் காட்டுக்கு வரவேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்தது.
- :
முனிவரும் பக்தி காரணமாக, காட்டுக்குச் சென்று, கடலோரமுள்ள ஒரு இலுப்பை மரப்பொந்தில் அக்குழந்தையைக் கண்டார். அம்மரம் திடீரென நிலத்தில் விழுந்தது. அனந்தசயன வடிவமாக இறைவன் காட்சியளித்தார். தலை திருவள்ளத்திலும், பாதம் திருப்பாப்புரத்திலும், உடல் திருவனந்தபுரத்திலும், அமையக் கண்டு வியந்து, தனக்கு மிகச்சிறு வடிவாகக் காட்சியளிக்க வேண்ட, பெருமாள் தம்மைச் சுருக்கி காட்சி அளிக்க, இம்முனிவரின் பால் பற்றுகொண்ட எம்பெருமான் தனக்கு துளுவம்சத்தவர் நித்ய ப10சை செய்யவேண்டும் என்று கூறினதாக ஐதீகம்.
- :
இதுபோல, வில்வமங்கலத்தில் நம்பூதிரி வகுப்பைச் சார்ந்த ஒருவர் அருகிலிருந்த மாமரத்தில் சில மாங்காய்களைப் பறித்து ஒரு சிரட்டையில் வைத்து நைவேதனம் செய்ய, இதை நினைவு கூறும் வகையில் இன்றும் தங்கத்தாலான தேய்காய்ச் சிரட்டையில் மாங்காய் ஊறுகாய் வைத்து நைவேத்தியம் நடைபெறுகிறது. இதனால் இக்கோயிலின் பூசை உரிமைகள் நம்பூதிரிகளிடமும், துளுவம்சத்தினற்கும் ஒப்படைக்கப்பட்டது.
- :
நம்மாழ்வார் அனந்த பத்மநாபனை அனந்தபுரம் சென்று சிக்கெனப்போய், அவனைச் சேவிக்க சொல்லி இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
-
"ஊரும்புள் கொடியும் அ‡தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் தின்னம், நாம் அறியச் சொன்னோம்
பேரும்ஓர் ஆயிரத்துள்; ஒன்று நீர் பேசுமினே
"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3678 - 88
- மொத்தம் 11 பாசுரங்கள் .
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|