|
திருக்காட்கரை
- மூலவர் :
காட்கரையப்பன், நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி.
- தீர்த்தம் :
கபில தீர்த்தம்.
- விமானம் :
புஷ்கல விமானம்
- ப்ரத்யக்ஷம் :
கபிலமுனி.
- :
குறிப்பு: வாமன அவதாரத்தில் பெருமாள் மூவடிமண்வேண்டி மன்னன் மாவலியிடம் கேட்க, பெருமாள் ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து மூன்றாவது அடியை மாவலியின் தலையில் வைக்க முற்பட்டதும், வந்திருப்பது மகாவிஷ்ணுவே என்றறிந்த மாவலி எம்பெருமானை வணங்கி, நான் ஆண்டுக்கு ஒரு முறை உலக மக்களைச் சந்திக்க விரும்புகிறேன். அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான்.
- :
அவ்வாறாயின் இன்றைய தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக் கொண்டாடுவர் என்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து மக்கள் ஓணம் விழாவெடுக்கின்றனர். இக்கோயிலில் நடைபெறும் மிகப்பெரும் இத்திருவிழாவிற்கு மாகபலியும் மக்களைச் சந்திக்க வருவதாக ஐதீகம். மாவலியின் சிறந்த நிர்வாகத்தை மக்கள் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறார்கள்.
- :
இத்தலத்தில் ஒரு விவசாயி வாழை மரங்களை நட்டுப் பயிர் செய்து வந்ததாகவும், அவன் வளர்த்த அவ்வாழை மரங்கள் குலை தள்ளாமல் தொடர்ந்து அழிவதைக் கண்டு, அவன் பொன் வாழைக்குலைகள் செய்து அப்பனுக்குச் சமர்ப்பித்தான். பெருமாளின் அருட்பார்வையால் வாழை மரங்கள் வளர்ந்து குலை தள்ளியதாகவும், பெருமாளிடம் நேர்ந்து இந்த வாழைப் பழங்கள் உருவானதால் இதற்கு நேந்திரம் வாழைப்பழம் என்று பெயருண்டாயிற்று.
- :
நம்மாழ்வார் இப்பெருமாளைக் கருவளர் மேனியன் என இப்பாசுரத்தில் பாடுகிறார்.
-
நம்மாழ்வார் இத்தலத்தை நயம்படத் தன் பாசுரத்தில் பாடியுள்ளார்.
"திரு அருள் செய்பவன் போல என்னுள் புகுந்து,
உருவமும் ஆழ் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென்காட் கரை என் அப்பன்,
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே?
"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3612 - 22
- மொத்தம் 11 பாசுரங்கள் .
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|