|
திருமூழிக்களம்
- மூலவர் :
திருமூழிக்களத்தான், அப்பன், ஸ்ரீஸ_க்திநாதப்பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
மதுரவேணி நாச்சியார்.
- தீர்த்தம் :
பெருங்குளம், சங்க தீர்த்தம், சிற்றாறு.
- விமானம் :
ஸெளந்தர்ய விமானம்
- ப்ரத்யக்ஷம் :
ஹாரீதமஹரிஷி.
- :
குறிப்பு : ஹரீத மகரிஷி ஸ்ரீமந்நாராயணனை நோக்கி இவ்விடத்தில் தவமிருக்க, இவரின் தவத்தை மெச்சிய பெருமாள் இங்கு எழுந்தருளி உமது விருப்பம் என்ன என்று வினவ, எம்பெருமானை எல்லோரும் எளிதில் அடையக்கூடிய வழியை உபதேசிக்குமாறு பிரார்த்தனை செய்தார். அதற்கு அவரவர்கள் கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப (வர்ணாசிரம தர்மப்படி) கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளின் சமயச்சார்புள்ள செயல்கள் போதித்தார். இவ்வாறு திருமொழியை அளித்தார்.
- :
இவ்விடத்திற்கு "திருமொழிக்களம்" என்றும், இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளுக்கு "திருமொழிக்களத்தான்" என்றும் பெயராயிற்று. இந்தப் பெயர் காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று.
- :
இராமன், இலக்குவன் சீதையோடு வனவாசம் செல்லும்போது, சித்திரகூடத்தில் தங்கியிருந்த சமயம், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துப்போக பரதன் வந்துகொண்டிருந்த காட்சியைக் கண்ட இலக்குவன், பரதன் இராமனுடன் யுத்தத்திற்கு வருகிறான் என்று நினைத்து பரதனைக் கொல்ல முற்பட்டான். இந்த பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக இலக்குவன் திருமூழிக்களத்து அப்பனிடம் வந்து அடிபணிந்து நின்றான். அப்போது பரதனே இலக்குவனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதால், இத்தலம் திருமொழிக்களம் ஆயிற்று என்றும் கூறுவர். இலக்குவனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலம் இது. இலக்குவன் இத்தலத்துக்குப் பல திருப்பணி செய்தான்.
- :
நம்மாழ்வார் தன்னை நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும் எண்ணி இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
-
"தெளி விசும்பு கடிதுஓடி, தீ வளைத்து, மின் இலகும்
ஒளி முகில்காள்‚ திருமூழிக் களத்து உளையும் ஒண் சுடர்க்கு,
தெளி விசும்பு திருநாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளி வார்கள் குழலார்க்கு, என் து}து உரைத்தல் செப்புமினே".
- மங்களாசாஸனம் :
- திருமங்கையாழ்வார் : 1553 , 2061 , 2674 (129) .
- நம்மாழ்வார் : 3623 - 33 .
- மொத்தம் 14 பாசுரங்கள் .
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|