|
திருப்புலியூர்
- மூலவர் :
மாயப்பிரான் , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
பொற்கொடி நாச்சியார்
- தீர்த்தம் :
ப்ரஜ்ஞாஸரஸ், ப10ஞ்சுனை தீர்த்தம்.
- விமானம் :
புருஷோத்தம விமானம்.
- ப்ரத்யக்ஷம் :
ஸப்தரிஷிகள்.
- :
குறிப்பு : ஒரு சமயம் சிபி மன்னனின் மைந்தன் அரசாண்ட பொழுது, நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அச்சமயம் அந்நாட்டிற்கு வருகைத் தந்த ஸப்தரிஷிகள் (அத்ரி, வசிஷ்டர், சாச்யபர், கௌதமர், பரத்வாஜர், விசுமாமித்திரர், ஜமதக்னி) உணவு சரியாக கிடைக்காமல், துன்பப்படுவதை அறிந்த மன்னன், அவர்களுக்கு உணவும், பல கிராமங்களும் தானமாக அளக்கமுன் வந்தான். ஆனால் சப்தரிஷிகள், „நாட்டில் வறுமை உள்ள பொழுது, அந்நாட்டு அரசனிடம் தானம் பெறலாகாதுƒ அது பாவம்… என்று மறுத்து, தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
- :
எவ்வாரேனும், ரிஷிகளுக்கு உதவ நினைத்த மன்னன், மந்திரிகள் மூலமாக பழங்களுக்குள் தங்கத்தை மறதை;து வைத்து, அம்முனிவர்களுக்கு அனுப்ப, அவர்கள் இதை ஏற்க மறுத்தனர். மிக சினம் கொண்ட மன்னன், ரிஷிகளை தண்டிக்க நினைத்து, ஒரு யாகம் செய்து, அதில் தோன்றிய „க்ருத்யை… என்ற தீய ஆவியை முமுனிவர்களை அழிக்க ஏவினான். மகாவிஷ்ணுவின் அருள், இந்திரனை சந்நியாசி உருவில் அனுப்பி, தீய சக்தியை கொல்லச் செய்து, ரிஷிகளை காப்பாற்றியது. அவர்கள் பெருமாள் ஒருவன்தான் பரம்பொருள் என்ற முடிவிற்கு வந்ததால், மகாவிஷ்ணு ரிஷிகளின் ஆழ்ந்த பத்தியை மதித்து, „மாயப்பிரானாக…காட்சியளித்தார்.
- :
பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமனும் திருமாலைக்குறித்து தவம் புரிந்தான். பீமனை;ப போன்றே அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பைகொண்டு திகழ்கிறது இத்தலம்ƒ மற்றும் பெருமாளுக்கு நிவேதனம் பெரும் அளவில் செய்யப்படுவதாக கூறுவர்.
- :
நம்மாழ்வார் பெருமாளை நாயகனின் அருளைப் பெற்றுவிட்ட நாயகியைப் போலவும், பின்னர் இப்பாசுரத்தில் திருப்புலிய10ர்ப் பிரானே, மாயவனே, தன் திருவருளை இந்தத் தலைவியின்பால் புரிந்து விட்டான் என்றும் பாடியுள்ளார்.
-
"
அன்றி மற்றோர் உபாயம் என், இவள்அம் தண் துழாய் கமழ்தல் -
குன்றமா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி,
தென் திசைத் திலதம் புரை குட்ட - நாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே?
"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3535 - 45
திருமங்கையாழ்வார் : 2673 (71)
- மொத்தம் 12 பாசுரங்கள் .
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|