|
திருச்செங்குன்றூர்
- மூலவர் :
இமையவரப்பன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
செங்கமலவல்லி.
- தீர்த்தம் :
சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு.
- விமானம் :
ஜகஜ்ஜோதி விமானம்.
- ப்ரத்யக்ஷம் :
ருத்ரன் (சிவன்).
- :
குறிப்பு : பாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமன், "அஸ்வத்தாமன் இறந்து விட்டான்" என்று கூறினால் தந்தையின் மனம் நிலைகுலைந்து தடுமாறும். அந்தச் சமயம் நாம் அவரை கொன்றுவிடலாம் என்று திட்டம் போட்டனர் பாண்டவர்கள். அதன்படி போரில் அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்டது என்பதைத் தர்மன் "அஸ்வத்தாமன்" என்ற சொல்லைப் பலமாக கூவி, "என்ற யானை இறந்து விட்டது" என்பதை மிக மெல்லிய குரலில் சொன்னான். மகன்தான் இறந்தான் என்று, துரோணர் வேதனை தாங்காமல் துவண்டு விழுந்தபோது அவர் கொல்லப்பட்டார்.
- :
தான் சொன்ன பொய்யே துரோணரின் இறப்புக்குக் காரணமானதை எண்ணி தர்மன் அதற்குப் பெரிதும் மனம் வருந்தி போர் முடிந்த பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக தவமிருந்ததையும் அப்போது சிதிலமடைந்திருந்த இத்தலத்தை புதுப்பித்தான் எனவும், இங்கு சொல்லப்படுகிறது.
- :
தர்மன் வருவதற்கு முன்பே இத்தலம் மிகச் சிறப்புற்றிருந்தது எனலாம். தேவர்கள் இங்கே குழுமியிருந்து பெருமாளை குறித்து தவம் புரிந்தனர் எனவும் அவர்களுக்கு எம்பெருமான் "தந்தை ஒப்பத் திகழ்ந்த பெருமாள்" இவ்விடத்திலே அவர்களுக்கு காட்சி கொடுத்ததாகவும், அதனால் இப்பெருமாளுக்கு "இமையவரப்பன்" என்ற பெயர் விளங்கியதாக கூறப்படுகிறது.
- :
நம்மாழ்வார் 11 பாசுரங்களால் இத்திருத்தலத்தை பாடியுள்ளார்.
-
நம்மாழ்வார் இப்பெருமாளின் சிவந்த திருவடிகளை தரிசித்தேன் என்று இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
"
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு - அதனுள் கண்ட அத்திருவடி என்றும் -
திருச் செய்ய கமலக் கண்ணும், செவ்வாயும், செவ்வடியும், செய்ய கையும்,
திருச்செய்ய கமல உந்தியும், செய்ய கமல மார்பும், செய்ய உடையும்,
திருச்செய்ய முடியும், ஆரமும், படையும் திகழ - என் சிந்தையுளானே.
"
- மங்களாசாஸனம் :
- 3480 - 90
- மொத்தம் 11 பாசுரங்கள் .
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|