திருநாவாய்
திருநாவாய் கேரள மாநிலத்தின் ஷோரனு}ரிலிருந்து 37 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. திருநாவாய் ரயில் நிலையத்திலிருந்து 1.6 கி.மீட்;டர் தொலைவில் உள்ளது.
மூலவர் : நாவாய் முகுந்தன், நாராயணன், நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் : மலர்மங்கை நாச்சியார் , சிறுதேவி.
தீர்த்தம் : செங்கமல ஸரஸ்.
விமானம் : வேத விமானம்.
ப்ரத்யக்ஷம் : லஷ்மி, கஜேந்த்ரன், நவயோகிகள்.
இத்தலம் பாரதப் புழை ஆற்றங்கரையின் மேல் இருக்கிறது. இந்த ஊர் எதிரே சிவனுக்கும் பிரம்மனுக்கும் கோயில்கள் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் எனவும் கருதப்படுகிறது. இத்தலத்தில் நவயோகிகள் யாகம் செய்து, நீண்ட காலம் தங்கிய இடமாததால், திருநவயோகி நகரம் என்ற நாமம், இன்று திருநாவாய் என்று மருவி வழங்கப்பெறலாயிற்று. இந்த Nக்ஷத்திரத்தில் காசிக்கு ஈடாக மதித்து, சிராத்தங்களை செய்கிறார்கள்.
ஒரு சமயம் மகாலட்சுமியும், கநே;திரனும் செங்கமல ஸரஸ்ஸில் தாமரைப் ப10க்களைப் பறித்து பகவானை அர்ச்சித்து வந்தனர். ஒரு நாள் கஜேந்திரனுக்குப் ப10 கிடைக்காமல் போயிற்று. இதனால் கஜேந்திரன் தனது நிலையை விளக்கி பெருமாளிடம் முறையிட்டான். பெருமாள் மகாலட்சுமிக்கும், கஜேந்திரனுக்கும் காட்சி கொடுத்து, தாயார் தன்னிடமே தங்கி, பக்தனின் மலர்களை ஏற்றுக்கொள்ளுமாறும், அவனுடன் தாயார் போட்டியை தவிற்க்கலாம் என்று அருள, கஜேந்திரன் மகிழ்ந்து, ப10சையை தொடர்ந்து செய்யலானான். இதனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் மலையாள திவ்யதேசத்தில் லட்சுமி தேவிக்குத் தனி சந்நிதி உள்ளது.
மார்க்கண்டேயருக்கு இங்கு பெருமாள் அபயமளித்ததை நினைவ10ட்ட, ஒரு சிலையில் அவர் பெருமாளை சேவித்த வண்ணம் சித்திரிக்கப் பட்டுள்ளது.
நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை நாவாய் உறைகின்ற என் நாராயணனே என்னை உன் அடியவனாக ஏற்று, அருள் புரிந்து அருள வேண்டுகிறேன் எனப் பாடியுள்ளார்.
கோ ஆகிய மாவலியை நிலம் கொண்டாய் ‚
தேவாசுரம் செற்றவனே‚ திருமாலே‚
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பி‚
ஆ‚ ஆ‚ அடியான் இவன் என்று அருளாயே‚
மங்களாசாஸனம் :
திருமங்கையாழ்வார் : 1520 , 1856.
நம்மாழ்வார் : 3634 - 44
மொத்தம் 13 பாசுரங்கள்.