திருவல்லவாழ்
- மூலவர் :
திருக்குறளப்பன், திருவாழ்மார்பன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
கமலவல்லி நாச்சியார்
- தீர்த்தம் :
லக்ஷ;மீ தீர்த்தம் என்ற அழகிய பெரிய புஷ்கரிணி.
- விமானம் :
இந்த்ரகல்யாண விமானம்
- ப்ரத்யக்ஷம் :
விந்தை, காரி, உடையநங்கை, கருடன்.
- :
குறிப்பு : மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டு உள்ளதால் இவருக்கு திருமஞ்சனம் இல்லை.
- :
ஸ்ரீரங்கம், திருமலைக்கு இணையான திவ்ய தேசம். அழகிய பெரிய புஷ்கரிணி கரையில் மகிமை வாய்ந்த அரசமரம் விசேஷம். நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையின் அவதார தலம் இது. அவருடைய திருமாளிகை, இங்கு வாயு மூலையில் இருக்கிறது. அங்கு, நம்மாழ்வார் குழந்தையாகத் தவழும் அழகிய விக்கிரகம் உள்ளது. நம்மாழ்வாரின் அவதார Nக்ஷத்திரம். அவர் இங்குதான் திருவாய்மொழியை அருளிச் செய்தார். கோயில் முன் மண்டபத்தில் தசாவதாரம், உள்படச் சிற்பங்கள் சிறப்பு.
- :
சப்தரிஷிகள் எழுவரும் பெருமாளைக் காணும் பொருட்டு, சுசீந்திரத்திற்கு அருகில் உள்;ள ஆஸ்ரமம் என்ற இடத்தில் தவஞ்செய்ய, இறைவன் சிவரூபமாய் காட்சியளிக்க ,தாங்கள் மகாவிஷ்ணுவை தரிசிக்க விரும்பியதை கூற, பிறகு சுசீந்தரத்திற்கு அருகில் உள்ள சோம தீர்த்தத்தில் மீண்டும் தவஞ்செய்ய, ஸ்ரீமந்நாராயணன் மகாவிஷ்ணுவாக அவர்களுக்கு காட்சி கொடுக்க, இங்கு இதே போன்ற திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளி அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டனர். இதனால் தான் இப்பெருமாளை சுற்றி 7 முனிவர்கள் சூழ்ந்திருப்பதை காணமுடிகிறது.
- :
பிறிதொரு சமயம் பெருமாள் நரசிம்ம அவதாரங்கொண்டு இரண்யனை வதம் செய்துவிட்டு, மிகவும் கோபம் அடங்காதவராய் இருந்த போது லட்சுமி அவர் சாந்த மூர்த்தியாக வேண்டுமென தவம் செய்தார். பின்பு பிரகலாதனின் பிரார்த்தனைக்கும் இணங்கி சாந்தமடைந்த பெருமாள் தேவியைத் தேடி இவ்விடம் வர, லட்சுமி மகிழ்ந்து பெருமாளின் திருமார்பில் நித்யாவாசம் கொண்டாராம். ஆகையினால் இப்பெருமாளுக்கு „திருவாழ்மார்பன்… என்றும், திருவாகிய லட்சுமி தனது பதியாகிய மகாவிஷ்ணுவை சார்ந்ததால் „திருப்பதி சாரம்… எனவும் இத்தலம் பெயர் பெற்றது. இத்தலத்தில் விபீடணன் விருப்பத்துக்கு இணங்க, மூலவருக்கு அருகில் இராமர், இலக்குவன், சீதையுடன் பட்டாபிஷேக கோலம் கொண்டுள்ளார்.
-
நம்மாழ்வார் இத்தலத்தை நயம்படத் தன் பாசுரத்தில் பாடியுள்ளார்.
"வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்ƒ செய்வது என் -
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து, இங்கு உம்மோடு
ஒரு பாடு உழல்வான், ஓர் அடியானும் உளம் என்றே?"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3678 - 88
- மொத்தம் 11 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.