திருவட்டாறு
- மூலவர் : ஆதிகேசவப் பெருமாள், புஜங்கசயனம், மேற்கே திருமுக மண்டலம்.
- தாயார்: :
மரகதவல்லி நாச்சியார்.
- தீர்த்தம் :
கடல்வாய்த் தீர்த்தம், வாட்டாறு, ராமதீர்த்தம்.
- விமானம் :
அஷ்டாங்க விமானம், அஷ்டாக்ஷர விமானம்.
- ப்ரத்யக்ஷம் :
பரசுராமன், சந்திரன்.
-
திருவாட்டாறு, கேரளமாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் - நாகர்கோயில் ரயில் பாதையில் அமைந்திருக்கிறது. இத்தலம் தொட்டிபட்டணத்திற்கு வடக்கே 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
-
குறிப்பு : 16000 சாள கிராமங்களைக் கொண்ட மூலவர் கடு சர்க்கரை, யோக முறையில் உருவானதால் அவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. மூலவரின் திருமுகத்தில் சூரியனின் கதிர்கள் இயற்கையாகவே சில குறிப்பிட்ட நாட்களில் விழும் என்றும் கூறுவர். உற்சவருக்கு அருகில் தங்க கருடன் விசேஷம். வருடத்தில் இரண்டு விழா காலத்தில் பெருமாள் கருட்ன மேல் வீதி வலம் வருவது கண் கொள்ளாக் காட்சி.
-
இக்கோயில் திருவனந்தபுரம் கோயிலைப் போன்றே கட்டப்பட்டுள்ளது. இப்பெருமாளையும் மூன்று வாசல்கள் வழியே சேவிக்க வேண்டும். ஆனால் இரு கோயில்களுக்கும் வேறுபாடுகள் சில உண்டு. இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்க, இதில் ஒரு தலையைத்தான் காணமுடியும். பெருமாளின் கீரிடமும் பாதிதான் தெரியும். அவர் நாபிக் கமலத்தில் பிரம்மன் இல்லை. சிவலிங்கம் பெருமாளின் திருவடிகளுக்கு அருகில் உள்ளது. இது மேற்கு நோக்கிய சந்நிதி. ஸ்ரீ ஆதி அனந்தபுரம் என்று இக்கோயில் வழங்கப்படுகின்றது. சந்திரனும், பரசுராமனும் இத்தலத்து பெருமாளை வழிபட்டு தவஞ்செய்து அருள்பெற்றனர்.
-
பிரம்மனின் வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்றும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடைய10று
விளைவித்து, அதனோடு தேவர்களையும், விண்ணுலகையும் அச்சுறுத்தவே, அனைவரும் பெருமாளிடம் சென்று முறையிட்டார்கள்.
-
இதனால் பெருமாள் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி அவன் மீது படுத்துக் கொள்ள, கேசியும் அவள் தோழி கோதை, பரளி, கோதை என்னும் நதிகளாக உருவெடுத்து வேகமாக ஓடிவர, ப10மாதேவி செயலை உணர்ந்த இரண்டு நதி தேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் வந்தபடியால், இவ்விடம் „வட்டாறு… என ஆயிற்று. கேசனை ஒடுக்கியதால் பெருமாள் இங்கு „ஆதிகேசவர்… என்றாகிறார்.
-
நம்மாழ்வார் பாசுரங்களில், பெருமாள் நெஞ்சில் மங்கை இருப்பதுபோல், த்ன நெஞ்சில் இத்திருவட்டாறு பெருமாள் பிரியாமல் இருப்பதாகப் பாடியுள்ளார்.
-
திகழ்கின்ற திரு மார்பில் திருமங்கை - தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறுƒ
புகழ்கின்ற புள் ஊர்தி, போர் அரக்கர் குலம் கெடுத்தான்,
இகழ்வு இன்றி, என் நெஞசத்து எப்பொழுதும் பிரியானே.
- மங்களாசாஸனம் :
-
நம்மாழ்வார் : 3722 - 32 - 11 பாசுரங்கள்.
-
- மொத்தம்: 11
பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.