திருக்கடித்தானம்
- மூலவர் : அத்புத நாராயணன் (அம்ருத நாராயணன்), நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார்: கற்பகவல்லி. :
- தீர்த்தம் : பூமி தீர்த்தம்.
- விமானம் : புண்யகோடி விமானம்.
- ப்ரத்யக்ஷம் : ருக்மாங்கதன்.
-
திருக்கடித்தானம், கேரள மாநிலத்தில் திருவல்லாவிற்கு அருகில் இருக்கும் செங்கணாச்சேரிக்குக் கிழக்கே 3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
-
குறிப்பு : இங்கு நரசிம்மன், கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொரு பூசையிலும் ஸ்ரீமந்நாராயணீயத்தில் உள்ள „நரசிம்மர் து}ணிலிருந்து வெளிவரும்… 10 சுலோகங்கள் பாராயணம் செய்யப்படுகிறது. கோயிலில் உள்ள சுவரோவியங்கள், மரச்சிற்பங்கள் விசேமானவை.
பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம், புதுப்பிக்கப்பட்டது என்றும், இங்குள்ள கிருஷ்ணன் சந்நிதியை சகாதேவனே கட்டியதாகவும் கூறப்படுகிறது. சகல சாஸ்திரங்கள் அறிந்தவனாகவும், விளங்கிய சகாதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த கிருஷ்ணன் சிலை ஒவ்வொரு 60 ஆண்டுகட்கு ஒரு முறையும் புதிய சக்தியைப் பெற்றுக் கொண்டே சென்று கலியுகம் முடியும் நேரத்தில் ஜோதிமயமாய் மாறி விண்ணுள் மறையும் என்று கருதப்படுகிறது.
சூரிய வம்சத்து மன்னனான ருக்மாங்கதன் ஆட்சி காலத்தில், அவன் நந்தவனத்தில் ப10த்த அரிதான ப10க்களை யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்தனர். தனது நந்தவனத்தில் மலர்கள் காணாமல் போவதை அறிந்த மன்னன், அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்ள, விண்ணுலகம் செல்ல இயலாத நிலை தேவர்களுக்கு ஏற்பட, இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று ருக்மாங்கதன் கேட்க, ஏற்கனவே ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும்பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்களுக்கு அளித்தால்தான் அவர்கள் மீண்டும் விண்ணுலகம் செல்ல முடியுமென்று தேவர்கள் தெரிவித்தனர். உடனே ருக்மாங்கத மன்னன் இத்தலத்து பெருமாள் முன்னே தேவர்களை நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின் பலனை அளித்த பின் அவர்கள் விண்ணுலகை சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு நாழிகையில் நடைபெற்றதால் இத்தலம் „திருக்கடித்தானம்… என்று பெயர் பெற்றது. நாம் இத்தலத்தில் தவஞ்செய்தால் ஒரு நாழிகையில் நமக்கு பெருமாளின் அருள் கிடைக்கும்.
நம்மாழ்வார் எல்லா இடத்திலும் பகவான் உறைந்திருக்கிறார் என்று இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
-
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் -
வான், இந் நிலம், கடல் - முற்றும் எம் மாயற்கே
ஆன விடத்தும், என் நெஞ்சம் திருக்கடித் -
தான நகரும் தனதாயப் பதியே‚
- மங்களாசாஸனம் :
-
மங்களாசாஸனம் :
நம்மாழ்வார் : 3502 - 12 - 11 பாசுரங்கள்.
-
- மொத்தம்: 11
பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.