Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
காப்பிடல்
 தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம: !
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி !!
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாசுரங்கள்
*இந்திரனோடு பிரமன் ஈசனிமையவரெல்லாம்
மந்திர மாமலர்கொண்டு மறைந்துவராய் வந்துநின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளரை நின்றாய்!
அந்தியம்போதிதுவாகும் அழகனே! காப்பிடவராராய்  . ..... . . . . 1 .

கன்றுகளில்லம் புகுந்து கதறுகின்ற பசுவெல்லாம்
நின்றொழிந்தேனுன்னைக் கூவி நேசமேலொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேலந்திப்போது மதிள்திருவெள்ளறை நின்றாய்!
நன்றுகண்டாயென்தன் சொல்லு நானுன்னைக் காப்பிடவாராய்.. 2 .

செப்போது மென்முலையார்கள் சிறுசோறுமில்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரைப்பப்போய் அடிசிலுமுண்டிலையாள்வாய்!
முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நானொன்றும் செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய்...3

கண்ணில் மணல்கொடுதூவிக் காலினால் பாய்ந்தனையென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமைசெய்வாய்
வண்ணமே வேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவராராய் ...4

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாமுன்மேலன்றிப்போகாது எம்பிரான்! நீயிங்கேவாராய்
நல்லார்கள் வெள்ளறைநின்றாய்! ஞானச்சுடரே உன்மேனி
சொல்லார வாழ்த்திநின்றேத்திச் சொப்படக் காப்பிடவராராய் ...5

கஞ்சன் கறுக்கொண்டுநின்மேல் கருநிறச் செம்மயிர்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தான் என்பதோர் வார்த்தையுமுண்டு
மஞ்சுதவழ் மணிமாட மதிள்திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சவன் நீயங்குநிற்க அழகனே! காப்பிடவாராய். ....................6

கள்ளச்சகடும் மருதும் கலக்கழியவுதை செய்த
பிள்ளையரசே! நீ பேயைப்பிடித்து முலையுண்டபின்னை
உள்ளவாறொன்றுமறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்!
பள்ளிகொள்போதிதுவாகும் பரமனே! கர்ப்பிடவாராய். . . . . . . . .7

இன்பமதயுயர்த்தாய்! இமையவர்கென்றுமரியாய்!
கும்பக்களிறட்டகோவெ! கொடுங்கஞ்சன் நெஞ்சினில் கூற்றே!
செம்பொன்மதிள் வெள்ளறையாய்! செல்வத்தினால்வளர்பிள்ளாய்!
கம்பக்கபாலி காணங்குக் கடிதோடிக் காப்பிடவாராய்.  . . . . . .   8

இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்துநின்றார்
தருக்கோல்நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய் சிலநாள்!
திருக்காப்புநான் உன்னைச்சாத்த தேசுடைவெள்ளறை நின்றாய்!
உருக்காட்டுமந்திவிளக்கு இன்றுஒளிகொள்ள ஏற்றுகேன்வாராய் ..9

*போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தவசோதை மகன்தன்னைக் காப்பிட்டமாற்றம்
வேதப்பயன் கொள்ளவல்ல விட்டுசித்தன் சொன்னமாலை
பாதப்பயன் கொள்ளவல்ல பத்தருள்ளார் வினைபோமே. . . . . . .  . 10

அடிவரவு: - இந்திரன், கன்று, செப்பு, கண்ணில், பல்லாயிரவர். கஞ்சன், கள்ளம், இன்பம், இருக்கு, போதமர்.

 
*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.   

Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!