Login
_________________________
Donate Us to maintain and improve!
_________________________
English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
முகப்பு
உறுப்பினர்-ஸேவை
திருமணப்பதிவு
திவ்ய ப்ரபந்தம்
4000 லிஸ்ட்
திருப்பல்லாண்டு
திருப்பள்ளிஎழுச்சி
திருப்பாவை
நீராட்டம்
காப்பிடல்
அமலனாதிபிரான்
கண்ணிநுண்சிறுத்தாம்பு
நித்யாநுஸந்தி
திருமாலை
தேசிகப்ரபந்தம்
சாற்றுமுறை
ஸேவைகள்
ஸ்தோத்திரங்கள்
உபாகர்மா
உபயோகமானவை
வைணவம்
வேதம்
கண்ணிநுண்சிறுத்தாம்பு
தனியன்கள்
அவிதித விஷயாந்தரசடாரே: உபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவசாத் ததேகசேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து
வேறொன்றும்நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வாரவரே யரண்.
பாசுரங்கள்
*
கண்ணிநுண்நிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன், என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. ---1)
நாவினால்நவிற்றி இன்பமெய்தினேன்
மேவினே;ன அவன்பொன்னடிமெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே. ---2)
திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரியகோலத் திருவுருக்காண்பன்நான்
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா -
ளுரியனாய், அடியேன் பெற்றநன்மையே. ---3)
நன்மையால்மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவராதலில்
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும் -
தன்மையான், சடகோபனென்நம்பியே. ---4)
நம்பினேன் பிறர்நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையுமுன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு -
அன்பனாய், அடியேன் சதிர்த்தேனின்றே. ---5)
இன்றுதொட்டும் எழுமையுமெம்பிரான்
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான்
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி
என்றுமென்னை இகழ்விலன் காண்மினே. ---6)
கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டைவல்வினை பாற்றியருளினான்
எண்டிசையும் அறியவியம்புகேன்
ஒண்டமிழ்ச் சடகோபனருளையே. ---7)
அருள்கொண்டாடும் அடியவரின்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான்
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே. ---8)
மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு, ஆட் -
புக்ககாதல் அடிமைப்பயனன்றே. ---9)
*
பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான்
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி!
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே.--10)
*
அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா -
மன்பன், தென்குருகூர் நகர்நம்பிக்கு
அன்பனாய் மதுரகவிசொன்னசொல் -
நம்புவார்பதி, வைகுந்தங்காண்மினே.
( கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. )
*
இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.
Donate Us
Share
|
Home
Register
Downloads
Search
Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!