பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?
ஸ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் தீவளூர் ஸ்ரீநிவாஸன்
திதி, வாரம் (கிழமை), நக்ஷத்திரம் , யோகம் , கரணம் ஆகிய 5 மிக முக்கிய அங்கங்களை
விவரிக்கும் நூலானதால் இதற்குப் பஞ்சாங்கம் என்ற பெயர் ஏற்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.
பஞ்சாங்க விஷயங்கள் பற்றிய அறிவை ஏற்படுத்திக் கொள்ளுதல் ஒரு ஆன்மீகவாதிக்கு மிகவும்
இன்றியமையாததாகும். குறைந்த பக்ஷம் ஒரு ஊர் எந்தத் திசையில் இருக்கிறது என்பதை அறிந்து
வைத்திருந்தால் மாற்றுத் திசையில் வழிசொல்பவர்களை அடையாளம் கண்டு சுதாகரித்துக்கொள்ள
இயலும்.
ராசி மண்டல அமைப்பு:-
ஒரு வட்டமான மண்டலத்தின் மொத்தப் பரப்பும் 360 டிகிரியில் அடங்கும். அதன்படி
ராசி மண்டலத்தை 30 டிகிரிகள் கொண்ட 12 சம பாகங்களாகப்; பிரித் து இடது மேல் மூலையில்
முடியும்படி அதற்கடுத்த கட்டத்திலிருந்து ஆரம்பித்து முறையே மேஷம், ரிஷபம், மிதுனம்
, கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் பெயர்கள் முறைய சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்திகை,
மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய தமிழ் மாதங்களின் பெயர்களுக்கு இணையான ஸம்ஸ்க்ருத
பெயர்களாகும்.
12.
மீனம் |
1.
மேஷம் |
2. ரிஷபம் |
3.
மிதுனம் |
11.
கும்பம் |
ராசி மண்டல அமைப்பு
|
4.
கடகம் |
10.
மகரம் |
5.
சிம்மம் |
09.
தனுசு |
8.
விருச்சிகம் |
7.
துலாம் |
6.
கன்னி |
மாதங்கள் எப்படி உண்டாகின்றன?
சூரியன் உதிக்கும்போது உள்ள ராசி அந்த மாதத்தின் பெயராகும். அதாவது மேலே குறிப்பிட்டுள்ளபடி
ஒவ்வொரு மாதமும் அதனதன் ராசியில்தான் துவங்கும். அல்லது துவக்க ராசியையே அந்த மாதத்திற்கு
பெயராக சூட்டியுள்ளார்கள். உதாரணமாக சித்திரை மாதம் முதல் தேதியன்று சூர்ய உதயத்தின்போது
மேஷ ராசியில் ப்ரவேசிக்கிறார் சூரியன். நாள் ஒன்றுக்கு ஒரு டிகிரி (4 நிமிடம்) வீதம்
சூரியன் நிலை மாறுகிறார். (இந்த நிலை மாற்றத்திற்கு காரணம் பூமி சூரியனை 365 நாளைக்கு
ஒரு முறை சுற்றுகிறது அதாவது ஒரு நாளைக்கு ஒரு டிகிரி வீதம்) இதனால்தான் 30 நாளில்
30 டிகிரி மாறும்போது சரியாக ஒரு மாதம் முடிவில் அடுத்த ராசியான ரிஷப ராசியில் ப்ரவேசிக்கிறார்.
இதனால்தான் பரந்தாமன் பஞ்சாங்கத்தில் 5ம் பக்கம் “ராசி இரு” என்ற தலைப்பின் கீழ்
அடுத்தடுத்த தேதிகளில் சராசரியாக 4 நிமிடம் ஒவ்வொருநாளும் ராசி இருப்பு குறைகிறது.
ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட நேர பரிமாணம் கொண்டது (101 நிமிடம் முதல் 131 நிமிடம்
வரை). இந்த “ராசிமானம்” நம் பஞ்சாங்கத்தில் 21ம் பக்கம் "ராசிகளுக்கான தோராயமான கால
அட்டவணை" என்ற தலைப்பின் கீழ் நாழி-மணிகளில் தரப்பட்டுள்ளது. (கீழே அப்பட்டியலைக் காண்க).
மாத முடிவில் ராசி இருப்பு தீர்ந்து போய்விடுவதால் அடுத்த ராசி உதயமாகிறது அதனால் அடுத்த
மாதமும் உதயமாகிறது.