
         பஞ்சகம் மிக முக்கியம்:-
நம் பஞ்சாங்கத்தில் 21ம் பக்கம் பஞ்சகம் என்ற தலைப்பின் கீழ் இந்த விபரம் 
     
     தரப்பட்டுள்ளது. சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), 
     
     நக்ஷத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம் இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் 
     
     மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். ப்ரதமை -1, த்விதியை - 2 என்று 
     
     கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்விநி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே 
     
     அந்த நக்ஷத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, 
     
     செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என லக்னங்களுக்கும் 
     
     எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவ எண் (4 லக்னங்களுக்கு மட்டும்)
 மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டி 
     
     பின் 9 ஆல் வகுக்கு வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் 
     
     மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய பஞ்சகங்களுக்கும் முறையே ரத்னம், சந்தனம், எலுமிச்சை, தீபம், 
     
     தானியம் இவற்றை தானமாக அளித்து பரிகாரம் செய்து கொண்டு சுபங்கள் செய்யலாம் 
     
     என்று பல பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     
          
 
     
     சூ.உதயம் முதல் மணிக்கு ஒரு ஹோரை. காலை 6 மணிக்குள்ள ஹோரை, மீண்டும் மதியம் 1 மணி, இரவு 10 மணிக்கு திரும்ப ஆரம்பமாகும்.
     
     சனி,செவ் அசுப ஹோரை. குரு, சுக் சுப ஹோரை மற்றவை மத்திமம். 
சிறு சுபங்களை சுபஹோரையில் நடத்தலாம்.  சூரிய உதயம் கூட்டி பயன்படுத்தவேண்டும்.