
யோகம் அவசியம் :-
யோகம் மிக மிக முக்கியமானது ஆனால் மிகச் சுலபமானது. பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு
தேதியிலும் யோகம் என்ற தலைப்பின் கீழ் அ - சி - ம என்ற எழுத்துக்களால் யோகம்
குறிப்பிடப்பட்டிருக்கும். அ - என்பது அம்ருத யோகத்தையும், சி - என்பது சித்த
யோகத்தையும், ம - என்பது மரண யோகத்தையும் குறிக்கும். பஞ்சாங்கத்தின்
உதவியின்றியே கீழ்க்கண்ட பட்டியலைக்கொண்டு யோகத்தைக் கண்டுபிடிக்கலாம்.
இந்த கிழமையும், இந்த நக்ஷத்திரமும் உள்ள நாளைக்கு இன்ன யோகம் என்று தெளியவும்.