பத்தாம் நாள் அன்று பண்ணவேண்டியவை:
பங்காளி தர்ப்பணம், நித்தியவிதி, ப்ரபூதபலி, பாஷாண உத்தாபனம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம்,
சாரு ஸம்பாவனா, சாரு (ததீயாராதனம்), அப்பம்பொரி ஓதியிடல். இதில் பூர்வாத்வா, பஸ்சாத்வா என
இரு முறைகள் உள்ளன. பங்காளி தா்பணம், நித்யவிதி, ப்ரபூதபலி என்கிற க்ரமத்தில் பண்ணினால்
அது பச்சாத்வா (கடைசியில் ப்ரபூதபலி). மற்றொன்று ப்ரபூதபலியை முதலில் பண்ணி பின்னர் பங்காளி தர்பணம் நித்யவிதி,
பாஷாண உத்தாபனம், சாந்திஹோமம் என்ற (அ)க்ரமம் பூா்வாத்வா (முன்னதாக பலி சேர்ப்பது) எனப்படும்.
இந்தக் க்ரமம் க்ரமமாக தெரியவில்லை.
ஏனென்றால் எந்த ஒரு ஹோமத்திலும் பூர்ணாஹுதிக்குப் பின் எதுவும் சேர்ப்பதில்லை.
நிறையக் கொடுத்தபின் கொஞ்சத்திற்கு மதிப்பில்லை. தினம் பண்ணவேண்டியதை பண்ணி
முடிவானதைப் பண்ணி முடிக்கவேண்டும்.
இப்படி எந்தக் க்ரமத்தில் பார்த்தாலும் ப்ரபூத பலி என்பது கடைசீயானதாக இருப்பதே சாலப்பொருந்தும்.
ஆயினும் குடும்ப வழக்கம் எப்படியோ அப்படிப் பண்ணுவதே உசிதம்.
10, 11, 12 3 நாளும்: அனைவருக்கும் உடுத்தியுள்ளது தவிர ஒரு செட் துணி மடியாக வைத்துக்கொள்ளவும்.
வட தமிழகத்தில் மட்டும் புதிது உடுத்திக்கொண்டு பலி சேவிப்பர். கர்த்தாக்கள் தவிர அவர்கள் பத்தினிகள் உட்பட
அனைவரும் பலகாரம் சாப்பிட்டு பின் பலி ஸேவிப்பர்.
சாமான்கள்:-
நவச்ராத்தம் தவிர மற்ற அனைத்து நித்யவிதி சாமான்கள் ஒரு செட்
நித்யம்போல் ஒரு பெரியபிண்டம், ஒரு சிறியபிண்டம் தினம்பண்ணும் பாத்திரத்தில் தனியாக
வேறு தனி பாத்திரத்தில் ஒரு கிலோவுக்குக் குறையாமல் பொங்கிய சாதம் தனியாக
5அப்பம், 5அடை, 5 உருண்டை, அகத்திக்கீரை, பருப்பு, பாயஸம் போன்ற ப்ரபூதபலி தளிகை
மேற்படி பலியில் வைக்க வெத்திலை, பாக்கு, பழம், தக்ஷிணை .......
(சுமங்கலியாக போயிருந்தால் புடவை,ரவிக்கை, திருமங்கல்யம் மற்றும் மங்கலப் பொருள் வைப்பர்.)
இளநீர்-1 மற்றும் எள்-சிறிது, வெல்லம்-சிறிது, நெய்-சிறிது, தயிர்-சிறிது இவை சரகு தொன்னையில் எடுத்து வைக்கவும்.
நெல் சிறிது மற்றும் ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தத்திற்கு
அரிசி, வாழைக்காய், சேம்பு, வெல்லம், ப.பருப்பு, வெத்திலை, பாக்கு, தக்ஷிணை .............
சாந்தி ஹோமத்திற்கு முன் பலிசேவித்தவர்கள் தீர்த்தமாடி உலர்ந்த வஸ்த்ரம் உடுத்தவேண்டும்.
10ம் நாள் சாந்தி, ஆனந்தஹோமத்திற்கு தேவையானவை:-
வாழைஇலை-4, தொன்னைகள் அல்லது கிண்ணங்கள்-6,மாவிலைக் கொத்து-2, தேங்காய்கள்-2,
வெத்திலை-8,பாக்கு-4, பழம்-4, புஷ்பம்-1முழம், சந்தனம் - சிறிது, நெய்-100 கிராம், விராட்டி-4,
சுள்ளி கொஞ்சம், கற்பூரம்-4 கட்டி, தீப்பெட்டி-1, எண்ணை நிரப்பிய ஹரிக்கேன் விளக்கு-1
நெல் கொஞ்சம், வெள்ளி சொம்பு, ஸ்தாலி, ஆசமன பாத்ரம், மணைகள்,
திருமண் பெட்டி, கண்ணாடி, வாசலில் 3 இழை கோலம், குடத்தில் ஜலம், ஹாரத்தி,
கூடத்தில், குத்துவிளக்கு, அப்பம் பொரி பக்ஷணங்கள்
க்ஷேம தண்டுலம் :- அரிசி, வாழைக்காய், துவரம்பருப்பு, வெல்லம், கண்ணாடி, குத்துவிளக்கு
ஞாதிகள் தர்ப்பணம் பண்ணி வைக்க ஸம்பாவனை தலா ............
அநுஜ்ஞை, க்ருச்ரம் போன்ற வைதீக சில்லரை செலவு ................
இதில் கர்தாக்களுடைய அப்பாவின் அப்பா , அப்பாவின் அப்பாவின் அப்பா, அப்பாவின் அப்பாவின்
அப்பாவின் அப்பா என ஆண்கள் தொடர்பிலேயே உள்ளவர்களும் அவாகளின் பிள்ளைகள் அல்லது
அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மூத்த இளைய சகோதரர்கள் அல்லது அவர்களுடைய பிள்ளைகள்
என அனைவரும் பத்துநாள் பங்காளிகளாம். இவர்களில் யாருக்கெல்லாம் தகப்பனார் இல்லையோ பின்னோக்கி
ஏழு தலைமுறைகளைச்சேர்ந்த ஆண்வாரிசுகள் இறந்தவரைவிட வயதில் பெரியவர் ஆனாலும் சிறியவர்
ஆனாலும் கண்டிப்பாகத் தர்பணம் பண்ணவேண்டும் இறந்தவர் பெண் ஆனால் அவருடைய கணவரும்
தர்ப்பணம் பண்ணவேண்டும். இறந்தவரைவிட வயதில் பெரியவர்கள் தவிர்த்து கர்த்தாக்கள் தவிர்த்து
மற்ற அனைவரும் வயதில் சிறியவர் முதலாக வயதில் பெரியவர் ஈராக (கடைசியாக) சர்வாங்க
(மீசை உட்பட உடம்பு முழவதும், மீசை வைத்துக் கொண்டு தீட்டுத் தர்பணம் பண்ணினால் அதன்;
பின் வாழ்க்கையில் பண்ணும் எந்த தெய்வ காரியமும் பயனற்றுப் போய்விடும்) க்ஷவரம் பண்ணிக்கொண்டு
தீர்த்தமாடி அதே க்ரமத்தில் தர்பணம் பண்ணவேண்டும்.
ஞாதி தர்பண சங்கல்பம்:- 'ஸ்ரீ...ம் கோத்ரஸ்ய சர்மண: மம ஞாதீபூத ப்ரேதஸ்ய (/ப்ரேதாயா:) அத்ய தசமே அஹநி
தஹன ஜநித க்ஷுத் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேத / ப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேத
/ ப்ரேதா த்ருப்பத்யர்த்தம் தடாக தீர குண்டே அதீத ப்ரதமதினம் ஆரப்ய அத்ய தசம தின பர்யந்தானி அஹரஹ:
கர்த்தவ்யானி த்ரிம்சத் வாசோதகானி பஞ்ச ஸப்ததி திலோதகானிச கரிஷ்யே! தத் காலே க்ருச்ராசரணஞ்ச கரிஷ்யே!"
க்ருச்ரம்: 'தடாகதீரகுண்டே வாசோதக திலோதக ப்ரதான காலே திதி வார... ப்ரததே"
சுருக்கமான தர்ப்பணம்:- ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டும்
'தஹன ஜநித ..... தடாக தீரகுண்டே கோத்ராய சர்மணே
மம ஞாதீபூத ப்ரேதாய (/கோத்ராயை நாம்நியை மம ஞாதீபூத ப்ரேதாயை)" வரை சொல்லி
'அதீத ப்ரதம தின கர்த்தவ்யம் ஏதத் வாசோதகம் ததாமி"
என்று 3 தரம் துணியில் தர்பம் வைத்து குண்டத்தில் பிழியவேண்டியது.
அதுபோல் ப்ரதம என்பதற்கு பதில் அடுத்தடுத்த நாளைக்கு த்விதிய/த்ருதிய/சதுர்த்த / பஞ்சம / ஷஷ்ட / ஸப்தம
/ அஷ்டம / நவம / தசம என்ற வார்த்தைகளை மாற்றிக் கொள்ளவேண்டியது. பத்தாம் நாளன்றைக்கு 'அதீத தசம"
என்று சொல்லாமல் 'அத்ய தசம" என்று சொல்லவேண்டியது.
இதேபோலவே திலோதகத்திற்கு துணியை வைத்துவிட்டு ஒரு தர்பத்தை நுனி கட்டை விரல் புறமாக இருக்கும்படி
வைத்துக் கொண்டு எள் சேர்த்து
'தஹன ஜநித ..... தடாக தீரகுண்டே கோத்ராய சர்மணே மம ஞாதீபூத ப்ரேதாய (/கோத்ராயை நாம்நியை மம ஞாதீபூத ப்ரேதாயை)"
வரை சொல்லி
'அதீத ப்ரதம தின கர்த்தவ்யம் ஏதத் திலோதகம் ததாமி"
என்று கட்டைவிரல் வழியாக குண்டத்தினுள் மூன்று முறை தீர்த்தம் விடவேண்டியது.
நாள் ஒன்றுக்கு ஒரு திலோதகத்தைக் கூட்டிக்கொள்ளவேண்டியது. முதல் நாளைக்கு 3, 2ம் நாளைக்கு 4,
3ம் நாளைக்கு 5 ..... பத்தாம் நாளைக்கு 12 என்ற ரீதியில்.
அதுபோல் ப்ரதம என்பதற்கு பதில் அடுத்தடுத்த நாளைக்கு த்விதிய/த்ருதிய/சதுர்த்த / பஞ்சம / ஷஷ்ட / ஸப்தம
/ அஷ்டம / நவம / தசம என்ற வார்த்தைகளை மாற்றிக் கொள்ளவேண்டியது.
பத்தாம் நாளன்றைக்கு 'அதீத தசம"
என்று சொல்லாமல் 'அத்ய தசம" என்று சொல்லவேண்டியது.
திலோதமும் முடித்தபின் தர்பத்தைப் போட்டுவிட்டு கையைக் கூப்பிக்கொண்டு
'கோத்ர சர்மந்நு மம ஞாதீபூத ப்ரேத / கோத்ரே நாம்நீ மம ஞாதீபூத ப்ரேதே"
'மயாக்ருதாநி அதீத ப்ரதமதினமாரப்ய அத்ய தசமதின பர்யந்தானி அஹரஹ: கர்த்;தவ்யாநி ஏதாநி வாசோதகாநி உபதிஷ்டா,
ஏதாநி திலோதகாநி உபதிஷ்டா"
என்று கை காமித்து
'அத்ர ஸ்நாஹி ஜலம் பிபா, த்ருப்தோபவா/த்ருப்தா பவா, சீதோ பவா / சீதா பவா"
என கட்டைவிரல் வழியாக தீர்த்தம் விட்டு
'மார்ஜயதாம் மம ஞாதீபூத ப்ரேத: / ப்ரேதா" என சொம்பு ஜலத்தால் குண்டத்தை அப்ரதக்ஷிணமாக சுற்றி
கவிழ்த்து ப்ரோக்ஷித்து நிமிர்த்தி வைக்கச் சொல்லி, உபவீதத்தில் எழுந்து ஸேவிக்கச்சொல்லவேண்டியது.
தர்பணம் பண்ணிய பங்காளி பவித்திரம் பிரித்துப்போட்டு ஆசமனம் பண்ணி விட்டு தர்பணம் பண்ணிவைத்த
வாத்தியாருக்கு தனியாக தக்ஷிணை கொடுத்துவிட்டு, பின்னர் ப்ராசீனாவீதம் பண்ணிக்கொண்டு ப்ரபூதபலி
முடியும்வரை ஈரத்துடனே ஒன்றும் சாப்பிடாமல் காத்திருக்க வேண்டியது.
3, 5, 7, 9 என எந்த நாளில் ஆரம்பித்திருந்தாலும் கர்த்தாக்கள் இன்றைய
ஒரு தினத்திற்குண்டான நித்யவிதியை மற்ற நாட்களில் பண்ணியதுபோல்
பத்தாம் நாளும் பண்ணி முடித்த பிறகு ப்ரபூத பலி பண்ணவேண்டும்.
நித்யவிதி மந்திரங்கள் நித்யவிதி என்ற தலைப்பில் கொடுத்துள்ளபடியால்
மீண்டும் இங்கு கொடுக்கப்படவில்லை.
இந்த ப்ரபூபலி சேர்ப்பதற்காக ஒரு புதிய அல்லது பழைய நாலு முழம் அல்லது ஏதாவதொரு
வெள்ளைத் துணியை நனைத்து உலர்த்தி வைக்கவேண்டியது. ப்ரபூதபலிக்கு பொதுவான தளிகை விபரம்.
ஒரு படி (2 கிலோ)க்கு குறையாமல் சாதம், மஞ்சள்பொடி சேர்த்து சரியாக வேகமால் தயாரிக்கப்பட்ட
5 உருண்டைகள், 5 அடைகள், 5 துண்டு வாழைத் தண்டு, 5 தேங்காய்த் துண்டுகள், அகத்திக் கீரை,
துவரம் பருப்பு, பாயசம் சுமங்கலியானால் சிலர் மஞ்சள் பொங்கலாக பண்ணுவர்.
இவைகள்
பொழுது விடிவதற்கு முன்பே பண்ணி வைத்துவிடுவார்கள்.
(சுமங்கலியாக போனவர்களுடைய புடவை ரவிக்கை மற்றும் மஞ்சள், கண்ணாடி, சீப்பு போன்றவையும்,
அவர்கள் அணிந்திருந்த திருமங்கல்யத்தையும் பலியில் சேர்க்கும் வழக்கம் உண்டு.)
கல்யாணத்தில் திருமங்கல்யதாரணம்போல அபரத்தில் ப்ரபூதபலியானது மிக முக்கியமாகும்.
எனவே பந்துக்கள் மற்றும் வரவேண்டியவர்கள் அனைவரும் வந்துவிட்டனரா என அறிந்து கொண்டு
க்ருஹத்வார குண்டத்தில், குண்டத்தின் முன் இடம் சரிசெய்துகொண்டு கர்த்தாக்கள் ப்ராசீனாவீதியுடன்
நின்றுகொண்டு அனுஜ்ஞை:
'அசேஷே ... ஸ்வீக்ருத்யா"
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய (/ மம மாது: ப்ரேதாயா:) அத்ய தசமே அஹநி
மம பிது: ப்ரேதஸ்ய (/மம மாது: ப்ரேதாயா:) மஹாக்ஷுது நிவாரணார்த்தம் ப்ரபூதபலி ப்ரதானம்
கர்த்தும் யோக்யதாசித்திம் அனுக்ரஹாணா!" என்று அனுஜ்ஞை பண்ணி
உட்கார்ந்து உபவீதி, ப்ராணாயாமம், ப்ராசீனாவீதி!
'அத்ய பூர்வோக்த ... ம், கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய
(/கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா:) அத்ய தசமே அஹநி மம பிது: ப்ரேதஸ்ய
(/மம மாது: ப்ரேதாயா:)மஹா க்ஷுது நிவாரணார்த்தம் ப்ரபூதபலிப்ரதானம் கரிஷ்யே"
'தத்காலே க்ருச்ராசரணஞ்ச கரிஷ்யே1"
'ப்ரபூத பலிப்ரதானகாலே திதி வார ... ஸம்ப்ரததே!" என்று க்ருச்ரம் விட்டு
துணியை இரட்டையாக மடித்து கரை இருந்தால் தெற்கே போட்டு அதன் நடுவில் தெற்கு நுனியாக
ஒரு தர்பம் போட்டு அதில் அடியிலிருந்து நுனிக்கு எள்ளும் ஜலமுமாக விட்டு
'மார்ஜயதாம் மம பிதா ப்ரேத: / மார்ஜயதாம் மம மாதா ப்ரேதா:" என்று சொல்றது.
அந்த தர்பத்தின்மேல் முதலில் சாதத்தை கவிழ்த்துக் கொட்டி அதை ஒரு அரைக் கோளம் போல்
ஒன்றாகப் பண்ணி மேல் புறத்தைத் தட்டையாக தட்டவேண்டும்.
பலிக்கு அருகில் ஒரு
4 வெத்திலை, 2 பாக்ககு, 2 பழம், சிறிது புஷ்பம் இவற்றையும் வைக்கவேண்டியது.
மற்ற காய்கள் பதார்த்தங்களை மேற்படி பலியின் நடு, கிழக்கு, தெற்கு, மேற்கு,
வடக்கு என 5 இடங்களிலும் ஒவ்வொன்றாக / சிறிது சிறிதாகச் மேல் சொன்ன
பண்ணிவைத்துள்ள அனைத்துச் சாமான்களையும் சேர்க்கவேண்டியது.
அதன் மேல் கொஞ்சம் எள்ளும் ஜலமும் விடவேண்டியது. சிறிது நெய், சிறிது வெல்லம்,
சிறிது தயிரும் விடவேண்டியது. இளநீர் இருந்தால் பலியைச்சுற்றிச் சேர்க்;கவேண்டியது.
எல்லாம் சேர்த்தானதும், பலிபண்ணிய பெரிய சாதபாத்திரத்தை எடுத்து இடது கைப்பக்கம் வைத்து
இடது கையினால் தொட்டுக்கொண்டு, இடது காலை மண்டி போட்டு உட்கார்ந்து,
வலது கையில் ஒரு தர்பத்தைக் கொண்டு நுனியினால் பலியைத் தொட்டுக்கொண்டு
பின்வரும் மந்திரத்தைச் சொல்லவேண்டியது.
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய தசமே அஹநி"
(/"கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய தசமே அஹநி")
'மம பிது: ப்ரேதஸ்ய / மம மாது: ப்ரேதாயா: மஹா க்ஷுது நிவாரணார்த்தம்
ஏதம் ப்ரபூதபலிம் ததாமி
நாநா அபூபாணி ததாமி
நாநா மோதகாநி ததாமி
நாநா வ்யஞ்சன ப்ரஸ_ப பலாநி ததாமி
க்ருதம் ததாமி
குடம் ததாமி
ததி ததாமி
திலோதகம் ததாமி
நாளீகேர உதகம் ததாமி" என்று சொல்லி தர்பத்தைப் போட்டுவிட்டு எழுந்திருந்து
'கோத்ர சர்மந்நு மம பிது: ப்ரேத / மம மாது: ப்ரேதே
மஹா க்ஷுது நிவாரணார்த்தம் ஏதம் ப்ரபூதபலிம் உபதிஷ்டா
நாநா அபூபாணி உபதிஷ்டா
நாநா மோதகாநி உபதிஷ்டா
நாநா வ்யஞ்சன ப்ரஸ_ப பலாநி உபதிஷ்டா
க்ருதம் உபதிஷ்டா
குடம் உபதிஷ்டா
ததி உபதிஷ்டா
திலோதகம் உபதிஷ்டா
நாளீகேர உதகம் உபதிஷ்டா
தக்ஷிணா தாம்பூலாணி
ஸர்வாணி உபதிஷ்டஸ்வா!" என்று சொல்லி
உட்கார்ந்து ப்ரபூபலி சாதம் பண்ணின பாத்திரத்தில் சிறிது எள் சேர்த்து தீர்த்தம் விட்டு
பலியை வலதுபுறமிருந்து தீர்த்தம் விட்டுக்கொண்டே அப்ரதக்ஷிணமாக சுற்றி
'மார்ஜயதாம் மம பிதா ப்ரேத: / மார்ஜயதாம் மம மாதா ப்ரேதா" என்று சொல்லிக்
கவிழ்த்து தீர்த்தம் ப்ரோக்ஷித்து நிமிர்த்தவேண்டியது.
உபவீதம் பண்ணிக்கொண்டு கர்த்தாக்கள் ஸேவித்து வெளியேவரவேண்டியது.
இறந்தவரின் மனைவி உயிருடன் இருந்தால் அவர்களைத் தவிர மற்ற பெண்களில் சிறியவர் முதல்
பெரியவர்வரை எல்லோரும் ஸேவிக்கவேண்டியது. இறந்தவiவிட வயதில் பெரியவர்கள்
பலியைப்பார்த்து கை கூப்பினால் போதும் ஸேவிக்கத் தேவையில்லை.
இதேபோல் சிறியவர் முதல்
பெரியவர்வரை புருஷர்கள் (ஆண்கள்) வந்து ஸேவித்த பின் இறந்தவரின் மனைவி (இருந்தால்)
அவர்களுக்கு சுமங்கலிபோல் நிறைய புஷ்பம் வைத்து அலங்கரித்து அழைத்து வந்து
ஸேவிக்கச் செய்து திருமங்கல்யம் தவிர மற்ற சுமங்கலி அடையாளங்களை நீக்கிவிடுவது.
இதன்பிறகு கர்த்தாக்கள் க்ருஹத்வார குண்டத்தினுள் வந்து மீண்டும் ஸேவித்துவிட்டு
ப்ரபூத பலியைக் நாலு மூலையையும் சேர்த்து நன்றாகக் கட்டி தனியாக எடுத்து வைததுவிட வேண்டியது.
பாஷாண உத்தாபனம் பண்ணவேண்டியது.
க்ருஹத்வார குண்டத்தில் உட்கார்ந்து உபவீதத்தில் ப்ராணாயாமம் ப்ராசீனாவீதி!
'அத்ய பூர்வோக்த .... ம்; கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய / கோத்ராயா: நாம்நீயா:
மம மாது: ப்ரேதாயா: க்ருஹ்வார குண்டாது பாஷாண உத்தாபனம் கரிஷ்யே.
தத்காலே க்ருச்ர ஆசரணம்ச கரிஷ்யே!"
'க்ருஹத்வார குண்டாது பாஷாண உத்தாபன காலே திதி வார ... ஸம்பரததே"
என்று க்ருச்ரம் பண்ணி கையில் நிறைய எள் எடுத்துக்கொண்டு
'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத தடாக தீர குண்டாது அஸ்மாது பாஷாணாது உத்திஷ்டா!
இத: ப்ரயாஹி!"
நித்தியவிதி துணியில் பிண்டம் கட்டியிருப்பதுபோக மறு நுனியைப் பிரித்து வைத்துக் கொண்டு
இடது கையினால் குண்டத்தின் உள்ளே புதை;திருந்த கல்லை கண்ணால் பாhக்காமல் எடுத்து
அந்தத் துணியில் வைத்து மூடிவிட்டு உபவீதம் பண்ணிக்கொள்றது.
கொஞ்சம் நெல்லைக் கையில் எடுத்துக்கொண்டு 'அஸ்மத் குலம் அபிவர்த்ததாம்"
என்று குண்டத்தினுள் சேர்த்து கொஞ்சம் ஜலத்தையும் அதனுள் விட்டு குண்டத்தை நன்றாக
கலைத்துவிடவேண்டியது. அருகில் எரியும் விளக்கையும் அணைத்துவிடவேண்டியது.
ஓலை பாளைகளையும் பிய்த்துப் போட்டுவிடவேண்டியது.
பின்னர் ப்ரபூதபலி மூட்டையை பங்காளிகளில் ஒருவரோ அல்லது கர்த்தாக்களில்
ஒருவரோ எடுத்துக்கொள்ள, பிண்டம் உள்ள நித்யவிதி துணி, சொம்பு, எள், நெல்,
சில்லரை இவைகளுடன் தடாக தீரகுண்டத்திற்குச் செல்லவேண்டியது.
தடாகதீரத்தில் உட்கார்;ந்து உபவீதத்தில் ப்ராணாயாமம் செய்து ப்ராசீனாவீதி!
'அத்ய பூர்வோக்த .... ம் கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய / மம மாது: ப்ரேதாயா:
தடாகதீரகுண்டாது பாஷாண உத்தாபனம் கரிஷ்யே! தத்காலே க்ருச்ராசரணஞ்ச கரிஷ்யே!"
என்று சங்கல்பம் செய்து
' தடாகதீர குண்டாது பாஷாண உத்தாபன காலே திதி வார ... ஸம்பரததே" என்று க்ருச்ரம் செய்து,
முன்புபோலவே கையில் நிறைய எள் எடுத்துக்கொண்டு
'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத / கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே"
'தடாகதீர குண்டாது அஸ்மாது பாஷாணாது உத்திஷ்டா. இத: ப்ரயாஹி!"
என்று குண்டத்தில் எள்ளைச் சேர்த்து, கண்ணால் பார்க்காமல் இடதுகையால்
குண்டத்தின் உள்ளிருந்து கல்லை எடுத்து நித்தியவிதி துணியில் ஏற்கனவே இருக்கும் கல்லுடன்
இதையும் சேர்த்து வைத்து மூடிவிடவேண்டியது.
உபவீதம் பண்ணி;க்கொண்டு கையில் நிறைய நெல் எடுத்துக்கொண்டு குண்டத்தில் சேர்த்து
'அஸ்மத் குலம் அபிவர்த்ததாம்" என்று சொல்லி
தீர்த்தம் விட்டு குண்டத்தைக் கலைத்துவிடவேண்டியது.
கர்தாக்கள் அனைவரும் ப்ராசீனாவீதி பண்ணிக்கொண்டு பங்காளி ஒருவர் ப்ரபூதபலி மூட்டையை எடுத்துவர
(அல்லது யாராவது ஒருவர்), நித்யவிதி பிண்டம் கற்கள் உள்ள துணியையும் எடுத்துக்கொண்டு கையில்
துணி கிழிக்க ஒரு சிறு கத்தியையும் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள நீர் நிலைக்குச் சென்று முதலில் வழக்கம்;
போல் நித்தியவிதி பிண்டங்களை திரும்பி நீரில் சேர்த்துவிட்டு, பின் அதில் உள்ள கற்களையும் பார்க்காமல்
சேர்த்துவிட்டு அந்தத் துணிணை பல துண்டுகளாக கிழித்துத் து}ர எறிந்துவிடவேண்டும்.
பின் ப்ரபூதபலி மூட்டையை அவிழ்த்து பார்த்தபடியே கூட அதை ஜலத்தில் கொட்டிவிட்டு ஜலம் நல்லதாக
இருந்தால் அந்தத் துணியை அலசி எடுத்துக்கொள்ளவேண்டியது. ஆத்துக்கு வந்து உபவீதம் போட்டுக்கொண்டு
கையிலுள்ள பவித்திரத்தைப் பிரித்துப்போட்டு ஆசமனம் அல்லது ச்ரோத்ராசமனம் பண்ணவேண்டியது.
பலிபோட்ட துணியை பலி தளிகை பண்ணின பரிசாரகரிடம் பலி தக்ஷிணையுடன் சேர்த்துவிடவேண்டியது.
ஆத்தில் தந்தை இறந்து தாயார் இருந்தால் அவர்களைக் கிழக்கு முகமாக நிற்கச் செய்து / உட்கார வைத்து
யாராவது ஒரு அமங்கலியோ அல்லது பிள்ளையோ தலையில் ஜலம் விட்டு, ஆத்தில் வாங்கி வைத்துள்ள
புதுப்புடவையை மூத்தபிள்ளையானவன் மூன்றாக மடித்து ஜலத்தில் நனைத்துப் பிழிந்து கழுத்தில்
மாலைபோல் போட்டு கட்டி அணைத்து ஆறுதல் சொல்வது. அதுபோல் உடன் பிறந்தவர்களும் புடவை போட்டு
ஆறுதல் சொல்வது.
மாப்பிள்ளைகள் மட்டும் தோளில் போடாமல் கையில் கொடுத்துவிடுகிற வழக்கம்.
(இப்போதே புடவையுடன் சேர்த்து திருமங்கல்யத்தையும் கழட்டிவிடுவது பழைய பழக்கம்.
இந்நாளில் இரவில் கழட்டுகிறார்கள்)
கர்தாக்களில் சின்னவரிலிருந்து பெரியவர் என்ற க்ரமத்தில் சர்வாங்க க்ஷவரம்;
பண்ணிக்கொண்டு நன்றாக தீர்த்தமாடவேண்டியது. தீட்டு இடங்களையெல்லாம் நன்றாக
அலம்பி விட்டுவிட்டு அலம்பியவர்கள் பின்னர் தீர்த்தமாடவேண்டியது.
கர்த்தாக்கள் பங்காளிகள்
தீர்த்தமாடியபின் ஆத்தினுள் போகக் கூடாது உலர்ந்த வேஷ்டியை உடுத்திக்கொண்டு திருமண் மட்டும்
இட்டுக்கொண்டு சாந்தி ஹோமத்திற்குப் போகவேண்டியது.
இரண்டு அல்லது நாலரை செங்கல், 4 விராட்டி, கொஞ்சம் சுள்ளி, ஒரு பெட்ரூம் அல்லது ராந்தல் விளக்கு,
கொஞ்சம் நெல், 1 கிலோ அரிசி, 2 நுனி வாழை இலை, 4 வெத்திலை, 2 பாக்கு, 2 பழம், மாவிலைக்கொத்து -2,
10 சரகு தொன்னை, 2 எவர்சில்வர் கிண்ணங்கள், கொஞ்சம் கற்பூரம், தீப்பெட்டி, திருமண் பெட்டி,
ஆசமன டம்ப்ளர், வெள்ளிச் சொம்பு, ஸ்தாலி, ஒரு குடம் நிறைய ஜலம், கோலமாவு, மணைகள்,
ஒரு சிறு தட்டில் ஹாரத்தி இவைகளை ஆத்து வாசலில் சாந்திஹோமம் பண்ணும் இடத்தில் தயாராக வைக்கவேண்டியது.
ஆத்திலுள்ள நனைக்கக்கூடிய வஸ்துக்களையெல்லாம் நனைத்துதவிடவேண்டியது.
எல்லா அறைகளையும் ஜலம் தெளித்து துடைத்தோ அல்லது அலம்பியோ விடவேண்டியது.
நடுக் கூடத்தில் நடுவில் பெரிதாக 3 இழைக் கோலம் போட்டு அதில் ஒரு தாம்பாளத்தில் அரிசி,
வாழைக்காய், துவரம் பருப்பு, வெல்லம் (க்ஷேம தண்டுலம்) இவற்றை வைக்கவேண்டியது.
நடுவில் ஒரு திருவிளக்கு ஏற்றி வைக்கவேண்டியது. அருகில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கவேண்டியது.
பத்துக்குப் பண்ணின பக்ஷணங்கள் அப்பம் பொரி, அவற்றை விநியோகிக்க இலைத் துண்டுகள் மற்றும்
வெத்திலை பாக்கு பழம் புஷ்பம் இத்யாதிகளையும் எடுத்து வைக்கவேண்டியது.
சாந்தி ஹோமத்திற்கு கல்லினால் குண்டம் தயாரித்து பரிஸ்தரணம் ப்ரதக்ஷிணமாகப் போட்டு நான்கு பாத்திர
விதியில் பாத்திர சாதனமும் பண்ணி வடபுறம் வாழை இலையில் புண்ணியாஹ வாசன கும்பம் அமைக்கவேண்டியது.
வாத்தியார் கர்தாக்கள் மற்றும் பங்காளிகள் தர்பணம் பண்ணியவர் அனைவருக்கும்
இரண்டு தர்ப நுனிகளை முடிந்து அதில் ஒரு மாவிலையைச் (ப்ரயோகப்படி பே அத்தி இலை சொருகவேண்டும்)
சொருகி முடிந்து தயார் செய்து வைத்துக்கொள்றது. இதற்கு 'வேதசமாலை" என்று பெயர்.
கர்தாக்களை ஆசமனம் பண்ணச்சொல்லி 2 பில் பவித்திரம் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்வது.
உலர்ந்த வேஷ்டியால் கச்சம் உடுத்தி மேல் உத்திரியத்துடன் கர்தாக்களை ஹோம குண்டத்துக்கு
மேற்கே கிழக்கு முகமாக ஸேவித்து நின்று கொண்டு
'அசேஷே .... ஸ்வீக்ருத்யா மம, மம ப்ராத்ரூணாஞ்ச ஞாதீநாஞ்சா அகாந்தே அக நிர்ஹரணார்த்தம்
அகசாந்தி ஹோமம் கர்த்தும் யோக்யதா சித்திம் அநுக்ரஹாணா"
என்று அனுஜ்ஞை பண்ணி உட்காரச் சொல்லி
2 பில் பவித்திரத்துடன் 2 பில் ஆசனம், 2 இடுக்குப்பில்லுடன்
'ஓம் அஸ்மத் குருப்யோ நம:"
'சுக்லாம் பரதரம்"
(ப்ராசீனாவீதி கிடையாது)
'ஹரிரோம்தது ஸ்ரீகோவிந்தா .... ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ... நாம ஸம்வத்ஸரே
..அயனே ... ருதௌ ...மாஸே ....பNக்ஷ ....திதௌ வாசர: ...... வாசர யுக்தாயாம் ...... நக்ஷத்ர யுக்தாயாம்
ஸ்ரீவிஷ்ணுயோக விஷ்ணுகரண சுபயோக சுப கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ......சுப திதௌ
ஸ்ரீ ...... ம் மம, மம ப்ராத்ரூணாஞ்ச ஞாதீநாஞ்சா அகாந்தே அக நிர்ஹரணார்த்தம் அகசாந்தி ஹோமம் கரிஷ்யே!"
இடுக்குப் பில்லை வடக்கே சேர்க்கறது.
ஸாத்வீகத்யாகம் 'பகவாநேவ ... பூதமிதம் அகசாந்தி ஹோமாக்யம் ... காரயதி"
'ஸ்தண்டிலம் கல்பயித்வா'
'ப்ராசீ: பூர்வம் உதக்கு ஸக்குஸ்தம் ....... '
'பூர்புவஸ்ஸ{வரோம் இதி அக்;நிம் ப்ரதிஷ்டாப்யா"
'அக்நிமித்வா அக்நிம் ப்ரஜ்வால்யா"
'ஆயாமத: பரீமாணம் ப்ரோக்ஷணீ ஸக்குஸ்கார:"
'ப்ரோக்ஷணீ பாத்ரமாதாயா அத்பி: பூரயித்வா ..... திரி: ப்ரோக்ஷ;யா"
என இதுவரை பண்ணிவிட்டு
கர்தாக்கள் பங்காளிகள் அனைவருக்கும் முன்னர் தயாரித்து வைத்த வேதச மாலையை
ஆளுக்கு ஒன்று கொடுத்து பின்வரும் மந்திரம் முடிந்தவுடன் மாவிலை முன்புறம் உள்ளபடி
மாலையாக கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டியது.
'ஆரோஹதா ஆயு: ஜரஸம் க்ருணாநா: அநுபூர்வம் யதமாநா: யதிஷ்ட
இஹத்வஷ்டா ஸ{ஜநிமா ஸ{ரத்ந: தீர்கமாயு: கரது ஜீவஸேவ:!
யதா..ஹாநி அநுபூர்வம் பவந்தி யதர்த்தவ: ருதுபி: யந்தி க்ளுப்தா:
யதாநபூர்வம் அபர: ஜஹாதி ஏவாதாத: ஆயூகும்ஷி கல்பையைஷாம் "
எல்லோரும் மாலையைக் கட்டிக்கொண்டதும். ஆஜ்ய ஸம்ஸ்காரம், தர்வீ (மாவிலை) ஸம்ஸ்காரம் பண்ணவேண்டியது.
மந்திரமின்றி (து}ஷ்ணீம்) அக்நியை ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் பண்ணவேண்டியது.
பெரிய இலையை அடியினால் ஹோமம் பண்ண வசதியாக மடித்து இடது கையில் வைத்துக் கொண்டு,
அதுபோல் சின்ன இலையிலும் அடியினால் நெய் எடுத்து விட்டுக்கொள்ளும்படி மடித்து வலது கையில் கொண்டு
நெய்பாத்திரத்திலிருந்து நாலு தரம் நெய் எடுத்து இடது கையிலுள்ள பெரிய இலையில் விட்டுக் கொண்டு,
சின்ன இலையை வைத்துவிட்டு நெய்யுள்ள பெரிய இலையை வலதுகைக்கு ஜாக்கிரதையாக மாற்றிக்கொண்டு
இடது கையினால் நெய் பாத்திரத்தைத் தொட்டுக்கொண்டு பின் வரும் இரண்டு மந்திரங்களுக்கும்
இதுபோல் ஹோமம் பண்ணவேண்டியது.
'நஹிதேஅக்நே தநுவை க்ரூரம் ஜஹாரா அபிர்பபஸ்த்தி தேஜநம் புந: ஜராயு கௌரிவஸ்வாஹா!"
'அக்நயே சுத்யை இதம் நமமா!"
'அபந: சோசுசது அகம் அக்நே: ஸ{சுத்யா: ரயிம் அபந: சோசுசது அகம் ம்ருத்யவே
ஸ்வாஹா"
'அக்நயே சுத்யை இதம் நமமா!"
இப்போது பெரிய இலையால் நுனிவழியாக ஒவ்வொரு தரம் எடுத்து பின்வரும் பத்து மந்திரங்களால் ஹோமம் செய்து
அக்நிக்கு வடக்கில் ஒரு தொன்னை வைத்து ஹோமம் பண்ணி மீந்த நெய்யில் ஒரு சொட்டு அந்த தொன்னையில் விடவேண்டும்.
1. 'அபந: சோசுசது அகம் அக்நே: சுசுத்யா ரயிம் அபந: சோசுசது அகம்; ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
2. 'ஸ{Nக்ஷத்ரியா ஸ{காதுயா வஸ{யாசா யஜாமஹே அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
3. 'ப்ரயது பந்திஷ்ட: ஏஷாம் ப்ராஸ்மாகாசஸ்ச்சா
ஸ{ரய: அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
4. 'ப்ரயது அக்நே: ஸஹஸ்வத: விச்வத: யந்தி
ஸ{ரய: அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
5. 'ப்ரயத்தே அக்நே ஸ{ரய: ஜாயேமஹி ப்ரதேவயம்;;
அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
6. 'துவகும்ஹி விச்வதோமுகா விச்வத: பரிபூ: அஸி
அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
7. 'த்விஷோந: விச்வதோமுகா அதி நாவேவா பாரயா
அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
8. 'ஸந: ஸிந்துமிவ நாவயா அதிபர்ஷா ஸ்வஸ்தயே
அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
9. 'ஆப: ப்ரவணாது இவயதீ: அபாஸ்மது ஸ்யந்ததாம்
அகம் அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
10. 'உத்வநாது உதகாநீசா அபாஸ்மது ஸ்யந்ததாம் அகம்
அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
அக்நயே சுசய இதம் நமமா!
இதன் பிறகு பண்ணும் ஹோமங்களில் மீதி நெய்யை தொன்னையில் சொட்டவிட தேவையில்லை.
அபஉபஸ்ப்ருஸ்யா! ப்ராணாநாயம்யா1
'ஸ்ரீபகவ...ம் அஸ்மிநு அகசாந்தி ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித மந்த்ர தந்த்ர ஸ்வர வர்ண விதி விபர்யாச
ந்யூந அதிரித்த ப்ராயஸ்ச்சித்தார்த்தம் அநாஜ்ஞாத த்ரையம் ஹோஷ்யாமி"
என்று சங்கல்பம் செய்துகொண்டு பின்வரும் எட்டு ஆஹ{திகளைப் பண்ணவேண்டியது.
1. ஓம் பூர்புவஸ்ஸ{வஸ்ஸ்வாஹா
ப்ரஜாபதயே இதம் நமமா
2. 'அநாஜ்ஞாதம் ..... யதாததம்; ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா
3. 'புருஷஸம்மித: ... யதாததம் ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா
4. 'யத்பாகத்ரா: ..... யஜாதி ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா!
5. 'ஓம் பூஸ்ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா
6. 'ஓம் புவஸ்ஸ்வாஹா"
வாயவே இதம் நமமா
7. 'ஓகும் ஸ{வஸ்ஸ்வாஹா"
சூர்யாய இதம் நமமா
8. 'ஓம் பூர்புவஸ்ஸ{வஸ்ஸ்வாஹா"
ப்ரஜாபதயே இதம் நமமா
எல்லா நெய்யையும் இலை வழியாக அக்நியில் சேர்த்து
'ஸர்வம் ஸ்ரீவிஷ்ணவே ஸ்வாஹா1 ஸ்ரீவிஷ்ணவே பரமாத்மநே இதம் நமமா!"
என்று சொல்லி நெய் பாத்திரத்தை இலையுடன் வடக்கே வைக்கவேண்டியது.
து}ஷ்ணீம் அக்நியை ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம்.
இரண்டு இலைகளையும் அக்நியில் சேர்க்கறது.
இரண்டு இலைகளும் கருகியதும் அவற்றை எடுத்து ஹோமசேஷ நெய் சொட்டவிட்டுள்ள பாத்திரத்தில் சேர்க்கவேண்டியது.
அந்த பாத்திரத்துடன் ஒரு தர்ப்ப கூர்ச்சத்தையும் கையில் வைத்துக்கொண்டு பின்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டியது.
அநடுவாகம் அந்வாரபாமஹே ஸ்வஸ்தயே ஸந: இந்த்ரஇவா தேவேப்ய: வஹ்நி:
ஸம்பாரணோபவா இமேஜீவா: விம்ருதை: ஆவவர்திநு அபூது பத்ரா தேவஹ_திந்ந:
அத்யா ப்ராஞ்சகாமா ந்ருதயே ஹஸாயா த்ராகீய: ஆயு: ப்ரதராம் ததாநா: ம்ருத்யோ: பதம்
யோபயந்த: யதைமா த்ராகீய: ஆயு: ப்ரதராம் ததாநா:! ஆப்யாயமாநா: ப்ரஜயா தநேநா சுத்தா: பூதா: பவத
யஜ்ஞியாஸ: " தொன்னை / பாத்திரத்தை வடக்கே வைத்துவிடவேண்டியது.
ஒரு சிறு கருங்கல்லை கையில் வைத்துக்கொண்டு பின்வரும் மந்திரம் சொல்லி
'இமம் ஜீவேப்ய: பரிதிம் ததாமி மாந: அநுகாது அபர: அர்தமேதம் சதம்ஜீவந்து
சரத: புரூசீ: திர: ம்ருத்;யும் தத்மஹே பர்வதேநா!"
என்ற மந்திரம் முடிந்ததும் பின்புறமாக கல்லை தெற்கே எரியவேண்டியது.
பின்வரும் மந்திரம் சொல்லி தொன்னையிலுள்ள இலைக்கருகலை நெய்யில் குழைக்கறது
'இமா: நாரீ: அவிதவா: ஸ{பத்நீ: ஆஞ்ஜநேநா ஸர்பிஷா ஸம்ருஸந்தாம் அநச்ரவ:
அநமீவா: ஸ{சேவா: ஆரோஹந்து ஜநய: யோநிமக்ரே"
பின்வரும் மந்திரம் முடிந்ததும் கர்தாக்களும் பங்காளிகளும் கண்ணுக்கு மேலும் கீழும் ரப்பைகளில்
மோதிர விரல்களால் இட்டுக் கொள்ளவேண்டியது.
'யதாஞ்ஜநம் த்ரைககுதம் ஜாம் ஹிமவதஸ்பரி தேநாம்ருதஸ்யா மூலேநா அராதீ: ஜம்பயாமஸி!"
கொஞ்சம் நெல்லை கையில் எடுத்து வைத்துக்கொண்டு பின்வரும் மந்திரம் முடிந்ததும் எழுந்திருந்து
அதை முளைக்கக்கூடிய இடத்;தில் சேர்த்து அதன்மேல் ஜலம் கொஞ்சம் விடவேண்டியது.
'யதாத்வம் உத்பிநத்ஸி ஒஷதே ப்ருத்வ்யாஅதி ஏவமிமே உத்பிந்தந்து கீர்த்யா யசஸா ப்ரஹ்மவர்ச்சஸேநா"
பங்காளிகள் உட்பட அனைவரும் கழுத்தில் உள்ள மாலையை அவிழ்த்து போட்டுவிட வேண்டியது.
அனைவரும் இப்போது ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளவேண்டியது. காஞ்சீபுரம் மற்றும் வடதமிழ் நாட்டைச்
சேர்ந்தவர்கள் கர்மா பண்ணும் மாப்பிள்ளைக்கு புதிய வேஷ்டி ஓதியிடுவதும் அதை உடுத்திக்கொண்டு
ஆனந்தஹோமம் பண்ணுவதும் சிலர் பழக்கம். (பெரும்பாலும் இந்த பழக்கம் இல்லை) இந்த சாந்திஹோம
அக்நியில் இருந்து தீயெடுத்து தயாராக வைத்துள்ள ராந்தல்/பெட்ரூம் விளக்கை ஏற்றி வைத்து
அடுத்த நாள் வரை அணையாமல் பாதுகாக்கவேண்டியது. இதிலிருந்து அடுத்த ஆனந்த ஹோமத்திற்கு
அக்நி எடுக்கக் கூடாது. ஆனந்த ஹோமம் ஆரம்பிதற்கு முன்னர் இந்த அக்நி முழுவதையும் அப்புறப்படுத்திவிட வேண்டியது.
சங்கல்பம்:- 'ஸர்வேஷாம் ஜ்ஞாதீநாம் மமசா ஆநந்தாவாப்தியர்த்தம் ஆநந்தஹோமம் கரிஷ்யே!"
என்று சங்கல்பம் பண்ணிக்கொண்டு
சாந்தி ஹோமம் போலவே புதிதாக அக்நி ப்ரதிஷ்டை, தர்வீ சம்ஸ்காரம் எல்லாம் பண்ணிக் கொண்டு தூஷ்ணீம்
மந்திரமின்றி ப்ரதக்ஷிணமாகப் பரிஷேசனம் பண்ணறது.
நுனிகளால் ஹோமம் பெரிய இலையை இடதுகையில் வைத்து சிறிய இலையால் 4தரம் நெய் எடுத்துவிட்டுக்கொண்டு
இதுபோல் பின்வரும் இரண்டு ஆவர்த்தி ஹோமங்களைப் பண்ணவேண்டியது.
1. 'ஆநந்தாய ப்ரமோதாயா புநராகாம் ஸ்வாநு க்ருஹாநு அபந: சோசுசது அகம் ஸ்வாஹா"
'அக்நயே ஆனந்தாய இதம் நமமா!"
2. 'நவைதத்ரா கௌரஸவ: புருஷ: பசு: யத்ரேதம் ப்ரஹ்மா க்ரியதே பரிதி: ஜீவநாயகம் அபந:
சோசுசது அகம் ஸ்வாஹா"
'அந்நயே ஆனந்தாய இதம் நமமா"
அபஉபஸ்ப்ருஸ்யா! ப்ராணாநாயம்யா1
'ஸ்ரீபகவ...ம் அஸ்மிநு ஆனந்த ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித மந்த்ர தந்த்ர ஸ்வர வர்ண விதி விபர்யாச
ந்யூந அதிரித்த ப்ராயஸ்ச்சித்தார்த்தம் அநாஜ்ஞாத த்ரையம் ஹோஷ்யாமி"
என்று சங்கல்பம் செய்துகொண்டு பின்வரும் எட்டு ஆஹ{திகளைப் பண்ணவேண்டியது.
1. ஓம் பூர்புவஸ்ஸ{வஸ்ஸ்வாஹா
ப்ரஜாபதயே இதம் நமமா
2. 'அநாஜ்ஞாதம் ..... யதாததம்; ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா
3. 'புருஷஸம்மித: ... யதாததம் ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா
4. 'யத்பாகத்ரா: ..... யஜாதி ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா!
5. 'ஓம் பூஸ்ஸ்வாஹா"
அக்நயே இதம் நமமா
6. 'ஓம் புவஸ்ஸ்வாஹா"
வாயவே இதம் நமமா
7. 'ஓகும் ஸ{வஸ்ஸ்வாஹா"
சூர்யாய இதம் நமமா
8. 'ஓம் பூர்புவஸ்ஸ{வஸ்ஸ்வாஹா"
ப்ரஜாபதயே இதம் நமமா
எல்லா நெய்யையும் இலை வழியாக அக்நியில் சேர்த்து
'ஸர்வம் ஸ்ரீவிஷ்ணவே ஸ்வாஹா1 ஸ்ரீவிஷ்ணவே பரமாத்மநே இதம் நமமா!"
என்று சொல்லி நெய் பாத்திரத்தை இலையுடன் வடக்கே வைக்கவேண்டியது.
து}ஷ்ணீம் அக்நியை ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம்.
இரண்டு இலைகளையும் அக்நியில் சேர்க்கறது.
இரண்டு தர்பங்களை அக்நியில் சேர்த்து
'ஸ்ரீவிஷ்ணவே ஸ்வாஹா - ஸ்ரீவிஷ்ணவே பரமாத்மநே இதம் நமமா"
என்று சொல்லி எழுந்துகொண்டு கைகூப்பி அக்நி உபஸ்தானம் பண்றது.
'அக்நேநயா சுபதாராயே ....விதேமா"
'அக்நயே நம: மந்த்ரஹீநம் ..... க்ருஷ்ணானுஸ்மரணம் பரம்"
ஸேவித்து அபிவாதி பண்றது. உட்கார்ந்துகொள்ளவேண்டியது.
இந்த ஆனந்தஹோம அக்நியில் நெல் சேர்த்து பொரி உண்டாக்கி அதை ஒரு தொன்னையில் சேகரித்து வைக்கவேண்டியது.
ப்ரபூதபலி பண்ணிவைத்த வாத்தியார் தீர்த்தமாடியிருந்தால் வாத்தியாரே புண்ணியாஹம் பண்ணலாம்
அல்லது தீர்த்தமாடிய யாராவது ஒரு வைதீகரைக் கொண்டோ அல்லது கடைசியாக
கர்தாவைக் கொண்டோ புண்யாஹவாசனம் பண்ணவேண்டும்.
சங்கல்பம்:- 'அஸ்மிநு சாவாசௌச க்ருஹசுத்தியர்த்தம் ... கூப சுத்தியர்த்தம், யஜமாநஸ்ய ஆத்ம சுத்தியர்த்தம்
ஸர்வோபகரண சுத்தியர்த்தம் சுத்தியர்த்த புண்யாஹவாசனம் கரிஷ்யே" என்று சங்கல்பித்து
க்ரமப்படி புண்யாஹவாசனம் பண்ணவேண்டியது.
வருண யதாஸ்தானம் ஆனதும் புண்யாஹ ஜலத்தால் பொரித்துவைத்துள்ள பொரியை சிறிது ப்ரோக்ஷித்து
அதை கர்த்தா உட்பட பங்காளிகள் அனைவருக்கும் விநியோகித்து பின்வரும் மந்திரம் முடிந்ததும் சாப்பிடச் செய்யவேண்டியது.
'யவோஸி யவயா அஸ்மது அகா த்வேஷாகும்ஸி"
என்று பொரி சாப்பிடவேண்டியது.
புருஷாள் பெரியவாள் எல்லோரையும் அழைத்து கர்தாக்கள் மற்றும் ஜ்ஞாதிகளையும் அவர்களுடைய பத்திநிகளையும்
வரச்சொல்லி ப்ரோக்ஷிக்கவேண்டியது. பங்காளி வயதில் பெரியவர் ஆனாலும் அவரைக் கொண்டு யாரையும் ப்ரோக்ஷிக்கச்
சொல்லக் கூடாது. அவரைவிட பெரியவர் யாரும் இல்லாவிட்டால் பண்ணி வைக்கும் வாத்தியார் வயதில் சிறியவராயினும்
அவரைக் கொண்டு அனைவரையும் ப்ரோக்ஷிக்கச் சொல்லலாம்.
கர்த்தாக்கள் எழுந்து நின்று கையில் கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டு
'அசேஷே ... ஸ்வீக்ருத்யா"
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: / கோத்ராயா: நாம்நீயா: மம மாது:"
'அதீத ப்ரதமதிநமாரப்யா அத்ய தசமதிந பர்யந்தேஷு அஹரஹஹா க்ருதேஷு ஒளர்த்வ தேஹிக கர்மசு மந்த்ர லோபே
க்ரியா லோபே த்ரவ்ய லோபேசா ஸத்யபி ஸர்வம் யதா சாஸ்த்ர அனுஷ்டிதம் பூயாதிதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹண்ணந்து!"
என்று கேட்க பெரியவாள் வைதீகாள்
'ததாஸ்து யதா சாஸ்த்ர அனுஷ்டிதமஸ்து"
என்று சொல்லவேண்டியது.
பணம் சில்லரை வைதீகாள் மற்றும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் விநியோகம் பண்ண வேண்டியது.
கர்தாக்கள் பங்காளிகள் புண்யாஹவாசனம் பண்ணின சொம்பு, ஏற்றிவைத்த ராந்தல் விளக்கு இவைகளை கையில்
எடுத்துக்கொண்டு ஆத்து வாசலுக்குச் செல்ல வேண்டியது.
வாத்தியார் மற்றும் வைதீகாள் 'ஆஸ{சிசாநோ ....ப்ரதராந்ந ஆயு:" ஸ்வஸ்தி வாசனம் சொல்லிக்கொண்டிருக்கவேண்டியது.
ஆத்து வாசலில் மூன்று இழையில் கோலம் போட்டு வைக்கவேண்டியது.
கோலத்தின் எதிரில் மணை சேர்த்து கிழக்கு முகமாக கர்தாக்கள் மற்றும் பங்காளிகளை மணையில் நிற்க வைத்து தீட்டில்லாத
மூத்த சுமங்கலி யாராவது ஒருவரை அழைத்து குடத்தில் உள்ள தீர்த்தத்தை அவர்கள் காலில் பின்புறமும் நனையும்படி சேர்க்கச்
செய்யறது. அவரோ வேறொரு சுமங்கலியோ ஒருவர் மட்டும் அனைவருக்கும் சேர்த்து ஒரே சுற்று ஹாரத்தி சுற்றி எடுத்து
கோலத்தில் சேர்க்கவேண்டியது.
ஸ்வஸ்தி வாசனம் முடிந்ததும் புண்யாஹ ஜலத்தை ஆத்தில் எல்லா இடத்திலும் ப்ரோக்ஷிக்கச் செய்து பின்னர் கர்தாக்கள்
ஆத்தினுள் சென்று கூடத்தில் ஸேவித்து விட்டு கிழக்கு முகமாக மணையில் உட்காரவேண்டியது.
கூடத்தில் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள Nக்ஷம தண்டுலங்களையும், திருவிளக்கையும், கும்பத்தையும், முகம்பார்க்கும்
கண்ணாடியையும் கர்தாக்கள் பார்க்கவேண்டியது.
தீட்டு சம்பந்தமில்லாத உறவினர்கள் மற்றும் வைஷ்ணவ நண்பர்கள் அண்டைவீட்டார் தீட்டுக்காரர்களான கர்த்தாக்கள்
மற்றும் அவர்கள் பங்காளிகளுக்கும் தங்கள் இல்லத்தில் எல்லாருமாக செலவைப் பகிர்ந்து கொண்டு ததீயாராதனம்
ஏற்பாடு செய்து வைத்து கர்தாக்களையும் பங்காளிகளையும் ததீயாராதனத்திற்கு வரும்படி அழைப்பார்கள்.
இந்த பத்து ததீயாராதனத்திற்கு 'சாரு" என்று பெயர். இக்காலத்தில் தங்கள் இல்லங்களிலேயே பரிசாரகர்களைக்
கொண்டு அல்லது சாவடிகளில் இந்த சாரு பண்ணப்படுவதால் அதற்கு உண்டான செலவை இந்த நேரத்தில்
அவரவர் சக்திக்கும் யுக்திக்கும் தக்கவாறு ஓதியிடுவதே 'சாரு ஸம்பாவனை" யாகும்.
சாரு சம்பாவனை ஓதியிடுபவர்கள் இறந்துபோனவருக்கு என்ன உறவோ அதைத்தான் சொல்லி ஓதியிடவேண்டும்.
இந்த ஸம்பாவனைகளுக்கு வேதபஞ்சாதி எதுவும் சொல்லும் வழக்கமில்லை
'ஸ்ரீமத் வேதமார்க்கப் ப்ரதிஷ்டாபனாச்சார்ய உபய வேதாந்தாச்சார்யராய் எழுந்தருளியிருக்கும்" என்று மட்டும் சொல்லி
'ஸம்பந்தி வாசுதேவாச்சார் ஸ்வாமி சாரு ஸம்பாவனா" என்று சொல்லவேணும்.
பெண்கள் ஸம்பாவனா என்று சொல்கிறார்கள் அப்படி எதுவும் இல்லை. மாறாக பெண்கள் ஸம்பாவனை
அனைத்தும் மாப்பிள்ளைகள் பெயரிலேயே ஓதியிடவேண்டும்.
சாரு ஆனதும் பண்ணி வைத்துள்ள பக்ஷணங்களையெல்லாம் சொல்லி (பேரன்கள் கிடையாது)
பேத்திகள் எல்லாருடைய பெயரையும் சொல்லி
'இந்த பேத்திகள் எல்லாருமாகச் சேர்ந்து இந்த பக்ஷணாதிகளைப் பண்ணி ஸமர்ப்பித்துள்ளார்கள்"
என்னு சொல்லவேண்டியது.
பழைய நாளில் ஏகோதிஷ்டம் மற்றும் ஸபிண்டீகரண ஸோதகும்ப ஸ்வாமிகளை பத்தாம் நாள்
இரவு அப்பம் பொரி கொடுத்து வரிப்பது (ஸ்வாமிகளாக இருக்கும்படி கேட்டுக் கொள்வது) வழக்கம்.
இந்த நாளில் பத்துக்கு வந்த உறவினர்கள் சாரு ஆனதும் கிளம்பி சென்றுவிடுவார்கள் ஆகையால்
அவர்கள் இருக்கும் இந்த நேரத்திலேயே 6 இலைகளில் அப்பம் பொரி வெத்திலை பாக்கு (மற்ற
பக்ஷணங்களிலும் ஒவ்வொன்று வைக்கலாம்) வைத்து எடுத்துக்கொண்டு
ஒத்தன் அல்லது ஏகோதிஷ்டத்தில் (11ம்நாள்) உட்கார ஸம்மதப் படுபவரிடம் கொடுத்து
'நாளைய தினம் அடியேனுடைய தகப்பனாரின் / தாயாரின் ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தில்
தேவரீர் ஸ்வாமியாக எழுந்தருளியிருந்து அனுக்ரஹிக்கவேண்டும்" என்று ப்ரார்த்தித்து
கர்த்தாக்கள் அனைவரும் அவரை ஸேவிக்கவேண்டும்.
அதேபோல் ஸபிண்டீகரண ச்ராத்தத்திற்கு 4 பேரையும்
சோதகும்ப ச்ராத்தத்திற்கு வாத்தியாரையும் அல்லது அவர் நியமிப்பவரையும்
அப்பம் பொரி கொடுத்து ஸேவித்து விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.
சாரு ஓதியிட்டவர்கள் கர்தாக்கள் மற்றும் பங்காளிகளை ததீயாராதனத்திற்கு வரும்படி கூப்பிடவேண்டும்.
இத்துடன் பத்தாம்நாள் காரியங்கள் முடிவடைந்தன.