ஸ்ரீ:
சர்மச்லோகம்
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பரமபதித்தவர் எந்த ஆசார்யனின்
அநுக்ரஹத்தால் அவருக்கு வைகுண்ட ப்ராப்தி ஸாத்யமாயிற்று என்பதையும்
எந்த வருடம், எந்த மாதம், எந்த பக்ஷம், எந்த திதி, எந்த நக்ஷத்திரத்தில்
அன்னாருக்கு இந்த ப்ராப்தம் ஏற்பட்டது என்பதையும் தெரிவிக்கும் ச்லோகத்துடன்
மேற்கொண்டு தசம தினம் கைங்கா்யம் எங்கே நடக்கிறது என்பதையும்
தெரிவித்து உருவாக்கப்படும் தபாலுக்கு சர்மச்லோக கார்டு என்று பெயா்.
பலருக்கு இந்த கார்டு எப்படித் தயாரிப்பது என்பது தெரியாததால்
சில மாதிரிகளை இங்கே வழங்கியுள்ளோம்.
சர்ம ச்லோக கார்டு தயாரிக்க: இறந்ததேதி, நேரம், இறந்தவர் பூர்வீகம், பெயர், தகப்பனார் / கணவர் / மாமனார் பெயர், கோத்ரம், ஆசார்யன், கர்த்தாக்கள் பெயர், நடக்குமிடம், ஆத்து முகவரி, தேiவாயன கார்டுகள் இந்த தகவல்கள் தேவை.
கார்டு வாத்யாருக்கும் ஒன்று அனுப்பவும். பாக்கி கார்டை கிழித்தெறியவேண்டாம்.