ஸ்ரீ:
தஹன ஏற்பாடுகள்
ஏற்பாடுகள்:- தஹனம் செய்யப்படவேண்டிய ஸ்மாசனம் அல்லது நகரமானால் எலக்ட்ரிக் கிரிமட்டோரியம் போன்ற இடத்தில் எங்கு பண்ணவேண்டுமோ அங்கு புக்கிங் செய்வது.
பெருமாள் அறையில் இருந்து காசிஃகங்கை ஜல சொம்புகள், தர்பங்கள், இருந்தால் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்து பெருமாள் அறையைச் சாத்தி வைப்பது.
சவம் குளிப்பாட்டிய ஜலம் செல்ல வழி உள்ள இடத்தில் (முற்காலத்தில் இதற்காகவே ரேழி என்ற இடம் இருந்தது) தெற்கு நுனியாக சில தர்பங்களை(இருந்தால்)
போட்டு அதன் மீது சவத்தை (பாடியை) தெற்கே தலைவைத்து படுக்க வைப்பது.
ஒரு வேளை ப்ராணன் போகிற சமயமாக இருந்தால் பிள்ளை அருகில் இருந்தால் கூடத்தில் விளக்கேற்றி வைத்து தன் மடியில் தகப்பனார் ஃ தாயார்
தலையை வைத்து வலது காதில் திரு மந்திரம், த்வயம், சரமச்லோகம் இவற்றையோ அல்லது நாராயண சப்தம் மட்டுமோ ப்ராணன் போகிறவரை சொல்லிக்கொண்டிருக்கலாம்.
ப்ராணன் போனபின் மேற்சொன்னவை.
வாத்யாருக்கு உடன் தெரிவிக்கவேண்டியது. இறந்தது ஆணா பெண்ணா. என்ன வேதம், என்ன சூத்திரம் என்பது வாத்யாருக்குத் தெரியப்படுத்த வேணும்.
சாமான்களை மொத்தமாக கொண்டுவரும் அநுபவமுள்ள நபரிடம் ஒப்படைத்து சாமான்களை வாங்கி வைக்கவேண்டியது.
அல்லது கீழ்கண்ட பொதுவான சாமான்களை வாங்கி வைக்கச் சொல்லி ஆள் அநுப்பவேண்டியது.
சாமான்கள்:- ஆஸந்தி (பாடை) கட்ட பச்சை மூங்கில் 9 அடி நீளத்தில்-2, பச்சைக் கீத்து-2, குறுக்குக் கொம்புகள்-12,
கப்பாணி கயறு 2 முடி, நெல் பொரி -100 கிராம், நெய்-200 கிராம், எள்-50 கிராம், கற்பூரம் 4 கட்டி, நெருப்புப் பெட்டி-1,
வெத்திலை - 12, பாக்கு 6, பழம் - 2, புஷ்பம் - 2 முழம், திருமண் 1 துண்டு, ஸ்ரீசூர்ணம் - சிறிது, வெள்ளை மல் துணி (கறை இல்லாதது) 2 மீட்டர்,
(சுமங்கலியானால் சிவப்புத் துணிஒன்றரை மீட்டரும், வெள்ளைத் துணி அரை மீட்டரும்), விராட்டி வைதீகத்துக்கு மட்டும் - 8 சுள்ளி 12 துண்டு,
அத்தி இலை ஒரு கொத்து, மீடியம் சைஸ் மண் பானை -1, பெரிய மண் மடக்குகள்-2, சிறிய மடக்குகள்-4, இரண்டு பழைய டவல் (துண்டு) கள்.
வெளியூர், உள்@ர் உறவினர்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டியது.
பங்காளிகளுக்குள் தகராறு சண்டை இருந்தாலும் பக்கத்து அகத்திலாவது சொல்லி தகவல் தெரிவித்துவிடவேண்டும்.
சவம் எடுக்கும்வரை அகத்தில் அடுப்பு மூட்டக் கூடாது. தேவையான காபி ஃ பலகாரம் வெளியில் வாங்கி
பக்கத்து அகத்தில் வைத்துக்கொண்டு தேவையானவர்களுக்குக் கொடுக்கவேண்டியது.
தஹனம் செய்து வந்தபின் சாப்பிட தேவையான சாப்பாடு புண்யாஹம் செய்தபின் தயாரிக்கவேண்டும். அல்லது வெளியில் ஏற்பாடுசெய்துகொள்ளவேண்டும்.
தஹன தின காரியங்கள்:
மரணம் ஆத்துக்கு வெளியில் ஸம்பவித்தாலும், ஆத்திலேயே ஸம்பவித்தாலும் உடனடியாக ஆத்திலுள்ள பெருமாள் அறையில் கங்கை காசி ஜல சொம்பு இருந்தால் அதை எடுத்துக்கொண்டு மற்ற தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு, பெருமாள் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அணைத்துவிட்டு அந்த அறையை மூடிவிடவேண்டியது.
இறந்தவரின் ஸவத்தை ஃ சாPரத்தை வாசல்படிக்கு அருகில் உள்ள அறை (ரேழி) யில் தலையைத் தெற்கே வைத்து தெற்கு வடக்காக முடிந்தவரை வஸ்த்திரங்களை நீக்கிவிட்டு தரையில் கிடத்தவேண்டும்.
கர்த்தாக்கள் அனைவரும் ஆறு, குளம், கிணறு அல்லது பாத்ரூமிலோ நீராடி திருமண் மட்டும் ( 12 அல்லது 1) இட்டுக் கொள்ளவேண்டும். ப்ராசீனாவீதியுடன் கிணற்றடியில் (குழாயில்) ஒரு சொம்பில் தீர்த்தம் இறந்தவரின் பெண்கள் மாட்டுப்பெண்கள் அல்லது ஸஹோதரிகள் தீர்த்தமாடி ஈரப்புடவையுடன் தலையை முடியாமல் குடங்களில் தீர்த்தம் எடுத்து வரவேண்டும். வட தமிழ் நாட்டில் சிலர் ஸ்த்ரீகள் ஜலம் சேர்;க்கும் வழக்கம் இல்லை என்பார்கள். ஸவத்துக்கு ஜலம் சேர்த்து ஸ்நாநம் செய்து வைப்பதே பெரும்பாலோர் வழக்கம். ஸ்தீரிகள் ஆளுக்கொரு குடமாகவோ அல்லது ஒரு குடம் ஜலத்தையே எல்லோரும் பிடித்துக் கொண்டோ கால் மாட்டில் இருந்து தலைமாடுவரை உடம்பு முழுவதும் நன்றாக நனையும்படி நிதானமாக தீர்த்தம் சேர்க்கவேண்டும். முகத்திலும் தீர்த்தம் நன்றாக விட்டு தலை அருகே குடத்தைக் கவிழ்த்து கீழே பரவும் ஜலத்தை எடுத்து குடத்தைப் ப்ரோக்ஷpத்து நிமிர்த்தி வடபாகத்தில் வைக்கவேண்டும்.
கர்த்தாக்கள் ஸவத்தை ப்ரதக்ஷpணமாக சுற்றிக்கொண்டு ஆத்துக்கு வெளியிடத்துக்;கு கர்மாசெய்யச் செல்லவேண்டியது.
இதன் பிறகு மற்றவர்கள் அந்த இடத்தை ஈரமின்றி நன்றாகத் துடைத்துவிட்டு இறந்தவர் பெண்ணானால் பெண்களும், ஆணானால் ஆண்களும் ஸவத்தை நன்றாகத் துடைத்து விட்டு நல்லதாக மாற்று உடை அணிவிக்கவேண்டும். தங்க நகைகள் அணிந்திருந்தால் இப்போதே கழற்றிவிடலாம்.
கர்த்தாக்கள் அனைவரும் நெடுஞ்சாண்கிடையாக உபவீதத்தில் தெற்கு நோக்கிச் ஸேவிக்கவேண்டியது.
குறிப்பு :- இடது தோள் பட்டையில் பூணல் இருப்பது (எப்போதும்போல்) உபவீதம், அதற்கு மாற்றாக வலது தோளில் இருப்பது ப்ராசீனாவீதம் என்று கர்த்தாக்களுக்கு வாத்தியார் சொல்லித்தரவேண்டும்.
பின் ஆசமனம் பண்ணி ஒரு பில் பவித்திரம் அணிந்து கொள்ளவேண்டியது.
எல்லோரும் ப்ராசீனாவீதம் பண்ணிக்கொண்டு நிற்க, பெரியவர் மட்டில் மந்திரம் சொல்ல மற்றவர்கள் மனதிற்குள் சொல்லவேண்டியது.