ஸ்ரீ:

  
ஜீவ ப்ராயச்சித்தம் - தஹன ஏற்பாடுகள்		
        
            
            
                                                தஹனம் செய்யப்படவேண்டிய ஸ்மாசனம் அல்லது நகரமானால் எலக்ட்ரிக் கிரிமட்டோரியம் போன்ற
                                                இடத்தில் எங்கு பண்ணவேண்டுமோ அங்கு புக்கிங் செய்வது.
                                                
பெருமாள் அறையில் இருந்து காசி/கங்கை ஜல சொம்புகள், தர்பங்கள், இருந்தால் எடுத்துக்
                                                    கொண்டு விளக்கை அணைத்து பெருமாள் அறையைச் சாத்தி வைப்பது.
                                                சவம் குளிப்பாட்டிய ஜலம் செல்ல வழி உள்ள இடத்தில் (முற்காலத்தில் இதற்காகவே ரேழி என்ற
                                                    இடம் இருந்தது) தெற்கு நுனியாக சில தர்பங்களை(இருந்தால்) போட்டு அதன் மீது சவத்தை (பாடியை)
                                                    தெற்கே தலைவைத்து படுக்க வைப்பது. 
                                                ஒரு வேளை ப்ராணன் போகிற சமயமாக இருந்தால் பிள்ளை அருகில் இருந்தால் கூடத்தில் விளக்கேற்றி
                                                    வைத்து தன் மடியில் தகப்பனார் / தாயார் தலையை வைத்து வலது காதில் திரு மந்திரம், த்வயம்,
                                                    சரமச்லோகம் இவற்றையோ அல்லது நாராயண சப்தம் மட்டுமோ ப்ராணன் போகிறவரை சொல்லிக்கொண்டிருக்கலாம்.
                                                
                                                ப்ராணன் போனபின் மேற்சொன்னவை. 
                                                வாத்யாருக்கு உடன் தெரிவிக்கவேண்டியது. 
                                                இறந்தது ஆணா பெண்ணா. என்ன வேதம், என்ன சூத்திரம் என்பது வாத்யாருக்குத் தெரியப்படுத்த
                                                    வேணும். 
                                                சாமான்களை மொத்தமாக கொண்டுவரும் அநுபவமுள்ள நபரிடம் ஒப்படைத்து சாமான்களை வாங்கி வைக்கவேண்டியது.
                                                    அல்லது கீழ்கண்ட பொதுவான சாமான்களை வாங்கி வைக்கச் சொல்லி ஆள் அநுப்பவேண்டியது. 
                                            
            
                                                
                                                    
                                                        - ஆஸந்தி (பாடை) கட்ட பச்சை மூங்கில் 9 அடி நீளத்தில்-2, 
                                                        
- பச்சைக் கீத்து-2, 
- குறுக்குக் கொம்புகள்-12, 
- கப்பாணி கயறு 2 முடி, 
- நெல் பொரி -100 கிராம், 
- நெய்-200 கிராம், 
- எள்-50 கிராம், 
- கற்பூரம் 4 கட்டி, 
- நெருப்புப் பெட்டி-1, 
- வெத்திலை - 12, 
- பாக்கு 6, பழம் - 2, 
- புஷ்பம் - 2 முழம், 
- திருமண் 1 துண்டு, ஸ்ரீசூர்ணம் - சிறிது, 
- வெள்ளை மல் துணி (கறை இல்லாதது) 2 மீட்டர், (சுமங்கலியானால்
                                                            சிவப்புத் துணிஒன்றரை மீட்டரும், வெள்ளைத் துணி அரை மீட்டரும்), 
- விராட்டி வைதீகத்துக்கு மட்டும் - 8 
- சுள்ளி 12 துண்டு, 
- அத்தி இலை ஒரு கொத்து, 
- மீடியம் சைஸ் மண் பானை -1, 
- பெரிய மண் மடக்குகள்-2, 
- சிறிய மடக்குகள்-4, 
- இரண்டு பழைய டவல் (துண்டு) கள். 
 
                                            
            
       மிகத் துரிதமாகத் தயரிக்கப்பட்டு வரும் இத் தயாரிப்பில் எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது.
                                                கருத்துப் பிழைகள் இருக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.