ஸ்ரீ:
ஸேவாகாலம் - இயல் - சாற்றுமுறை
ஸ்ரீ:
இயல் ஸேவாகாலம்
பொதுத் தனியன்கள்:
கேஸவாதி க்ருபா அல்லது ராமாநுஜ தயாபாத்ரம் தொடங்கி ...
(பின்வரும் அனைத்து பிரபந்தத்திலும் சாற்றுமறை பாசுரம் கடைசீ இரண்டு நீங்கலாக ஸேவிக்க வேண்டும்)
திருப்பல்லாண்டு
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
மடமானால் அங்கண்ஞாலம், காசையாடை, வாணிலாமுறுவல்
கண்ணிநுண் சிறுத்தாம்பு
திருவாய்மொழி தனியன்கள் ஸேவித்து நிறுத்தி ...
வேதாரம்பம் , மந்த்ர புஷ்பம் அர்ச்சனை
கற்பூர ஹாரத்தி
ப்ரபந்த கோஷ்டி கோயில் திருவாய்மொழி ஆரம்பிக்க
வேத கோஷ்டி உபநிஷத் அல்லது அச்சித்ர அச்வமேத ப்ரச்நங்களைச் சொல்வர்.
நிறையபேர் இருந்தால் ப்ரபந்தத்தைக் கூட நு}று நு}றாகவோ வேறு அளவிலோ பிரித்துக்கொண்டும் சொல்லலாம்.
திருவாய்மொழி முடிந்ததும்
இராமாநுச நு}ற்றந்தாதி
தேசிக ப்ரபந்தத்தில் அடைக்கலப்பத்தில் ஆரம்பித்து
அனைத்துமோ அல்லது குறைந்த பக்ஷம்
அதிகார சங்க்ரஹம், ப்ரபந்தாசாரம், பிள்ளையந்தாதி சொல்லி
பின் பரியட்டம் கட்டி, பரியட்ட ஸம்பாவனை பண்ணி,
கும்பத்தை கர்த்தா கையில் கொடுத்து ஆத்துக்கு வெளியில் அழைத்துச் சென்று இராமாநுச நு}ற்றந்தாதியில் இரட்டித்த பாசுரங்களை ஸேவித்து, பந்துக்கள், நண்பர்கள் கோஷ்டிக்கு இயல் ஸம்பாவனை பண்ணி, ஆழ்வார் கோஷ்டிகளுக்கு கால் அலம்பி விட்டு, கற்பூர ஹாரத்தியின்போது இருப்பிடம் வைகுண்டம் இத்யாதி சாற்றுமறை பாசுரங்களைச் ஸேவித்து பின் கர்த்தாக்களை மணையில் நிறுத்தி ஒரே ஒரு சுமங்கலியைக் கொண்டு பால் சுற்றி, பிடி சுற்றி மூன்று பேர் நீர்,விளக்கு, நீர் சுற்றி பின் ஹாரத்தி, சிதறு தேங்காய் உடைத்து கர்த்தாக்கள் உள்ளே வந்ததும் சாற்றுமறை.