இது ஒரு விரிவான வைதீக ப்ரயோகம் பற்றிய பகுதி. இது சாதாரணமாக வைதீக விஷயங்களையும் அதன்
முக்கியத் துவத்தையும் அறிந்து கொள்பவர்களுக்காக மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வாத்யார்கள்
கிடைக்காத பகுதியில் தாங்களாகவே எல்லாவிதமான வைதீக காரியங்களையும் தாங்களே நடத்திக்கொள்ள
- உதவி.
ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்த 11ம் நாள் பண்ணவேண்டும்.
ஒரு வயது நிறைவு (ஆண்டு நிறைவு) மற்றும் ஷஷ்டியப்த பூர்த்தி ஆகிய வற்றில் செய்யப்படும்.
உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் அங்குரம் எனும் பாலிகை பூஜை செய்யப்படவேண்டும்.
உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் ப்ரதிசரம் என்னும் ரக்ஷாபந்தனம்
பண்ணவேண்டும்.
பெண்ணுக்குகல்யாணத்தன்றும் ஆணுக்கு உபநயனத்தன்றும் (பிறந்த அன்று செய்யவேண்டிய) ஜாதகர்மா
செய்யப்படுகிறது.
பித்ருக்களைஉத்தேசித்து பூர்வ கார்யங்களில் செய்யப்படும் ச்ராத்தம் 9 பேருக்கு தக்ஷpணைகள்
கொடுக்கவேண்டும்.
வைதீக ரீதியாக பெயர் வைக்கும் கர்மா. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும்
செய்யப்படுகிறது.
வைதீக ரீதியாக அன்னம் கொடுப்பது. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும்
செய்யப் படுகிறது.
ஆணுக்கு உபநயனத்துக்கு முன் சிகை வைக்கும் நிகழ்ச்சி. பெண்ணுக்கு சூடா கர்மா என்ற பெயரில்
செய்யப்படுகிறது.
ப்ரஹ்மத்தின் அருகில் அழைத்துச் செல்லுதல். நித்யாநுஷ்டான யோக்யதை பெறுதல். ஆணுக்கு
மட்டும்.
உபநயனமான பையனுக்கு காயத்திரி மந்திர உபதேசம் செய்வது.
விவாஹம் செய்ய முடிவெடுத்த ப்ரும்மச்சாரி தன் ப்ரஹ்மச்சர்யத்தை முடித்துக்கொள்ளும்
நிகழ்ச்சி
விவாஹத்தன்றோ முதல் நாளோ பெண்ணுக்குச் செய்யப்படும் ஜாதகர்ம, நாமகரண, அன்னப்ராசன, சூடாகர்மாக்கள்
நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வைதீக ரீதியாக நடத்தப்படும் கல்யாணம்
.
விவாஹம் முடிந்தவுடன் செய்யப்படுவது வதூ க்ருஹப்ரவேசம். புது வீடு கட்டி குடிபுகுவது
நு}தன க்ருஹ ப்ரவேசம்.
கர்பவதியானவளுக்கு 4ம் மாதத்தில் ஆண் குழந்தை தரிக்க ஹோமம் பண்ணி மூக்குப் பிழிவது.
கர்பவதியானவளுக்கு 6 அல்லது 8ம் மாதத்தில் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வகிடெடுத்து
ப்ராஹ்மணதன்மை ஏற் படுத்துவது.
புதிய மனையில் வீடுகட்ட அஸ்திவாரம் போட நல்ல வாஸ்து உள்ள நாளில் செய்யப்படுவது.
60 வயது முடிந்து 61வது பிறந்த நக்ஷத்திரத்து அன்று அறிந்தம் அறியாமலும் செய்த
பாப காரியங்களால் ஏற்பட்ட அரிஷ்டம் எனப்படும் ஒருவகை தோஷத்தை வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட
நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.
60 வது போலவே 80 முடிந்து 81வது 83வது பிறந்த நக்ஷத்திரத்து அன்றும் வேத மந்திரங்களால்
ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம்
உண்டாகும்.