|
இத்தலைப்பில் அடங்கும்
உப தலைப்புகள் |
விவாஹம் முதல்நாள் நிகழ்ச்சிகள்
மற்றும்
விவாஹம் முஹூர்த்தநாள் நிகழ்ச்சிகள்
படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன.
|
பூர்வம் - சுபகார்யங்கள் |
வைதீக அடிப்படை : இது ஒரு விரிவான
வைதீக ப்ரயோகம் பற்றிய பகுதி. இது சாதாரணமாக வைதீக விஷயங்களையும் அதன் முக்கியத் துவத்தையும்
அறிந்து கொள்பவர்களுக்காக மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வாத்யார்கள் கிடைக்காத பகுதியில்
தாங்களாகவே எல்லாவிதமான வைதீக காரியங்களையும் தாங்களே நடத்திக்கொள்ள - உதவி. |
ப்ரஸவ புண்யாஹம் பீஜதானம்
ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்த 11ம் நாள் பண்ணவேண்டும். |
ஆயுஷ்யஹோமம் ஒரு வயது நிறைவு (ஆண்டு
நிறைவு) மற்றும் ஷஷ்டியப்த பூர்த்தி ஆகிய வற்றில் செய்யப்படும். |
அங்குரம் உபநயனம் மற்றும் விவாஹம்
ஆகிய இரண்டு கர்மாக்களில் அங்குரம் எனும் பாலிகை பூஜை செய்யப்படவேண்டும்.
|
ப்ரதிசரம் உபநயனம் மற்றும்
விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் ப்ரதிசரம் என்னும் ரக்ஷாபந்தனம் பண்ணவேண்டும். |
ஜாதகர்மா பெண்ணுக்குகல்யாணத்தன்றும்
ஆணுக்கு உபநயனத்தன்றும் (பிறந்த அன்று செய்யவேண்டிய) ஜாதகர்மா செய்யப்படுகிறது. |
நாந்தி பித்ருக்களைஉத்தேசித்து
பூர்வ கார்யங்களில் செய்யப்படும் ச்ராத்தம் 9 பேருக்கு தக்ஷpணைகள் கொடுக்கவேண்டும்.
|
நாமகரணம் வைதீக ரீதியாக பெயர் வைக்கும்
கர்மா. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப்படுகிறது.
|
அன்னப்ராசனம் வைதீக ரீதியாக அன்னம்
கொடுப்பது. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப் படுகிறது. |
சௌளம் ஆணுக்கு உபநயனத்துக்கு முன்
சிகை வைக்கும் நிகழ்ச்சி. பெண்ணுக்கு சூடா கர்மா என்ற பெயரில் செய்யப்படுகிறது. |
உபநயனம் ப்ரஹ்மத்தின் அருகில் அழைத்துச்
செல்லுதல். நித்யாநுஷ்டான யோக்யதை பெறுதல். ஆணுக்கு மட்டும். |
ப்ரஹ்மோபதேசம் உபநயனமான பையனுக்கு
காயத்திரி மந்திர உபதேசம் செய்வது. |
அஷ்டவ்ரதம் விவாஹம் செய்ய முடிவெடுத்த
ப்ரும்மச்சாரி தன் ப்ரஹ்மச்சர்யத்தை முடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி |
பெண்-ஜாதகாதி விவாஹத்தன்றோ முதல்
நாளோ பெண்ணுக்குச் செய்யப்படும் ஜாதகர்ம, நாமகரண, அன்னப்ராசன, சூடாகர்மாக்கள் |
விவாஹம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும்
பெண்ணுக்கும் வைதீக ரீதியாக நடத்தப்படும் கல்யாணம் . |
க்ருஹப்ரவேசம் விவாஹம் முடிந்தவுடன்
செய்யப்படுவது வதூ க்ருஹப்ரவேசம். புது வீடு கட்டி குடிபுகுவது நு}தன க்ருஹ ப்ரவேசம். |
பும்ஸவனம் கர்பவதியானவளுக்கு
4ம் மாதத்தில் ஆண் குழந்தை தரிக்க ஹோமம் பண்ணி மூக்குப் பிழிவது. |
ஸீமந்தம் கர்பவதியானவளுக்கு
6 அல்லது 8ம் மாதத்தில் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வகிடெடுத்து ப்ராஹ்மணதன்மை ஏற்
படுத்துவது.
|
மனை முஹூர்த்தம் :- புதிய மனையில்
வீடுகட்ட அஸ்திவாரம் போட நல்ல வாஸ்து உள்ள நாளில் செய்யப்படுவது. |
ஷஷ்டியப்த பூர்த்தி :60
வயது முடிந்து 61வது பிறந்த நக்ஷத்திரத்து அன்று அறிந்தம் அறியாமலும் செய்த பாப
காரியங்களால் ஏற்பட்ட அரிஷ்டம் எனப்படும் ஒருவகை தோஷத்தை வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட
நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். |
சதாபிஷேகம் :
60 வது போலவே 80 முடிந்து 81வது 83வது பிறந்த நக்ஷத்திரத்து அன்றும் வேத மந்திரங்களால்
ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம்
உண்டாகும். |