|
ஸ்ரீ:
நாமகரணம்
தாத்பர்யம் - விளக்கம்:
குழந்தை பிறந்த பதினோராம் நாள் ❝புண்ணியாகவாசனம்". ❝புண்ணியாகவாசனம்" என்பது புண்ணிய மந்திரங்களைச் ஜெபித்தல் என்ற பொருளாகும்.
கலசத்தில் தண்ணீர் அமைத்து மாவிலை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்த கும்பத்திற்கு மந்திரம் ஜெபித்தல், இந்த மந்திரித்த தீர்த்தத்தை வீடு பூராவும் தெளித்து,
எல்லோரும் அத்தீர்தத்தை உட்கொள்ள வேண்டும், இந்தச் சடங்கு, பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய முதலிய நான்கு வர்ணத்தாருக்கும் உண்டு.
குழந்தையின் தாய் தந்தையர், கர்பாசயம் முதலான சுத்திக்கு இந்தச்சடங்கு செய்யப்படுகிறது. பசுவின் பால், தயிர், நெய், கோமூத்ரம், கோமயம் ஆகிய
பசுவிடமிருந்து பெறப்படும் ஐம்பொருட்களையும் மந்திரத்துடன் கலப்பது ❝பஞ்சகவ்யம்" எனப்படும். இதையும் வீட்டிலுள்ள பெற்றோர்களும் மற்றோர்களும் அருந்த வேண்டும்.
இது குடல் சுத்திக்காக ஏற்பட்டதாகும். காளைக்கன்றைக் கொண்டு வந்து ஹோமத்தைச் சுற்றி பிரசவித்த வீட்டினுள் கொண்டுயோய் வெளியிற் கொண்டு வருவார்கள்.
ஜனன காலத்தில் செய்வதைப் போன்று பதினோராம் நாள் புண்யாகவாசனத்தன்றும் நெல் தானம், சர்க்கரை வழங்குதல் முதலானவைகளைச் செய்வார்கள்.
பின்னர் ❝நாமகரணம்" நாமகரணம் என்பது குழந்தைக்குப் பெயரிடுதலாகும், ❝பெயரிடுதல்" பெண் குழந்தைகளுக்கு ஒற்றைப் படையாகவும், ஆண் குழந்தைகளுக்கு
இரட்டைப் படையாகவும் எழுத்துக்கள் அமைந்திருக்க வேண்டுமென்பது ஒரு விதி. குல தெய்வங்கள் பெயர்களையோ தங்கள் முன்னோர்கள் பெயர்களையோ சூட்டுவார்கள்,
நதிகள், மலைகள், மரங்கள், நக்ஷத்திரங்கள் முதலான பெயர்களை சாஸ்திர முறையில் குழந்தைககளுக்குப் பெயரிடக் கூடாதென்று கூறப்பட்டிருக்கிறது.
பெயரிடுதலில் சாஸ்திர ரீதியாக இடும் பெயரே தேவ ஆராதனை, கர்மாக்கள் அனுஷ்டானம் முதலியவைகளில் உபயோகப்படுத்த வேண்டும்.
வேறு பெயர்கள் வழக்கத்தில் வழங்கி வந்தால் அது பழக்கத்திலிருக்குமே யொழிய சாஸ்திர அநுஷ்டானங்களுக்கு அந்தப் பெயரை உபயோகிக்கக் கூடாது.
(தற்காலத்தில் இதுதான் அலுவலகப் பெயர், ரிகார்டில் உள்ளது என்று வைதீகத்தில் கூறுகிறார்கள். நாமகரணத்தின்போது வைக்கப்பட்ட பெயரை உபயோகிக்காமல்
செய்யப்படும் கர்மாக்கள் குறைபாடுடையதாகவே கருதவேண்டும்.) இந்தப் பெயர் பிராமணர்கள் ❝சர்மா" என்றும், க்ஷத்திரியர் ❝வர்மா" என்றும் வைசியர்கள் ❝பாலகன்" என்றும்
பெயரில் தங்கள் நாமத்துடன் இணைத்துக் கொண்டு வழிவழியாக வழிபாடுகளை நடத்துவது சாஸ்திர ஸம்பிரதாயமாகும்.
குழந்தையின் வலது காதில் பெற்றோர்களால் இந்தப் பெயர் ஒதப்படும். பின்னர் எல்லோரும் இந்தப் பெயரில் அழைப்பார்கள்.
|
உபநயனத்திற்கு தேவையான பொருட்களுடன் மேலும்
தயிர், நெய், தேன் அல்லது வெல்லம், குழந்தைக்கு அல்லது பாலகனுக்கு
ஊட்ட தங்கத்தாலான சிறு கரண்டி, அல்லது தங்க வில்லை அல்லது நாணயம்.
ப்ராணாயாமம்: ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் அல்லது ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம்
நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய (அச்வினிநக்ஷத்ரே மேஷராசௌ ஜாதஸ்ய அஸ்ய (மம) குமாரஸ்ய நாமதாஸ்யாவஹ!
என இரண்டு ஆவர்த்தி சொல்லி இடுக்கு தர்ப்பத்தை வடக்கே சேர்க்கவும்.
வலது காதில் விஷ்ணு நாமாவை இரண்டு அல்லது நாலு அக்ஷரமாக பெயரைச் சொல்லவும்.
(ஸ்ரீராம சர்மா) தம்பதிகள் இருவரும் சொல்லவேணும்.
பெயரிலன் லக்ஷணம்: இரண்டு அல்லது நான்கு எழுத்து உள்ளதும், இரண்டு பதங்கள் உள்ளதும்.
அவைகளில் முதல் பதம் பெயர்ச்சொல்லாயும் உத்தரபதம் (அடுத்த பதம்) க்ரியாபதமாயும் (வினைச்சொல்லாயும்),
தீர்க்கமான வர்ணத்துக்கு பிறகு வரும் விஸர்க்கத்தை முடிவில்கொண்டும்,
வர்க்கங்களுடைய மூன்றாம்நான்காம் வர்ணங்கள் ஹகாரம் இவைகளைள ஆதியில் கொண்டதாயும்
நடுவில் அந்தஸ்த்தை எழுத்தாக கொண்டாதாக இருந்தால் விசேஷம்.
ப்ரணாயாமம் செய்து ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் அல்லது ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் நாமகர்மகர்மாங்கம் புண்யாஹவாசனம் கரிஷ்யே
என்று ஸங்கல்பித்து, புண்யாஹவாசனத்தில் “நமகர்ம கர்மணே (ஸ்ரீ ராம)சர்மணே ஸ்வஸ்தி பந்தோ ப்ருவந்து
நாமகால்மகர்மணே ஸ்ரீராம சர்மணே ஆயுஷ்மதேஸ்வஸ்தி என்று மூன்றுதரம் ருத்விக்குகளும் சொல்லவேணும்.
புண்யாஹ தீர்த்தத்தால் ப்ரோக்ஷிக்கிறது.
நாமாதிநாந்திகரணம் புண்யாஹம்
|
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|