|
ஸ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் - அஹோபிலம்.காம் வரலாறு?
|
"ஸ்ரீ வைஷ்ணவ கேந்த்ரம்" என்ற பெயரில் 1992ம் ஆண்டு ஒரு வைதீக ஸேவை ஸ்தாபனம் துவக்கப்பட்டது.
"ஸர்வ கார்ய ஸ்ரீவைஷ்ணவ ஸேவை" - என்ற ச்லோகம் இதன் தாரகமாக கூறப்பட்டது
அதாவது, ஸ்ரீவைஷ்ணவர்களின் இல்லங்களில் நடக்கும், சுப, அசுப, வைதீக மற்றும் லெளகீக காரியங்கள்
எதுவானாலும், செய்யப்பட்ட ஏற்பாடு எதிலாவது தவறு ஏற்பட்டு காரிய விக்னம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானால்
எங்களைக் கூப்பிட்டால் நாங்கள் உடனே தக்க நபர்களுடன் வந்து அந்தக் காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்போம் என்பதே
அதன் உறுதி மொழியாகும். இந்த உறுதியுடன் வைதீக கார்யங்களுக்கு வாத்யார்கள், ஸ்வாமிகள், ப்ரபந்த பாராயணத்திற்கு
அத்யாபகர்கள், வேத பாராயணத்திற்கு வேதவித்வான்கள், சுந்தரகாண்டம், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்திற்குரிய
வித்வான்கள், ஹோமங்கள் பூஜைகள் நடத்திவைக்கத் தேவையான வித்வான்கள், சமையல்காரர்கள், மேளக்காரர்கள்,
தேங்காய் பை தயாரிப்பவர்கள், பத்திரிகைகள் அச்சடிப்பவர்கள், அலங்காரக் கலைஞர்கள், கோலம் போடுகிறவர்கள்,
முறுக்கு முதலிய சிறப்பு பக்ஷணங்கள் செய்பவர்கள், வாழைமரம் முகப்பு கட்டுகிறவர்கள், ஜானவாசம் மற்றும் போக்குவரத்து
வாகனக்காரர்கள், வாழை இலை, தேங்காய், காய்கறி, மளிகை சாமான்கள் சப்ளை செய்பவர்கள் என எல்லா தரப்பாரையும்
ஒரு போன் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம்.
தவிர, மரணமடைந்தவர்களின் முதல் இரண்டு நாள் கர்மாக்களை சிரமமின்றி மிகவும் சிக்கனமாகவும், சிறப்பாகவும்
நடத்திவைக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்து தருவது, மேற்கொண்டு 13ம் நாள்வரை காரியங்கள் செய்ய இடங்கள்,
தளிகைக்காரர்கள், ஸ்வாமிகள் போன்ற ஏற்பாடுகளும், ச்ராத்தங்கள், தர்பணங்களுக்கு வாத்யார்கள், ஸ்வாமிகள்
தக்காருக்குத் தக்கபடி ஏற்பாடு செய்தும் ஸேவை செய்து வருகிறோம். இதற்காக இதுவரை யாரிடமிருந்தும் ஸேவைக்
கட்டணமாக எதுவும் வசூலித்ததில்லை. இன்றுவரை சந்தாவோ, உறுப்பினர் படிவமோ எதுவும் கிடையாது. போன் மூலம்
தங்களை வைஷ்ணவர்கள் என்று சொல்லிக்கொண்டு உதவி கேட்கும் அனைவருக்கும் செய்து வருகிறோம்.
|
ஒரு நாகை்குச் சுமார் (சராசரியாக) ஆறு மணி நேரங்களுக்கும் குறையாமல் உழைத்து இந்த தகவல்களை
காலத்திற்கேற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாளுக்கு நாள் மேம்படுத்தி வந்துகொண்டிருக்கிறேன்.
புதிது புதிதாக வரும் தொழில் நுட்பங்களை விலை மதிப்புள்ள நூல்களை வாங்கிப் படித்தும், பயிற்சி எடுத்துக்
கொண்டும், அதற்கான சாப்ட்வேர்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கும், அவ்வப்போது ஏற்படும் ப்ரச்சினைகளைத்
தீர்த்துக்கொள்வதற்கும் மிகவும் போராடியிருக்கிறேன்.
|
2000 மாவது ஆண்டு முதல் யாகூவில் வைதீகம் என்ற ஒரு மின் குழுவை நடத்தி வருகிறேன். சுமார் ஆயிரம்
உறுப்பினர்களைக் கொண்ட அந்த மின்குழுவின் உறுப்பினர்கள் தினமும் வைதீக சம்பந்தமாகக் கேட்கும் எந்தக்
கேள்விக்கும் சலிப்பின்றி இன்றுவரை உடனுக்குடன் பதில் அளித்து வருகிறேன். இதுவரை சுமார் நான்காயிரம்
கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறேன்.
|
ஒவ்வொரு வருடமும் உபாகர்மாவின்போது (ஆவணியவிட்டத்தின்போது) மட்டும் சுமார் 60 ஆயிரம்பேர்
உலகெங்கும் இருந்து இந்த இணைய தளத்தில் அவ்வப்போது வெளெியிடப்படும் யஜூர் மற்றும் ஸாமவேத
தகவல்களைக் கொண்டு உபாகர்மா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
|
கடந்த 5 வருடங்களாக "பரந்தாமன்" என்ற பெயரில் வருடந்தோறும் சுமார் 25 ஆயிரம் பஞ்சாங்கங்கள் தயாரித்து
இலவசமாக விநியோகம் செய்து வருகிறேன். இதிலும் அடியேனுடைய கைப்பணம் அதிகமாக செலவாகிறது. மற்றும்
அவ்வப்போது ஈமெயில் வழியாக அன்பர்கள் கேட்கும் பஞ்சாங்க உதவி, நாள் பார்த்தல், ஜாதகப் பொருத்தம் பார்த்தல்,
ஜாதகம் கணித்தல் முதலிய அனைத்தையும் இன்றுவரை இலவசமாகவே செய்து வருகிறேன்.
மேலும் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும் அனைத்து திருமண ஜாதக விளம்பரங்களையும், இலவசமாகவே
வெளியிட்டு ஸேவை செய்து வருகிறேன். தாங்கள் மனம் இறங்கி அடியேனுடைய கைங்கர்யத்திற்கு டொனேஷன்
வழங்க இந்தக் காரணங்கள் போதவில்லையென்றால் மேலும் அடியேன் என்ன ஸேவை செய்யவேண்டும் என
தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- தீவளூர் என்.வி.ஸ்ரீநிவாஸ தாஸன்
|
|
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|